Tuesday 13 December 2022

குடுமியான்மலை

 #குடுமியான்மலை புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில் இருக்கும் ஒரு சிற்றூர். இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில்தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில்வளாகம் அமைந்துள்ளது. மலையடிவாரத்திலுள்ள பெரிய கிணற்றில் ஒரு பொருளைப் போட்டால் மலைக்கு மறுபுறம் உள்ள கிணற்றில் அதை எடுக்கலாம் என்ற கதை இந்தப் பகுதியில் நிலவுகிறது. இதை அண்ணன் #கிணறு, தம்பி கிணறு என்கிறார்கள்.


இங்குள்ள இறைவனை #சிகாநாதர் என்கிறார்கள். சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டான இக்கோயிலில் நுழைந்ததில் இருந்து கருவறை செல்லும் வரை எங்கும் சிலைமயம் தான். அனைத்து சிலைகளும் கலை நுட்பம் உடையவை என்பதால் மத்திய தொல்பொருள்துறை இக்கோயிலை தன்வசப்படுத்தியுள்ளது.


கண்ணில் பீதியை ஏற்படுத்தும் அதிபயங்கர #நரசிம்மர், அதே கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் #ரதி_மன்மதன் சிலைகள், #பதஞ்சலி முனிவர், #உலகளந்த விஷ்ணு, #அகோர_வீரபத்திரர், பத்துதலை #ராவணன், #மோகினி அவதார #விஷ்ணு, வினை தீர்க்கும் #விநாயகர் என எண்ணிலங்கா எழில் மிகு சிற்பங்களை பார்த்து ரசிக்கலாம்..!!


அமைவிடம்: #புதுக்கோட்டை #திருச்சி சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் #விராலிமலை வழியாக இந்த சிற்றூரை சென்றடையலாம்.


Kudumiyamalai

https://maps.app.goo.gl/Wi49bCfCuYVUjaHF6

No comments:

Post a Comment