நான் 17
வருடங்களாக என்னுடைய யமஹா இரு சக்கர வாகனத்தை ஒட்டி வருகிறேன் . இது வரை எங்கேயும்
எப்போதும் வண்டியை உதைத்தவுடனே இயக்கத்திற்கு வரும் . இந்த விஷயத்தை பொறுத்த வரை எந்த ஒரு முறை கூட கஷ்டம்
கொடுத்ததில்லை . ஒரு மாதம் கூட சும்மா வே நிறுத்தி இருந்து விட்டு பின்பு
பயன்படுத்தினால் கூட ஒரே முயற்சியில் இயங்க ஆரம்பித்துவிடும் .
இப்படி
இருக்கையில் அன்று வியாழக்கிழமை 08-08-2019 காலை அலுவலகத்துக்கு வாகனத்தில் புறப்பட்டு சென்று
நிறுத்தி விட்டு மாலை சுமார் 7:30 மணி அளவில் வீடு திரும்ப வாகனத்தை இயக்கிய பொது - அதாவது
கிக்கரை உதைத்த பொது அது engine
dead என்று கூறுவார்கள் அது போல இன்ஜின் இயங்குவதற்கான எந்த ஓரு சிறு அறிகுறியும் தென்படவில்லை - சுமார் 30
நிமிடம் விடாமல் 100 முறை முயற்சித்தும் ஒரு சிறு அளவு கூட இயங்கவே இல்லை .
என்னுடைய 17 வருட அனுபவத்தில் எனது வாகனம் இவ்வாறு ஆனதே இல்லை .
அன்றைக்கு
08-08-2019 பார்த்து , எங்களால் ஊரான கோவையில் அதிக மழை , விடாத மழை , சாலைகள் எங்கும் பெரு வெள்ளம் பல கீழ் நிலை
பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி , வாகனங்கள் மொத்த நகரம் முழுவதும் அனைத்து
சாலைகளிலும் செல்ல முடியாமல் பல மைல் தூரம் சிக்குண்டு நின்று கொண்டிருந்தன - இந்த
நிலையில் வாடகை கார், ஆட்டோ கைபேசி உள்ள செயலியின் மூலம் பார்க்கும்
பொது 1km வாடகை சுமார் 60 ரூபாய் காட்டியது , அதுவும் நாம் தொகையை ஒப்பு கொண்டாலும் கூட வாகனம் எதுவம் செயலியில் நமக்காக
ஒதுக்கப்படவில்லை . இப்படியே மணி இரவு 8 ஆனது ரோட்டில் நின்று பார்த்தாலும் எந்த
ஆட்டோவும் வரவில்லை , ஆட்டோ ஸ்டாண்டில் சென்று பார்த்தாலும் ஆட்டோ
கிடைக்கவில்லை - கையில் இரு பைகள்,
ஒரு கையில் கணினி, ஒரு கையில் லன்ச் பாக்ஸ் உடன் பேருந்துக்காக காத்திருந்து 3 மணி நேரம் வாகன
நெரிசலில் சிக்கி சுமார் 10 மணிக்கு வீடு வந்தடைந்தேன்.
என்னால் என்னுடைய
17 வருட வயதான வாகனம் பொய்த்ததை நம்பவே முடியவில்லை இறைவனை கேட்டேன் - ஏன் எனக்கு இந்த சோதனையை கொடுத்தாய்.
