Tuesday, 30 October 2018

சித்தர்கள் நிலையை பற்றி ஆச்சர்யமான அபூர்வமான விளக்கம்

#திருமூலர் என்ற மாமுனிவரின் கருக்கிடை600 என்ற நூலில் ஆச்சர்யமான அபூர்வமான விளக்கம்



நாம்இறைவனாக தேவர்களாக வழிபடும்
சதாசிவன் மகேசுவரன்
ஈசன் பிரம்மா போன்றவர்கள் மனிதர்களாக இந்த பூவுலகில் தோன்றி காயகற்பங்களை பலவாக உட்கொண்டு
அதன் மூலம் அழியா உடல் பெற்றனர்.
நாம்இறைவனாக வணங்கும் சதாசிவன்
ஏழு லட்சம் கற்பங்களையும் மகேசுவரன் மூன்று லட்சம் கற்பங்களையும் ஈசன் இரண்டு லட்சம் கற்பங்களையும் விஷ்ணு எழுபதாயிரம் கற்பங்களையும் பிரம்மா முப்பதாயிரம் கற்பங்களையும் முனிவர்கள் ஆயிரம் கற்பங்களையும்
இந்த மண்ணில் பிறந்து உட்கொண்டு இறவாத நிலைபெற்றனர் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு காயகற்பம் உட்கொண்டு இறவாநிலை அடைந்த இவர்கள் இப்போது எங்குள்ளனர்?

கருவூராரின் அற்புதமான வாதகாவியம் பாடலில் 155முதல் 159வரை தெளிவாக விளக்குகின்றது

அடுத்து கலியுகத்தில் கொடிய
அநியாயம் மெத்த நடக்குமென்று
விடுத்துநான் சொல்லிவிட்டேன் இந்த
மேதினியி லிருக்க நீதியில்லையென்று
நீதியிலாக் கலியுகந்தான் தீரும்வரை
நிஷ்டையிலிருந்திட வேணுமென்று
பாதிமதி யணியீசன் திருவடி
பதமல ரடியினி லிருந்திடவே
என் குரு போகநாதர் காலங்கி
இன்பமுறும் நந்தி திருமூலர்
தன்மையுள்ள சட்டைமுனிவர் சுந்தரர்
தன்வந்திரி ராமத்தேவர் மச்சமுனிவர்
கொங்கணவர் தன்னுடனை அனேகர்
கூடியே கைலாச கிரியில் வந்து
அங்கங்கு குகைகள் செய்து இருந்து
அருந்தவத்தோடு நிஷ்டை புரிந்து கொண்டு
இருந்தார் குகைதனிலே கலியுகம்
எப்படியும் போகட்டும் மென்றேதான்
திருந்துங் கிரேதா யுகத்தில் வெளிப்பட்டு
தீர்க்கமுடன் வந்திடுவார் ஏற்கையுடனே
ஒயிலாய்ச் சதுரகிரி மத்தியில்
உற்பனம தாயமைந்த மேருகிரி
கும்பகிரி யெனவும் நீலகிரி
கூடுஞ் சஞ்சீவிகிரி வெள்ளிகிரியும்
நம்புகின்ற பிரமகிரியும் சந்திரன்
நாட்டும் வைகுண்டகிரி குபேரகிரியும்
சித்தகிரி யதற்குப் பக்கத்தில்
சிறப்பா யமைந்தகை லாசகிரியின்
மத்தியிலே தானும் சித்தர்
மகாதவத் தோடு வாசமுற்றார்
கும்பகிரியிலே தனியே சிறந்த
குருமுனி வர்தனியே அடவுசெய்து
அம்புவி யோர் மெச்சும் பொதிகை
யதிலிருந்த தேயொரு வழிசெய்து
புலஸ்தியர் தன்னுடனே நிஷ்டை
பூண்டிருந்தா ரெங்கே ஆண்டவனும்
தலத்தி லுயர்ந்ததென்று சதுரகிரி
தன்னிலிருந் தார்சித்தர் நன்னயமுடன்


அற்புதம் அற்புதம்
மனிதர்களுக்காக ஆண்டவனும் இன்றையளவில் ஒவ்வொரு மலைகளிலும் நிஷ்டை கொண்டுள்ளார்