Sunday, 11 August 2019

முருகனருள் - வேல் பூசை - மல்லிகை பூ எருக்கம் பூ வகை மாறிய அதிசயம்

ஞான ஸ்கந்தர் ஜீவ நாடி பீடம் குருஜி ஜெகதீஸ்வரன் அய்யாவின் தாள் பணிந்து இந்த பதிவு.

நான், அய்யாவிடம் வேல் பூசை உபதேசம் பெற்றது அனைவரும் அறிவர். மேலும், வேல் பூசை செய்து அதன் படங்களையும் திரை வடிவில் இட்டு உள்ளேன்.

ஆனால் சில நாள் முன்பு வேல் ஐ படம் பிடிக்கவோ, திரை வடிவில் பிரசுரிக்கவோ மனம் ஒப்பவில்லை, கை வரவில்லை.

2 நாள் முன்பு குருஜியிடம் இருந்து செய்தி. வேல் இ திரை வடிவில் பிரசுரிக்க வேண்டாம் என்று.

அய்யா அங்கே நினைத்தவுடனேயே இங்கே அது செயல்படுத்தியாகி விட்டது.

ஆகையால் பூசை செய்யப்படும் வேல் படம் பிடிக்கப்பட மாட்டாது.

##################

கடந்த வெள்ளிக்கிழமை 9 ஆம் தேதி அன்று காலை வேலுக்கு சாற்றப்பட்ட மல்லிகை பூ மாலை, இன்று 12 ஆம் தேதி காலை வரை காய வில்லை. வெள்ளை நிறம் மாறி, எருக்கம் பூ நிறமாக மாறி உள்ளது. நேற்று 11 ஆம் தேதி காலை நல்ல குளிர் இருந்தது. வேல் மந்திரம் ஜெபிக்கும் போது நெற்றியில் வியர்வை பெருகி தரையில் சொட்டியது.

சில விஷயங்கள் நம் அறிவுக்கு எட்டவில்லை ஆனாலும், வேலின் சக்தி , மந்திரத்தின் வலிமை ஆகியவை மேற்க்கூறிய வழிகளில் உணரப்பெருகின்றது.

ஆன்ம வணக்கம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