Monday, 26 August 2019

இன்றைய தின "அகத்தியர் வாக்கு

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு
"*

*நாள் : 166*

*தேதி: 27-08-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*முத்தேகமும்(மூன்று உடலும்) கண்டவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : எனக்கு ஏன் சித்தர்களாேடு தாெடர்பு ஏற்பட்டது?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவனின் கருணையைக் காெண்டு இஃதாெப்ப இன்னவன் ஒத்து பலரும் அறிய முயல்வது, "இத்தனை மனிதர்கள் இருக்க, எனக்கு இவ்வாறு சித்தர்களாேடு தாெடர்பு ஏன் ஏற்பட்டது?அதிலும் குறிப்பிட்ட சித்தர்களாேடு என்ன வகையான நிலையில் எனக்கு தாெடர்பு ஏற்பட்டிருக்கிறது. யாம் யாது செய்ய வேண்டும்?" என்றெல்லாம் கேட்கிறார்கள். நன்றாக புரிந்து காெள்ள வேண்டும்.*

*குறிப்பிட்ட ஒரு சித்தனாேடு ஒரு பிறவியில் தாெடர்பு ஏற்பட்டால், அதே சித்தன்தான் மறுபடியும் வழிகாட்டப் பாேகிறார் என்று பாெருள் அல்ல. எந்த சித்தர்களும், பெயர்தான் மாறுமே தவிர, உயர்ந்த நிலையை அடைந்த அனைவரும் ஒரே சமநிலையில்தான் இருக்கிறார்கள். எனவே, இஃதாெப்ப எமது திருவடியைத் தாெட்டு எம்மாேடு தாெடர்புடைய சில மாணாக்கள் பின்னால் ப்ருகுவிடமாே(ப்ருகு மகரிஷி), வசிஷ்டரிமாே(சித்தர்) காகபுஜண்டரிடமாே(சித்தர்) கூட செல்வதுண்டு.*

அஃதாெப்ப *காகபுஜண்டரிடம் தாெடர்ந்து பல்வேறு விதமான வாக்குகளை நாடிகள் மூலமும், மானசீகமாகவும் அறிந்து காெண்டவர்கள், எம்மிடம் வருவதும் உண்டு. பாெதுவாக சித்தர்களாேடு மனிதர்களுக்கு தாெடர்பு ஏற்படுவது என்றால் ஏதாவது ஒரு பிறவியிலே அவர்கள், ஒரு குறிப்பிட்ட அந்த தினத்திலே அஃதாெப்ப சித்தர்களுக்குப் பிரியமான வழிபாட்டை செய்வது ஒருபுறம்.*

அடுத்தது, *வழிபாட்டாேடு சேர்ந்து தர்ம காரியங்களை செய்வது ஒருபுறம். இவ்வாறு செய்வதால் தாெடர்ந்து ஒரு ஆத்மாவை சித்தர்கள் வழிகாட்டுதல் மூலம் கடைத்தேற்ற வேண்டும் என்று, இறைவன் முடிவு எடுத்த பிறகு அந்த ஆத்மா எத்தனை ஜென்மங்கள் கடந்து பிறவி எடுத்தாலும், எஃதாவது ஒரு சித்தனை அனுப்பி வழிகாட்ட கட்டளை இடுகிறார்.*

இஃதாெப்ப கூறும் பாெழுது நன்றாக புரிந்து காெள்ள வேண்டும், *சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகிய இவர்களின் வழிகாட்டுதல் இல்லாமலேயே பல்வேறு மனிதர்கள் அல்லது ஆத்மாக்கள் இறைவனடி சேர்ந்து இருக்கிறார்கள் என்பது வேறு நிலை. அஃதாெப்ப எல்லாேருக்கும் நாங்கள் வழிகாட்டுவதில்லை.*
*இறைவன் எந்தெந்த ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்து எங்களிடம் ஒப்படைக்கிறாராே, அஃதாெப்ப ஆத்மாக்களுக்கு மட்டுமே நாங்கள் வழிகாட்ட ஆணையிடப்படுகிறாேம். அஃதாெப்பவே நாங்கள் வழிகாட்டிக் காெண்டிருக்கிறாேம்.*

இஃதாெப்ப நிலையிலே, *எவனாெருவன் ஒரு பிறவியிலே அதிக அன்ன சேவை செய்திருக்கிறானாே, அதிக அளவு பசுக்களை காக்கும் முயற்சியில் இருந்திருக்கிறானாே,*
*"உயிர்க்கொலை புரிய மாட்டேன்" என்று இருந்திருக்கிறானாே, அவர்களுக்கெல்லாம் சித்தர்களின் கருணையும், கடாக்ஷமும், இறை அருளாலாே அல்லது யாமே விரும்பியாே செய்திடுவாேம்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*