மறு நாள் ஒரு வாடகை கார் பிடித்து காலை மீண்டும்
அலுவலகம் சென்று அங்கு உள்ளவர்களிடம் விசாரித்து, ஒரு வாகன பழுது
சரி செய்பவரை தொடர்பு கொண்டு அழைத்தேன் அவரோ 12மணிக்கு வருவதாக சொன்னார் , பின்னர் 2 மணிக்கு வருவதாக சொன்னார் - வரவில்லை, பின்பு 4 மணிக்கு
வருவதாக சொன்னார் - வரவில்லை , வேலை செய்பவர்களை அழைத்து சென்று அவர்கள்
மெக்கானிக் கடைக்கு சென்று நேரில் சென்று கூட்டி கொண்டு வரலாம் என்றால் கூட வேலை செய்பவர்கள் வரவில்லை. 4 மணிக்கு அவனை
மீண்டும் அழைத்தால் தோலை பேசியை எடுக்கவே இல்லை - என்ன செய்வது என்று புரியவில்லை
- உள்ளே இருந்து உத்தரவு - செல்,சென்று வண்டியை
இப்போது இயக்கிப்பார் - நானும் வாகனம் நிற்கும் இடத்துக்கு சென்று கொஞ்சம் கூட நம்பிக்கையே
இல்லாமல் வண்டியை இயக்கி பார்த்ததில் முதல் முயற்சியிலேயே இயங்க ஆரம்பித்தது -
நேற்று இரவு முழுவதும் மழை, இன்று 10/08/2019, காலை மழை - வெய்யிலே இல்லை , மதியம் மழை -
எவ்வாறு வாகன பழுது சரியாகி இருக்கும் என்று தெரியவில்லை . முதலாவதாக நேற்று
வாகனத்தில் பெட்ரோல் இருந்தும் என்ஜினுக்கு spaark plug மூலம் எந்த ஒரு மின்சாரமும் கிடைக்கவில்லை -
என்றால் அந்த spaark plug பழுதடைந்தால் புதிதாக வாங்கி சரி செய்ய
வேண்டும் - செய்யாமல் எவ்வாறு இயங்கியது - அது நடக்காத ஒன்று - நன்றாக எந்த
சிக்கலும் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கும் வண்டி திடீரென்று இவ்வாறு பழுதடைய
வாய்ப்பே இல்லை - பழு ஆனதை நான் இன்னமும் நம்ப வில்லை - அதிசியம் என்னவென்றால் , மறு நாள் - என்று பழுதானது போல எந்த
ஒரு அறிகுறியும் இல்லை - நான் நன்றாக தானே
உள்ளேன் என்னை ஏன் சோதனை செய்து பார்க்கிறீர்கள் என்று கூறுமாறு வாகனம் மிக சரியாக
- என்று ஒன்றுமே நடவாதது போல இயங்குகிறது
- இது எங்கனம் சாத்தியம் - சரி - வழக்கமாக ஒரு 3-4 மெக்கானிக்குகள்
தொலைபேசியில் அழைத்தால் உடனே வந்து சரி செய்து தருவார்கள் - அவர்கள் வர
முடியவில்லை - ஏதோ ஒன்று தடுத்தது போல
இருந்தது - அது எதற்க்காக - கூட வேலை செய்பவர்கள் வியந்தார்கள் -
எப்போதும் இந்த மெக்கானிக்குகள் அழைத்தால் உடனேயே வருவார்களே , இன்று என் வரவில்லை என்று வியப்பு தெரிவித்தார்கள் - சரி மெக்கானிக்கை தான் வர
வவிடவில்லை - யார் எனக்கு அந்த எண்ணத்தை கொடுத்து - சென்று வாகனத்திற் இப்போது
இயக்கி இயங்குகிறதா என்று சரி பார்க்கவும் - என்று உரைத்தது - இது எல்லாமே ஒரு
கோர்வையாக நடப்பது போலவே தோன்றுகிறது - எல்லாவற்றையும் சேர்த்து வைத்து பார்க்கும்
