Saturday, 13 October 2018

13.10.2018 அன்று எனக்கு அகத்தியர் உரைத்த அருளுரை

நாடி வாசிக்கப்பட்ட நாள் - 13.10.2018,
சனிக்கிழமை மதியம் 15: 40 மணி அளவில்.
அருளுரை பெற்றவர் - தி. இரா. சந்தானம்.
இடம் : பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடம்.
வாசிப்பவர் - ஆசான் குரு இறைசித்தன் செந்தில் அய்யா அவர்கள்.

தனிப்பட்ட முறையில் அகத்தியர் எனக்கு கூறிய அருளுரையை உலகோருக்கு அறிய செய்வதின் மூலம், யான் பெற்ற அருள் வையகம் முழுவதும் அறிந்து, அகத்தியரின் அருமையும் பெருமையும் உலகோர் அறிய, இந்த சிறிய அடியேனின் பதிவு இது.
************************************************************************************************************************
பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி
பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்கு மகிழ்ந்தாய் போற்றி
மருவி ஏன் சிந்தை புகுந்தாய் போற்றி
காவாய் கனகத்திறளே போற்றி
கயிலை மலை வாழ் என் அய்யனே
போற்றி போற்றி போற்றி

சிரம் தாழ்ந்து இந்த கலியுகம் தன்னிலே யாம் என் நிலை இறக்கி அகத்தியன் நானே அருள்தனை உரைக்கிறேன் கேள் மகனே

இன்னவனுக்கு தொல்லையேதும் இல்லையப்பா
தென்றலாய் நான் வந்து உனது ஈன்றவளை தொட்டு தழுவிச்சென்றேன்
மனம் தளராதே, அவள் ஆத்மா நிலையை யாம் காப்போம்
ஒரு துர் நிகழ்வும் நிகழாதே

எனக்கு மண் தனை இட்டு ஆலய பணியதனை செய் என்று அன்று உரைத்தேன்.
முயற்சி தனை மேற்க்கொள்.
வழி நின்னு வழி நடத்து.
வானிலிருந்து உமை வாழ்த்துவோன் தேவன் அவனே.

புண்ணிய க்ஷேத்ரத்தில் இருந்து ஒரு துறவியால் நீ ஆசி பெற்று ஆலயப்பணியை மேற்க்கொள்வாயே.

உனக்குஅன்றுரைத்தேன் இந்த சென்மத்தில் உன்னைசுற்றி ஒரு கூட்டம் கூடுமப்பா,  அப்போது நீ உயர் நிலையை அடயக்கடைவாயே என்று.
நீ உயர் நிலை அடயக்கடைவாய். உனை ஈன்றவளும் நிலை பெறுவாள்

மனதிலிருக்கும் துர் எண்ணம் அதை விட்டொழியச்சொல். மனதை மென்மைப்படுத்தச்சொல். ஏன் நாமம் அதை ஜெபிக்கச்சொல். யாம் உன்னை ஈன்றவள் அருகில் அல்ல, அவளுள் இருந்து அவளை காப்பேன்.

அகத்தியா என்று என் நாமம் ஜெபிக்கும் ஒரு மழலையும் நான் விடேன் அப்பா.
யாம் உன் அருகில் அல்ல உன்னுள் இருந்து உமை காப்பேன்

இது கர்மத்தில் வந்த வினையால் வந்த வினையே
கர்மம் கலைந்தோடும் தர்மம் நிலை நிற்குமப்பா
மனததை மென்மைபடுத்தச்சொல், உன் வாழ்வு சிறக்கும் அய்யா.

கண்டம் விட்டு கண்டம் இருக்கும் நபர் தனை தொடர்பில் கொள்.
அவன் நிதி உதவிதனை பெற்றுத்தருவானே.
மனதை மென்மைப்படுத்து, ஆலயப்பணியதை செய்.
யாம் உன்னுள் இருந்து உமை காப்போம்.
பூர்வ சென்மத்தின் விட்ட குறை தனை இப்பிறவியில் நிறைவேற்று.
வாழ்வே வசந்தம் பெறுமே. முற்றே.
-----------------------------------------------------------------
மேலும் திருசெந்தூர் சென்று வந்த பரிகாரத்தின் சித்தி, மற்றும் வீட்டின் அருகில் உள்ள ஆலயத்தில் செய்த பரிகாரத்தின் சித்தி ஆகியவற்றை கேட்டோம். இன்னும் சில கேள்விகளையும் கேட்டோம்.
சுகப்ரம்ம மகரிஷி கிளி வடிவில் வந்து ஆங்காங்கே ஆசி வழங்குவதாக கூறினேன், அவருடைய தொடர்புகள் கிடைக்கிறது, அதற்க்கு அகத்தியர் அய்யா கீழ்வரும் வரிகளை கூறினார்.
-----------------------------------------------------------------
அன்றுரைத்தேன் மூடனே அறியவில்லையா உமக்கு, யாம் உன் அருகில் அல்ல உன்னுள் இருந்து உமை காப்போம் என்று.
உனை ஆட்கொள்வதே நான் தான். ஆட்டி வைப்பதும் நானே.
உனக்கு தென்றலாக வருவேன், பட்சியாக வருவேன், மச்சியாகவும் வருவேன், வாசனை வடிவிலே வந்து உனக்கு அப்பப்போது புலன் உணர்த்திச்செல்வேன்.
உன் தேகத்தில் இருக்கும் பட்ட கர்மத்தை விட்டொழியவே யாம் வந்து உனக்கு காட்சி தருவோமே.
உன் மழலை வாழ்வு செழிக்கும் அப்பா. உனது ஈன்றவள் அவள் தீர்க்க் ஆயுளை பெறுவாள்.
சிறக்கும், சிறக்கும். முற்றே.
-----------------------------------------------------------------------------------------------------------------------


நேற்று 13.10.2018 நாடி வாசிப்பின் போது அகத்தியரின் நடமாட்டம் அகத்தியர் ஜீவ நாடி குடிலுக்குள் அடிக்கடி தென்பட்டது.

