Sunday 11 December 2022

வரகூர் வெங்கடேசபெருமாள் திருக்கோயில் திவ்ய தரிசனம்.

 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉


🌞வரகூர் வெங்கடேசபெருமாள் திருக்கோயில் திவ்ய தரிசனம்.


⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️


🌞வயிற்று வலி குணமடைவதற்கு அற்புதமான ஸ்தலம்.


🌞புத்திரபாக்கியம் பாக்கியம் இல்லையே! என்று ஏங்குவோர், வழிபட வேண்டிய திருத்தலம். 


🌞தம்பதிகள் இணைபிரியாமல் ஒன்றாக வளம் பெற்று வாழ்வதற்கு அருளும் தலம்


🌞கல்யாணம் ஆகவில்லை என்ற கவலையால் கண்ணீர் விடுபவர்களுக்கு விரைவிலேயே திருமண பாக்கியத்தை பெற்று தரும் தலம்.


🌞நோய் இல்லாத ஆயுள் ஆரோக்கியம், பெற்று தரும் திருத்தலம்.


🌞வாஸ்து தோஷம் நீக்கும் திருத்தலம்


💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠


🌞பாலிற் கிடந்ததுவும் பண் டரங்கம் மேயதுவும்

ஆலில் துயின்றதும் ஆரறிவார் - ஞாலத்

தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளைஅப்பில்

அருபொருளை யானறிந்த வாறு?


🌞தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்

ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்

பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்

அருள் முடிவது ஆழியான் பால் 


🌞திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்.


♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️


🌞தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் 23 கிமீ  தொலைவு கடந்ததும் வரகூர் வேங்கடேசப் பெருமாள், கோயில் எனும் நுழைவாசல் வளைவினைப் பார்க்கலாம்.


🌞தஞ்சை மாவட்டத்தில் பசுமை நிரம்பிய கிராமம் வரகூர்.

இந்த ஸ்தலத்திற்கு வராஹபுரி என்று பெயர்.வரகூரின் புராதனப் பெயர் ‘பூபதி ராஜபுரம்’.


🌞க்ருஷ்ண லீலா தரங்கிணி என்ற சங்கீத நூலை இயற்றிய மஹான் நாராயணத்தீர்த்தரோடு தொடர்பு உடைய ஊர் இது.


🌞மகாவிஷ்ணு, தாமாகத்தோன்றி அருள்புரிந்த தலங்கள் சுயம்வியக்த சேஷ்த்திரம் எனப்படும்.  

அவ்வகையில் மகாவிஷ்ணு இங்கு லக்ஷ்மி நாராயணராக எழுந்தருளினார்.


🌞அற்புதமான கோயிலில் அழகுற வீற்றிருக்கிறார் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள். மேலும் ஶ்ரீநிவாசர், ஸ்ரீவராகமூர்த்தி, ஸ்ரீகண்ணபிரான் என மூன்று திருக்கோலங்களில் இங்கே அருள்புரிகிறார் மாயக்கண்ணன்.


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


🌞மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள். இடது மடியில் மகாலட்சுமித் தாயாரை அமர்த்திக்கொண்டு, சேவை தருகிறார். 


🌞உத்ஸவரின் திருநாமம் - 

ஸ்ரீவெங்கடேசப் பெருமாள். ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் அருள்கிறார். 


🌞உத்ஸவரே பிரசித்தம் என்பதால், வெங்கடேச பெருமாள் திருக்கோயில் என்றே அழைக்கின்றனர் பக்தர்கள்


🌞இங்குள்ள ஆலய மூலவரை, அப்பொழுது அந்தப் பகுதியை ஆண்டுவந்த பராந்தகச் சோழன் நிர்மாணித்திருக்கிறார்.