போது என் குருவானவர் எனக்கு ஏதோ வாகனம் மூலம் ஆபத்து நேரிடும் என்று அறிந்து -
வாகனத்தை இயக்க விடாமல் தடுத்து - பயணியர் பேருந்தில் பயணிக்க வைத்து - மறு நாள்
கண்டம் தாண்டியவுடன் வாகனத்தை விடுவித்து , மெக்கானிக்
வேலையே தேவை இல்லை என்று தடுத்தது ,
வாகனத்தை இயக்கு என்று
உத்தரவு இட்டது எல்லாமே ஒரு கோர்வையாக பார்க்கும் போது புரிகிறது -
அதவாது -
மனுஷனுங்க கஷ்டம் வந்தா கஷ்டத்தை சொல்லி சாமிகிட்ட கதறி அழைத்து - உனக்கு காது
இல்லையா - கண்ணு இல்லையா - என்ன பார்க்க
மாட்டாயா - என்றெல்லாம் முறையிட்டு,
ஒரு சில பேருக்கு தான்
அந்த சாமி அருள் கொடுப்பாரு - ஆனா கஷ்டம் வர்றதுக்கு முன்னாலேயே - கஷ்டம் என்ன
ன்னு நமக்கு தெரியுறதுக்கு முன்னாலேயே - அந்த கஷ்டத்தை வர விடாம தடுத்து நிறுத்தி
- என்ன நடந்தது ன்னு நமக்கு புரிய கூட இல்லாம - நம்மள காப்பாத்தும் ஒரே கடவுள்
கந்தவேள் சீடனாகிய அகத்திய மாமுனி எம் குருநாதர் அல்லால் வேறு எவரால் இந்த வண்ணம்
அனுகிரஹிக்க இயலும் - அதுவும் சும்மா இல்ல - முன்னாடியே ஜீவ நாடியில் சொல்லீறாரு
- நான் எப்போதும் உன் அருகில் அல்ல,
உன்னுள் இருந்து உன்னை
காப்பேன் - எந்த கவலையும் கொள்ளாதே - நான் இருக்கிறேன் - நம்பிக்கையுடன் இரு -
ன்னு சொல்லி - அத செஞ்சும் காட்டுபவர் எம் குருநாதர் அகத்தியர் - இன்னைக்கு
வரைக்கும் என் பைக்கில் எந்த ரிப்பேரும் இலை ஒன்னும் இல்ல - இப்ப வரைக்கும்
எங்கேயும் நிக்கல - இன்னமும் மழைல நனைஞ்சு கிட்டு தான் இருக்கு - ஆனா ஸ்டார்டிங்
ட்ரபிள் வரவே இல்லை - தானா பிரச்சனை வந்து தானா சரியாகிறது கண்டிப்பா தற்செயல்
இல்லை ன்னு கூர்ந்து கவனித்து பார்த்தா நல்ல விளங்கும் - இது எது மாதிரி ன்னா
கடவுள் இருக்காரு இருக்காரு ன்னு கூர்ந்து கவனம் குவித்து பார்த்தால்
வேண்டினால் நினைத்தால் கடவுள் இருப்பாரு -
டேய், நான் எப்போவுமே ஒன் கூட தானடா இருக்கேன் ன்னு
புரியும் - ஆனா நாத்திகம் பேசுறவன்குளுக்கு அது வெறும் கல்லாக , மூட நம்பிக்கையாக பகுத்தறிவு இல்லாத செயலாக தெரியும் - கடவுளை கும்பிடலீனா
யாருக்கு நட்டம் - கடவுளுக்கா ?
- கிடையவே கிடையாது - கோவில்களும் சிலைகளும் நம்மை கடவுளுடனே
இணைச்சுக்கறதுக்கு தானே ஒழிய - கடவுளுக்கு நம்மாலே ஆக வேண்டியது ஒன்றுமே இல்லை -
எல்லையற்ற கருணை கொண்டவர் கடவுள் - எல்லையற்ற ஆற்றல் கொண்டவர் கடவுள் - அதை நமது
சின்ன அறிவாலே புரிஞ்சுக்க முடியாது .
அனுபவித்து
எழுதியவர்
தி. இரா.
சந்தானம்
கோவை
Ph.9176012104
10.08.2019