முதலில் குப்பை சித்தர் ஜீவ சமாதியில் த்யானம் செய்யும் போது, சந்தன, ஜவ்வாது, திருநீறு வாசனை வந்து சென்றது.
எனக்கு முன்னர் ஒரு அன்பர், வீட்டில் அகத்தியர் பூசை செய்பவர், நாடியில் அருளுரை கேட்ட போது, படத்தில் இருந்து பூ விழுந்துள்ளது, பின்னர் அதனை எடுத்து வைத்து கொண்ட பின்பு, இன்னுமொரு கேள்விக்கு மற்றறொரு படத்தில் இருந்து மீண்டும் பூ விழுந்துள்ளது, பின்னர் மீண்டும் ஒரு பூ மற்றும் ஒருமுறை விழுந்துள்ளது. அனைவரும் மகிழ்ச்சியில் இருக்க, மீண்டும் பிரார்த்தனை செய்த போது அகத்தியர் படத்தில் மாட்டி உள்ள ரோசாப்பூ மாலையிலிருந்து அதன் இதழ்கள் அழகாக வானத்தில் இருந்து மலர் தூவுவது போல கொட்டி உள்ளது. இதனை வெளியில் இருந்த எனக்கு வந்து கூறினார்கள். என்னே அய்யனின் அருள் என்று வியந்தேன். நமக்கு அதை காண பாக்கியம் வேண்டும் என்று அகத்தியரை பிரார்த்தனை செய்து கொண்டேன்.

பின்னர் எனக்கு நாடி வாசித்து முடிந்த பின்னர், நாங்கள் பேசுவதை அகத்தியர் அய்யா அவர்கள் அந்த பீடத்தில் இருந்தபடி கேட்டுக்கொண்டு உள்ளார் என்பதற்கு சாட்சியாக சில நிகழ்வுகள் அமைந்தது. நாடி சுவடி அருளுரை முடிந்து கட்டி வைக்கப்பட்ட பின்னரும் அகத்தியர் நாம் பேசுவதை கேட்டுக்கொண்டு நம்முடன் உரையாட எண்ணுகிறார். ஆனால் நாடி சுவடி கட்டி பெட்டகத்தினுள் வைக்கப்பட்டதால், மலர் சொரிந்து தம் உத்தரவு அல்லது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். 
நான் இறை சித்தரிடம், கூறினேன் அம்மாவுக்கு எதுவோ இறந்து விட வேண்டும் என்ற துர் எண்ணம் ஏற்பட்டுள்ளது போல இருக்கு, அய்யா அவர்கள் சரியாக கூறி விட்டார், அந்த என்னத்தை அழிக்க வேண்டும் என்று கூறிய மறு கணமே, ரோசாப்பூ மாலையில் இருந்து மலர்கள் சொரிய துவங்கின.
பின்னர், சிறிது நிமடங்கள் கழித்து, இணையத்தில் வந்த ஒரு அகத்தியர் லோபமுத்ரா உற்சவ சிலை படத்தை காட்டி. இது நன்றாக உள்ளது. இதே வகையில் நாமும் உற்சவர் சிலை செய்வோமே என்று கூறிய மறு கணமே மீண்டும் ரோசாப்பூ மலையில் இருந்து மலர்கள் சொரிந்தன. அது தான் அந்த சிலைக்கான அகத்தியர் உத்தரவு அல்லது அகத்தியருக்கு அந்த சில வடிவம் பிடித்தமானது என்று கூறுவதற்காக உணர்த்தியுள்ளார்.

அகத்தியமே நித்தியம் அகத்தியமே சத்தியம் அகத்தியமே சாந்தம் அகத்தியமே ஆனந்தம்
ஓம் ஸ்ரீ அகத்திய மாமுனி குடமுனி சித்தர் தலைவரே, தட்சிணாமூர்த்தியே உங்கள் அருளுக்கு தலை பணிகிறோம் அய்யனே. 
எம்மை எடுத்துக்கொள்ளும், உம்மை எமக்கு தாரும். என்னுடையது ஏதுமில்லை, சர்வமும் சிவமயமே அய்யனே.
ஆதிசக்தி லோபாமுத்ரா தாயே நின் தாள் சரணம். சக்தி நீயே, சர்வமும் நீயே, உன் அருள் பார்வையால் எல்லாம் ஜெயம். தங்கள் கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே அன்னையே, வணங்குகிறோம், போற்றி தாயே.
நவ கோடி சித்தர் பெருமக்கள், எண்ணிலா கோடி சித்தர் பெருமக்கள், முனிவர்கள் தேவர்கள் துணை நிற்க சர்வமும் ஜெயம் ஜெயம் ஜெயமே
தி. இரா. சந்தானம், 13.10.2018