Thursday 22 December 2022

சூரிய வழிபாட்டில் மறைந்துள்ள ரகசியம்:

 வெற்றி,செல்வம் தரும் சூரிய வழிபாட்டில் மறைந்துள்ள ரகசியம்:


சூரிய கதிர்கள் நம்மேல் பட்டால் லட்சுமி அருள் கிட்டும் . அதுசரி எல்லோர் மேலும் தினம் தினம் சூரிய கதிர்கள் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது எந்த அதிர்ஷ்டமும் வாழ்வில் கிடைக்கவில்லையே  என கேட்கத் தோன்றும்.


இதன் ரகசியம் என்னவென்றால் காலையில் உதிக்கும் அருணோதய இளஞ்சூரிய கதிர்கள் நம் இரு கை உள்ளங்கைகளில் படவேண்டும்.


அவ்வாறு பெற்ற கதிர்களை தலையில் வைத்து எடுக்க வேண்டும், (சூரியனை பார்த்து இரு உள்ளங்கைகளையும் சிறிது நேரம் காண்பித்து அந்த கைகளை தலைமேல் ஒரு நிமிடம் வைத்துக் கொள்ளவும்) .


இதுபோல் மூன்று முறை செய்ய வேண்டும், இதை வெறும் வயிற்றோடு செய்ய வேண்டும்.


பிறகு தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபடலாம்.


இதேபோன்று மாலை சூரியன் மறைவு நேரத்தில் மேற்கு பக்கமாக நின்று இரு கைகளையும் வயிற்றுக்கு நேராக வைத்துக் கொண்டு ஒன்று சேர்த்து சூரியனை லக்ஷ்மி நாராயணனாக பாவித்து வணங்க வேண்டும் .


வணங்கி இரு உள்ளங்கைகளையும் தொப்புள் மேல் படும்படி வைத்து எடுக்க வேண்டும் .


ஆண்கள் மேல்சட்டை இல்லாமல் செய்வது முழு பலன் கொடுக்கும்.


பெண்கள் தொப்புளை இறுக்கி கட்டும் ஆடையை சற்று தொப்புளை இறுக்காமல் தளர்த்தி கட்டிக் கொண்டோ அல்லது தொப்புளை விட்டு கீழே இறக்கி கட்டிக் கொண்டோ வழிபாடு செய்ய வேண்டும் .


அவசியம் உடலில் சூரிய கதிர்கள் படவேண்டும் . மேக மூட்டமாகவோ. மரங்கள் மறைத்தோ. உயரமான கட்டிடங்கள் மறைத்தோ இருந்தால் பலன் இல்லை . 


நின்ற நிலையில்தான் வணங்க வேண்டும் . சூழ்நிலை இல்லாதவர்கள் அத்திசையை பார்த்து மேலே கூறியபடி வணங்கிக் கொள்ளுங்கள், பலன் சற்று தாமதமாக கிடைக்கும் .


வெள்ளி. சனி. ஞாயிறு. திங்கள் இந்த நாட்களிலும் பௌர்ணமி. அமாவாசை. தமிழ்மாத முதல்நாள் ஆகிய தினங்களிலும்  தண்ணீரில் நின்று மேலே கூறியபடி சூரிய கதிர்களை பெற்றால் அற்புதமான செல்வ வளத்தையும். புகழ்வளத்தையும் பெறலாம்.


 மீண்டும் நினைவுபடுத்தபடுவது என்னவென்றால் காலை சூரிய கதிர்களை பிரம்மா சரஸ்வதியாக பாவித்து சூரியனை பார்த்து உள்ளங்கையை காண்பித்து தலைக்கு மேல் வைத்து எடுக்கவும்,


இதுபோல் மெல்ல மூன்று தடவை காலை வேளை மட்டுமே செய்யவும்,


வெள்ளி. சனி. ஞாயிறு. திங்கள் ஆகிய கிழமைகளிலும், பௌர்ணமி. அமாவாசை. தமிழ்மாத முதல்நாள் ஆகிய தினங்களிலும்  தண்ணீரில் நின்று காலை சூரிய கதிர்களை பிரம்மா சரஸ்வதியாக பாவித்து சூரியனை பார்த்து உள்ளங்கையை காண்பித்து தலைக்கு மேல் மெல்ல மூன்று தடவை வைத்துஎடுக்கவும்.

காலை வேளை மட்டுமே இதுபோல் செய்யவும்.மாலையில் இவ்வாறு செய்யக்கூடாது .


இதனால் கல்வி ஞானம் வளருவதோடு செல்வ வளமும் சேரும் .


மாலை வேளை லக்ஷ்மி நாராயணனாக பாவித்து இரு கைகளையும் வயிற்று தொப்புளுக்கு நேராக வைத்து வணங்கி தொப்புளில் இரு கைகளையும் வைத்து எடுக்கவும்.


 மூன்று முறை இதுபோல் செய்யவும்.


 செல்வத்திற்கான கோரிக்கையை தெளிவாக அன்றாடம் வேண்டவும்.


