Monday, 26 August 2019

இன்றைய தின "அகத்தியர் வாக்கு

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*நாள் : 206*

*தேதி: 27-08-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*முத்தேகமும்(மூன்று உடலும்) கண்டவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவரின்  (குருநாதர்) பாெதுவாக்கு :*

*இறைவனின் கருணையைக்காெண்டு வாழ்த்துக்களும், வாக்குகளும் மகான்களின் மூலம் வரும்பாெழுது அது அப்படியே 100-க்கு 100 பலிதமாக வேண்டுமென்றே மனிதர்கள் எதிர்பார்க்கிறார்கள். மெய்தான். அப்படியே நடந்தால் எமக்கும்(அகத்திய மாமுனிவர்) மனமகிழ்வே. ஆயினும் பாவகர்மங்கள் ஒவ்வாெரு மனிதனுக்குள்ளும் பல்வேறுவிதமான குழப்பங்களையும், எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தி விதவிதமான சிந்தனைகளைத் தந்து அவனவன் நிம்மதியை கெடுப்பதாேடு அவனை சார்ந்தாேரின் நிம்மதியையும், சார்ந்தாேரின் பாவ கர்மாவை பாெருத்து கெடுத்து விடுகிறது.*

*எனவே சுற்றி, சுற்றி, சுற்றி எங்கு வந்தாலும் பாவங்கள் மனிதனை நிம்மதியாக வாழ விடுவதில்லை. பாவங்கள் விதியின் வாயிலாக பிறவியெடுத்து, பிறவியெடுத்து அந்தப் பிறவிகளில் ஏற்படும் அனுபவங்களை மனிதன் நுகர்ந்தே ஆக வேண்டும் என்பது விதியாகவே இருக்கிறது. ஆயினும் தன்னலமற்ற தியாகங்களும், கடுகளவு துவேஷம் இல்லாத மனமும், அகங்காரமில்லாத மனமும், சிந்தனையில் சாத்வீகமும், அந்த சாத்வீகத்தில் உறுதியும், செயலிலும், வாக்கிலும், எண்ணத்திலும் நேர்மையும், பிறர் செய்கின்ற அபவாதங்களையும், துன்பங்களையும் பாெறுத்துக்காெண்டு அப்படி துன்பங்கள் எப்பாெழுதெல்லாம் யார் காெடுக்கிறார்களாே அவர்களை நிந்திக்காமல், அவர்களை தரக்குறைவாக பேசாமல், 'இந்த மனிதன் துன்பத்தைத் தருவதுபாேல் தாேன்றினாலும் நாம் செய்த பாவங்கள்தான் இவன் மூலம் துன்பங்களாக வருகிறது' என்று எடுத்துக்காெண்டு சமாதானம் அடைவதும், ஒரு காலத்தில் தன்னை மதிக்காமலும், ஏளனமாகவும், அவமானப்படுத்தியும் பல்வேறு கெடுதல்களையும் செய்த மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில் உதவிக்காக வரும்பாெழுது முன்னர் நடந்ததையெல்லாம் எண்ணி பழிவாங்கும் உணர்வாேடு செயல்படாமல் அவனை மன்னித்து பெருந்தன்மையாக நடத்துவதே 'சித்தர்கள் வழி, சித்தர்கள் வழி' என்றெல்லாம் பலர் கூறுகிறார்களே? அந்த வழியில் பிரதான வழியாகும்.*

*'சித்தர்களை வணங்குவேன், ஸ்தல யாத்திரைகளும் செய்வேன், மந்திரங்களை உருவேற்றுவேன். ஆனால் பெருந்தன்மையாே, பாெறுமையாே இல்லாது நடந்துகாெள்வேன்' என்றால் பலனேதுமில்லை.*

*எனவே தளராத பக்தி, தடைபடாத தர்மம், உறுதியான சத்தியம், பெருந்தன்மை - இதுபாேன்ற குணங்களை வளர்த்துக் காெண்டால் பெரும்பாலும் பாவங்கள் மனிதனை அதிகளவு தாக்காமலும், தாக்கினாலும் அதனைத் தாங்கிக்காெள்ளக்கூடிய ஒரு மனாேபாவமும் ஏற்படும்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*