 

🌞மூலவரும் உத்ஸவரும் சிற்ப முறைப்படி, சோழர் காலத்து திரு உருவங்களாகும். கருடாழ்வாரும், ஆஞ்சனேயரும் இருக்கிறார்கள். தனித் தாயார் சந்நிதி கிடையாது. சந்நிதி மேற்புறம் விதானத்தில் பச்சை வண்ணராக ஆஞ்சனேயர் காட்சி தருகிறார். கோபுரத்தில் தசாவதார சிற்பங்கள் உள்ளன.


✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️


🌞ஆந்திர தேசத்திலிருந்து வந்து பெருமாளை வழிப்பட்டுப் பெரும் பேறு பெற்றவர் ஸ்ரீநாராயண தீர்த்த ஸ்வாமிகள் ஆவார். இசையில் பாண்டித்யம் பெற்றிருந்தார். அதேபோல், நாட்டியத்தையும் அறிந்தவராக இருந்தார். ஸ்ரீமத் பாகவத்தை எல்லோருக்கும் போதித்து வந்தார்.


🌞இல்லறத்தை விட்டு துறவறம் மேற்கொண்டார். அத்வைத துறவி நாராயண தீர்த்தர், தீவிர கிருஷ்ண பக்தர். தன் வயிற்று வலி தீர அவர் பல புண்ணியத் தலங்களுக்கு  யாத்திரை சென்றார்.


🌞திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார்.அங்கே, திருப்பதி தலத்தில், ‘திருவையாறுக்கு அருகில் பூபதிராஜபுரத்துக்குச் செல்வாயாக! உன் வயிற்று வலி தீரும்’ என என அசரீரி கேட்டது.


🌞ஸ்ரீநாராயண தீர்த்தர்,ஶ்ரீகிருஷ்ண பரமாத்மாவை உள்ளம் உருகிப் மனதில் பிரார்த்தனை செய்து கொண்டே மெலட்டூர் கிராமத்துக்கு வந்தார். 


🌞ஸ்ரீநாராயண தீர்த்தர் தஞ்சை நாயக்க மன்னர்களால் பெரிதும் ஆதரிக்கப் பெற்று மெலட்டூரில் தங்கியிருந்தார்.


🌞பெருமைக்குரிய வரகூர் திருத்தலத்திற்கு, 

மெலட்டூரிலிருந்து ஸ்ரீநாராயண தீர்த்த சுவாமிகள் தல யாத்திரையாகப் புறப்பட்டு, காவிரி ஆற்றின் கிளையான குடமுருட்டி ஆற்றின் தென்கரையாக வரும் பொழுது, நடுக்காவேரி என்ற இடத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் இரவு தங்கினார். 


🌞கடுமையான வயிற்று வலியால் மேலும் நடந்து செல்ல முடியவில்லை. இனி எந்தப் பக்கம் செல்வது, எப்படிச் செல்வது என்று தெரியவில்லை. அவருக்கு. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று தோன்ற, சற்றே கண்ணயர்ந்தார்.


💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕


🌞கடும் வயிற்று வலியினால் தீர்த்தர் அவதிப்பட்டபோது அவருக்கு கனவில் ஒரு வேதியர் தோன்றி "ஏ.. தீர்த்தா! காலையில் நீ  விழித்த உடன் உன் முன் தோன்றும் விலங்கினை தொடர்ந்து செல்!




🌞அது மறைந்த இடத்தில் தங்கி கண்ணனை பூஜிப்பாயாக!  உன் தீராத வயிற்றுவலி நீங்கிவிடும்'  என்று கூறி மறைந்தார். 


🌞அதிகாலையில் விழித்தவுடன் கனவில் கண்டபடி தன் முன்னே காணப்பட்ட வெண்ணிற வராஹத்தை (பன்றியை) ஸ்ரீநாராயண தீர்த்தர் பின் டர்ந்து சென்று பயணித்தார்.