இவ்வாறு செய்தால் செல்வ வளம் கூடும், (தொப்புள் லக்ஷ்மி ஸ்தானம் அங்குள்ள லக்ஷ்மி நாராயணரரை மாலை வேளை வணங்கி லட்சுமி ஸ்தானத்தில் குவித்த கர சக்திகளை வைத்தால் செல்வ வளம் கூடும்).


இந்த முறைகள் கல்வி. செல்வம். ஞானம் இவைகளுக்கான வழிபாடு முறையாகும் .


இங்கு ஒரு எச்சரிக்கையையும் அறிந்து கொள்ளுங்கள்.


 உச்சி சூரியன் மதியம் 12 ல் இருந்து 1 மணிக்குள் ருத்ரன் அமசம்.


இந்த கதிர்கள் உங்கள் இரு உள்ளங்கைகளிலும் நேரிடையாக படக்கூடாது, எப்பொழுதுமே உச்சி வெயில் தலையை தாக்குவதோ. உள்ளங்கையில் படுவதோ கூடாது .


 பணிநிமித்தம் காரணமாக வெளியில் செல்பவர்கள் உச்சி வெயில் தலையில் படுவதை தவிர்க்க முடியாதுதான் ,எனினும் உச்சி வெயில் உள்ளங்கையில் படுவதையாவது தவிர்க்கலாம் .


அவ்வாறு உச்சி வெயில் பட்டால் செல்வம் சந்தோஷம் அழிவது உறுதி, ருத்ரவேளை எதையும் அழிக்கும். உங்களிடம் உள்ள சூன்யம். தீய சக்தி இவைகளை அழிக்கவே அந்த நேரம் பயன்படும்.


 சுபிட்சங்களுக்கு அந்த நேரம் சிறந்ததாகாது ,எனவே தவிர்க்கவும் .


 மேலும்ஒரு தகவலையும் தெரிந்துகொள்ளுங்கள்.


 உள்ளங்கையில் ஒரு வேளை தெரியாமல் சூரிய ஒளி கதிர்கள் நேரிடையாக பட்டு விட்டால் தரித்திரம் நம்மை ஆட்கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் மகாலட்சுமியின் அம்சமான மருதாணியை உள்ளங்கையில் வைத்து காத்துக் கொண்டனர்.


பெண்கள் வெளியில் செல்லும் போது தலையில் முக்காடு போட்டு உச்சி கதிர்கள் தாக்காதவாறு பாதுகாத்துக் கொண்டனர், (இன்றும் வடக்கு பகுதியில் வாழும் பெண்கள். மார்வாடி பெண்கள் வெளியில் செல்லும் போது முக்காடு போட்டு செல்வதை பார்த்திருப்பீர்கள்.


முஸ்லீம் பெண்களும். ஆண்களும் கூட வெளியில் செல்லும் போது குர்தா அணிவது,தொப்பி அணிவதை மறக்காமல் செய்துவருகிறார்கள்.


 காரணம் வேறாக இருந்தாலும் அதில் இயல்பாகவே நன்மையுள்ளது என்பதை கவனிக்க வேண்டும். 


ஆக உச்சி சூரிய கதிர்கள் நம் உள்ளங்கையில் படக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


இன்றும்கூட கிராமங்களில உச்சி வேளையில் வெளியில் அனாவசியமாக போகாதீர்கள்,

காத்து கருப்பு அண்டும் என்றெல்லாம் பயமுறுத்துவார்கள்.


இன்றைக்கு இருப்பவர்கள் இதற்கான விளக்கத்தை பலவாறாக கூறினாலும் மேற்கண்ட கருத்தே முதன்மையானது .


தரித்திரம் ஆட்கொள்ளும் , மூதேவி அண்டும், செல்வம் வற்றி கடன்பட வைக்கும் . 


எனவே உச்சி வெயிலில் உள்ளங்கைகளை காட்டாதீர்கள்.


காலை. மாலை சூரிய பூஜை செய்தாலும் மற்ற எந்த பூஜை வழிபாடு செய்தாலும் உச்சி வேளை கதிர் உள்ளங்கை கண்டால் எல்லாம் செயலிழக்கும்.


மேலும் ஒரு தகவலை அறியவும்.


 இந்த விஷயம் அறிந்துதான் ஆலய அர்ச்சகர்கள் 12 மணிக்கெல்லாம் ஆலயத்தை மூடிவிடுகிறார்கள்.


ஏனெனில் மக்கள் தன் குறைகளை இறைவனிடம கைநீட்டியே கேட்பார்கள்.


அப்போது சூரிய உச்சி கதிர்கள் கைகளில் (உள்ளங்கைகளில்) பட்டால் வழிபாட்டு பலன் கிடைக்காது என அறிந்தே அந்த நேரத்தில் வழிபாட்டை முடித்து அர்ச்சகர்கள் ஆலயத்தை மூடிவிடுகிறார்கள்.

 இது தேவ ரகசியமாகும் .


இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்களால் அறியாமல் கடைபிடிக்க முடியாமல் போனாலும் இதை இனி அறிந்து செயல்படுங்கள்,


லட்சுமிகடாட்சத்தை தவற விடாதீர்கள் .

No comments:

Post a Comment