Friday 2 December 2022

அனுமன் திருவிளையாடல்

 *🛕பாபர் மசூதிக்குள் 1949ல் ஹிந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்தரவை 1986ல் பிறப்பித்த பைஸாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991ல் தனது சுய சரிதையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:*


*பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு ஒன்று அமர்ந்திருந்தது.* *அன்றைய தினம் தீர்ப்பு என்ன? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைஸாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர்.* 🛕 *அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது* 


*பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும் போலீஸ் கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர்.* 


*பார்த்தால்,*

*எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு.*


*எனக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்த குரங்கு என்பதை உணர்ந்துகொண்டு அதனை வணங்கினேன்.”*


*அயோத்தி ராமன்* *அனைவருக்கும் இனியவன் என்ற கட்டுரை*

*சுஜாதா தேசிகன் எழுதியது.*


*"ஜெய் ஆஞ்சநேயா!"*


*(‘வலம்’ நவம்பர் 2017 இதழில்)*

No comments:

Post a Comment