🌞வராஹம் நடுக்காவேரிக்கு 5 கி.மீ.தூரத்தில் மேற்கே உள்ள வரகூர் வந்தடைந்து அக்ரஹாரத்தின் மத்தியில் உள்ள ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோயிலுக்குள் நுழைந்து மறைந்தது.அன்று முதல் ஊர் பெயர் வராஹபுரி என்று மாறி,பின்பு மருவி வரகூர் என்று,இன்று அறியபடுகிறது


🌞சிலிர்த்துப் போன நாராயண தீர்த்தர்,அக்கோயிலின் பெருமையை உணர்ந்து அங்கேயே தங்க, அவர் முன் ஸ்ரீநிவாஸப் பெருமான் கண்ணபிரானாகக் காட்சியளித்தார்.


🌞வராஹ ரூபத்தில் வந்து தனக்கு வழிகாட்டியது; பகவான்தான் என்று ஸ்ரீநாராயண தீர்த்தர் உணர்ந்தார். அவரும் கோயிலுக்குள் சென்று ஶ்ரீலக்ஷ்மி நாராயணரை வழிபட்டார். 


🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊


🌞ருக்மணி- சத்ய பாமா சகிதமாக கண்ணபிரான் காட்சியளித்தபோது பாமா தேவியார், தீர்த்தருக்கு அபயம் அளித்து,பகவான் கோபிகைகளுடன் லீலை புரிந்ததைப் பாடும்படி கேட்டார். 


🌞கண்ணபிரானின் அருள் விளையாட்டில், உள்ளத்தை பறிகொடுத்த ஸ்ரீநாராயண தீர்த்தர், கிருஷ்ண பகவானின் லீலைகளை விவரிக்கும் வகையிலான ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற அரிய அபிநய கிரந்தத்தை, வரகூர் கோயிலின் திருச்சந்நிதியில் இயற்றினார்.


🌞அதை அவர் மனம் உருகிப் பாடியபோது பெருமாள் வீற்றிருக்கும்  திரைக்குப் பின்னால் சலங்கை ஒலி சப்தம் கேட்டதாம். பகவானே நர்த்தனமாடியதாக தரங்கிணீ காவியத்தில் ஒரு சிறப்புக் குறிப்பும் காணப்படுகிறது.


🌞இன்னொரு சிறப்பு நாராயண தீர்தர் பாடியபோது ஆஞ்சநேயர்  தாளம் போட்டதாவகவும் சொல்லபடுகிறது. அதனால் வரகூர் ஆஞ்சநேயருக்கு தாளம் தட்டி ஆஞ்சநேயர் என்று பெயர் வந்தது.


🌞அங்கு கூடி இருந்தவர்களுக்கும் வராஹ ரூப தரிசனத்தின் அற்புதத்தை கூறினார் தீர்த்தர்.

தன்னை வாட்டிய ரோகம் நிவர்த்தியானதை உணர்ந்தார். 

தீர்த்தரின் வயிற்று வலியும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து,


🌞ஸ்ரீதீர்த்தருக்கும் அவ்விடத்திலேயே ஸ்ரீநிவாசப் பெருமாளின் தரிசனமும் கிட்டியது. 

மகான் நாராயண தீர்த்தர்  வரகூரிலேயே வாழ்ந்து முக்தியடைந்தார்.


🌞அந்த கோயிலே தற்போது உள்ள வரகூர் வேங்கடேசப் பெருமாள் கோவில்.


🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞


🌞கேரளாவில் உள்ள வழிபாட்டு முறைபோல் இக்கோவில் ஸந்நிதிக்கு வரும் ஆண்கள் மேலாடை அணியக்கூடாது. 


🌞ஸந்நிதிக்கு முன்னர் நாராயண தீர்த்தர் அமர்ந்து பாடிய மேடை உள்ளது.அதன் மேல் கால்கள் படவோ அல்லது நடக்கவோ கூடாது. 


🌞இது வேங்கடேச பெருமாள் கோயில் என்று புகழ் பெற்றாலும், இங்கு மூலவராக எழுந்தருளி இருப்பவர் மஹாலக்ஷ்மியை மடியில் அமர்த்தி வீற்றிருக்கும் லக்ஷ்மி நாராயணப் பெருமாளே. 

