Monday, 8 October 2018

எனது அனுபவம் 03.10.2018

அழைத்தால் அக்கணமே வருவார் எம் குரு அகத்தியர். இறைசித்தர் பொகளுர் பீடத்தில் யாகம் வளர்த்து அகத்தியருக்கு ஆகுதி கொடுக்கும் போது கூறும் வாக்கியம் இவை. அகத்தியர் எமக்கு அளித்துள்ள வாக்கு, எப்போதும் உனக்கும் உன்னை சார்ந்தவருக்கும் காப்பாக இருப்பேன் என்பது தான். பக்தர் ஒருவர் ஆபத்தில் அழைக்கும் போது உடனே வருவார், காலம் நேரம் பார்க்க மாட்டார் என்பதற்கு என் அன்னைக்கு நிகழ்ந்த சம்பவம் ஒரு உதாரணம்.

என் அன்னை சென்ற 03.10.2018 ICU ward இல் மாரடைப்புக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொடுக்கப்பட்ட  கட்டில், எனது பாட்டியும் என் அன்னையின் தாயானவள் அதே கட்டிலில் தான் மாரடைப்புக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.

அந்த படுக்கையில் என் அன்னையை கிடைத்தும் போதே , அவள் ஐயகோ எது என் அம்மா படுத்த அதே கட்டில், அவளும் இதே மாரடைப்புக்காக இந்த கட்டிலில் கிடத்தப்பட்டு இறந்தாள். நமது நிலை என்னவாகுமோ என்று பரிதாபமாக என்னிடம் கூறினாள். நான் அவளை சமாதானம் செய்தேன்.

அன்று, என் பாட்டிக்கு ஊசி போட்டவுடன், அவர் நினைவிழந்தார். இன்று நமக்கு ஊசி போடுகிறார்கள் நமக்கு என்ன ஆகுமோ என்று பயந்தாள். என்னிடம் ஊசி போடுவதற்கு தனியே ஒரு declaration எழுதி வாங்கி கொண்டார்கள்.

இந்த சூழ்நிலையில் ஊசி செலுத்தப்பட்டது. அன்னை முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் வைக்கப்பட்டது. பயத்தில் அவர் அகத்தியரை துதித்திருக்கிறார்.

 *அழைத்தால் அக்கணமே வரும் எம் குருநாதர்*
*அங்கு சூட்சுமமாக எழுந்தருளி, சந்தன வாசமாக அன்னைக்கு புலன் உணர்த்தியுள்ளார்.*

என் அன்னையும் சுற்றி பார்த்து, எங்கிருந்து சந்தன வாசனை வருகிறது என்று பார்த்துள்ளார், ஆனால் அருகில் எதுவும் தென்படவில்லை. அன்னைக்கு எதுவும் புரியவில்லை, சிறிது நேரத்தில் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.

பின்னர் நான் வரும்போது கூறிக்கொள்ளலாம் என்று நினைத்து மறந்து விட்டார். இன்று அகத்தியரை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது ஞாபகம் வந்து, என்னிடம் நடந்ததை கூறினார்.

அகத்தியர் அருள். எல்லாம் ஜெயம், ஜெயம், ஜெயம்.

தி. இரா. சந்தானம்
9176012104