அவரது கிரீடம் மிகவும் அழகாக  நம்மை ஈர்க்கிறது. 


🌞பூபதிராஜபுரம் என்ற வரகூரில் கோயில் கொண்டுள்ள மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணர் பத்ம விமானத்தின் கீழ் ஸ்ரீலட்சுமி  தேவியை தம் இடது தொடைப் பகுதியில் அமர்த்தி அணைத்துக் கொண்டு எழுந்தருளியிருக்கின்றார். 

இவருக்குத் தினமும் திருமஞ்சனம் உண்டு.


🌞உற்சவ மூர்த்தியாக வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழிலாக ஸேவை ஸாதிக்கிறார். 

லக்ஷ்மி நாராயணர் விற்றிருந்தும், வேங்கடேசப் பெருமாள் நின்றும்  சேவை சாதிக்கின்றனர்.


🌞இங்கே, ஶ்ரீகிருஷ்ணரும் விசேஷமானவர். நாராயண தீர்த்தருக்கு பெருமாள் ஸ்ரீகிருஷ்ணரூபமாக காட்சி தந்தருளினார். ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளையே கிருஷ்ணராக பாவித்து வழிபடுகின்றனர். 


🌞தம்பதிகள் இணைபிரியாமல் ஒன்றாக வளம் பெற்று வாழ்வதற்கு, வாஸ்து சக்தி அபரிதமாக நிறைந்த ஶ்ரீ வரகூர் வெங்கடேசபெருமாள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு.


🌞வைபிரேஷன் என்று தற்காலத்தில் சொல்லுகிறார்களே! அதை இந்த கோவிலில்  நன்கு  உணரமுடியும்.


🌞இத்தலத்துக்கு பெண்கள் வந்து ஒன்பது கஜசேலையை மகாலக்ஷ்மி பிராட்டிக்கு  சாற்றி 108 மஞ்சள் தானமாக அளித்தால் எந்த தீய சக்தியும் கணவன் மனைவியை பிரிக்க முடியாது, என்பது ஐதீகம்.


🌞புதிய வாகனம் வாங்கியவுடன் இக்கோவிலுக்கு வந்து வாகனத்தை நிறுத்தி ,லக்ஷ்மி நாராயணப்பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, கோவில் மாலை பெற்று  புதிய வாகனத்துக்கு பூஜைகள்  மக்கள் செய்வதை பார்கமுடிகிறது.

  

🌞தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள், எவ்வளவு மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லையே என்று வருந்துவோர், வரகூர் பெருமாளை வந்து தரிசித்துச் சென்றால், விரைவில் குணமாகிவிடுவார்கள். கல்யாணம் ஆகவில்லை என்ற கவலையால் கண்ணீர் விடுபவர்களுக்கு விரைவிலேயே திருமண பாக்கியத்தைத் தந்தருள்வார் வரகூர் பெருமாள்.


🌞வரகூரில் குருகுல முறையில் வேதபாடசாலை இயங்குகிறது. கோவிலில் நுழையும் பொழுது வித்யார்திகள் சேவிக்கும் வேதமந்திரங்கள் ரம்யமாக செவிகளில் மோதி ஒலிக்கிறது.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🌞ஜாதகத்தில் குரு தோஷம் களைந்து புத்திரபாக்கியம் அருளும் திருத்தலம்.


🌞ஜாதகத்தில் புத்திரகாரகன் குரு பாதிக்கபட்டாலும் ,புத்திரஸ்தானிபதி பலம் குறைந்தாலும், நீசமானாலும், புத்திரகாரகன் குரு, ராகு- கேது சேர்கை பெற்றாலும், சிலருக்கு. புத்திரபாக்கியம் தள்ளி போகிறது.


🌞திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் தகையவில்லையே என வருந்துவோர்,வரகூர் லக்ஷ்மி நாராயணப் பெருமாளை மனதாரப் பிரார்த்தனை செய்ய இங்கு வருகிறார்கள்.   


🌞குழந்தை பாக்கியம் பெற பெருமாளின் பாதத்தில் வெள்ளி காப்பு ஒன்றை வைத்து,அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்கின்றனர்.


🌞தம்பதியாக வரகூர் சென்று பெருமாளிடம் வெள்ளி காப்பு வைத்து அர்ச்சனை செய்த பிறகு கணவனே  கோயிலில் பெருமாள் எதிரில், மனைவிக்கு காப்பு கட்டவேண்டும்.


🌞பிறகு குழந்தை பிறந்தவுடன் அந்த வெள்ளி காப்பை, கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி ,சர்க்கரை பொங்கல், புளியோதரை நைவேத்தியம் செய்து, கோவில் வளாகத்தில் சேவார்திகளுக்கு பிரசாதமாக கொடுக்கின்றனர்.


🌞குழந்தைக்கு ஒருவயது பூர்த்தி யானதும் இங்கு வந்து முடிகாணிக்கை செலுத்துகின்றனர்.

இங்கு சஷ்டியப்தபூர்தி,செய்வது சிறப்பு.


🌞இன்னொரு சிறப்பு வரகூர் ஶ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் மிக அருகிலேயே சிவபெருமான் கோவிலும் உள்ளது .சிவபெருமான் கோவிலிலும் ஆண்கள் மேல் சட்டையை கழட்டி விட்டு தான் உள்ளே சென்று தரிசிக்க முடியும்.


🔷️🔶️🔷️🔶️🔶️🔷️🔶️🔷️🔷️🔶️🔷️🔷️🔶️🔷️🔶️

 

🌞தல சிறப்பு :


🌞குழந்தை பாக்யம் இல்லை என்று ஜோதிடர்களும், டாக்டர்கள்களும் சொல்லும் பொழுது இக்கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செலுத்தியபிறகு டாக்டர்கள் வியக்கும் படி, குழந்தை பாக்யம் கிட்டுகிறது.


🌞விஞ்ஞான அறிவியலுக்கு எட்டாத ஒரு தெய்வ சக்தி செயல் படுகிறது என்பதுதான் ஆச்சரியம் மூட்டும் உண்மை.


🌞தீராத வயிற்று வலிக்கு ஒரு அருமருந்தாக இக் கோவில் விளங்குகிறது.என்ன வரம் கேட்டாலும் உடனே கொடுத்துவிடுவார் பகவான் லக்ஷ்மி நாராயணர்.


🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️


🌞உரியடித்திருவிழா :


🌞கிருஷ்ணனின் கருணைப் பார்வை கிடைக்கப் பெற்ற நாராயண தீர்த்தரின் காவியத்தை ஒட்டியே வரகூரில் கோகுலாஷ்டமி காலத்தில், உறியடி உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. 


🌞உறியடி உத்ஸவத் திருநாளன்று, வெண்ணெய்த்தாழிக் திரு கோலத்தில், நவநீத கிருஷணராக பெருமாள் பவனி வருவார். அருகில் உள்ள கடுங்கலாற்றங்கரையில் எழுந்தருள்வார். 


🌞வெங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம்  நடைபெற்று வரும் உறியடி உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றது.

இங்கு நடக்கும் உறியடித் திருவிழாவை நேரில் கண்டால்,பல கோயில்களுக்குச் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 


🌞தேவர்களின் தலைவன் தேவேந்திரன் தனக்கு கோகுலத்தில் விழா கொண்டாடவில்லை என்று கோபம் கொண்டு, அந்த ஊரை அழிக்க வருண பகவானை ஏவி விடுகிறான். 


🌞வருணன் கடும் மழையைப் பொழிந்து கோகுலவாசிகளை தவிக்க விடுகிறான். கண்ணன், கோவர்த்தன மலையைக் குடை போல உயர்த்தி, அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றுகிறான். 

 

🌞ஆபத்பாந்தவனாகிய  கண்ணனை வழிபடும் விழாவே உறியடி உற்சவத்தின் முக்கிய அம்சம். அன்று வரகூர் கோகுலமாகிவிடுகிறது என்றால் மிகையல்ல. 


🌞இதையே ஆண்டாள் நாச்சியார் தன் திருப்பாவை பாசுரத்தில் "

"குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!" என்று பாடி மகிழ்கிறாள்.


🌞நவநீத கிருஷ்ணராக பெருமாள் வீதியுலா வரும் வேளையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டே கோயிலை அடைவார்கள். சுற்றுவட்டார கிராம மக்களும் தஞ்சை, திருவையாறு, கண்டியூர் முதலான ஊர்களைச் சேர்ந்த மக்களும்,வந்து விழாவில் கலந்துகொண்டு, தரிசித்துச் செல்வார்கள்.


🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒


🌞உற்சவ நாளில் பஜனை, திவ்ய நாம சங்கீர்த்தனம் ஆகியவை நள்ளிரவுக்குப் பின்னும்  நடைபெறுவதால் அன்று வரகூர் கிராமமே உறங்குவதில்லை! 


🌞தங்கள் குறை தீர்க்கப் பெருமாளை வேண்டிக்கொண்டு கல்யாண உற்சவம் நடத்தி வருகிறார்கள் பக்தர்கள். 


🌞கல்யாண வைபவத்தில் 25க்கும் மேற்பட்ட  மூலிகை திரவியங்களுடன் பலகாரங்கள் செய்யப்பட்டு, பழ வகைகளுடன் ஹோமம் நடத்துகிறார்கள். 

அதனால் பலருக்கும் குறை நீங்கிய நிறைவான வாழ்க்கை அமைகிறது. 


🌞ஸ்ரீவெங்கடேசப் பெருமாள். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்தவர். வரகூர் வெங்கடேஸப் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்கள் ஏராளம். உலகில் எங்கிருந்தெல்லாமோ வரகூர் பெருமாளை வந்து ஸேவித்தவண்ணம் உள்ளனர்.


🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️🔶️


🌞தீராத வயிற்று வலியில் இருந்தும் பலர் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள்.


🌞குன்றம் ஏந்தி குளிர் மழை காத்த கோபாலகிருஷ்ணனின் லீலா விநோதங்களை என்னவென்று சொல்வது!


🌞இந்தக் கோயிலின் இன்னொரு விசேஷம்...இக்கோயிலில் துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய், கிராம்பு முதலான மூலிகைகள் சேர்த்து இடித்து செய்த பொடியானது பெருமாளின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 


☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️


🌞வழித்தடம்:  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கண்டியூர், நடுக்காவேரி மார்க்கமாக திருக்காட்டுப்பள்ளி, தோகூர், பழமார்நேரி வழியாக வரகூர் செல்லலாம்



🌞பூதலூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆட்டோ, கார், பேருந்து மூலம்  செல்லலாம்.


🌞திருச்சி கல்லணையில் வழியாகவும் வரகூர் திருத்தலத்தை அடையலாம்


🌞கோவில் முகவரி : அருள்மிகு வெங்கடேசப் பெருமாள்

திருக்கோயில் , நடுக்காவேரி, வரகூர் 613 101, தஞ்சை மாவட்டம்

செல் : +91 4362 280856 94436 74911 94428 52145


🌞குறிப்பு : போன் நெம்பர் மாறுதலுக்கு உட்பட்டது.


🌀💠🌀💠🌀💠🌀💠🌀💠🌀🌀💠🌀💠


              🌀ஶ்ரீராமஜெயம்


🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉


🍒 ⚛️⚛️⚛️

No comments:

Post a Comment