Saturday 15 August 2020

அகத்தியருடன் மனதளவில் ஒரு சிறு உரையாடல்.

அகத்தியருடன் மனதளவில் ஒரு சிறு உரையாடல்.

குருநாதா நாடியில் தாங்கள் கூறும்போது என் அலுவலகத்தில் நடந்தது, என் இல்லத்தில் நடந்தது போன்றவற்றை நீங்களே அனுபவித்து கண்ட மாதிரி உரைத்து கூறுகிறீர்களே, அது எங்கனம்....

மகனே, நாங்கள் எல்லாம் ஒரு கிருமி போல தான் என்று வைத்து கொள்ளேன். ஆனால் நாங்கள் மிக நல்ல நன்மை செய்யும் கிருமிகள். நாங்கள் நல்லவர்களை தேடி பிடித்து தொற்றுவோம். நாங்கள் ஒருவனை தொற்ற வேண்டுமானால் அவன் எங்களை நினைக்க வேண்டும். ஒரு கணம் நினைத்தால் போதாது, அவன் எங்களை சதா எண்ணி கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தான் கோவில் பூஜை வழிபாடு யாகம் எல்லாம். எல்லாமே எங்களை மறந்து விடும் மனிதனுக்கு எங்களை ஞாபகப்படுத்தி கொள்வதற்கு தான்.

நன்றாக நினைவில் கொள், த்யானம் செய்தால் அனைத்து எண்ணங்களும் விலகும், எண்ணங்களற்ற மனம் இருக்கும். அப்போது அவனுக்கு எந்த ஒரு எண்ணமும் இல்லாததால், அவனால் ஒரு எண்ணத்தை உருவாக்கி சதா அதிலேயே பல காலம் லயித்து இருக்க முடியும். அப்படிப்பட்டவன் எங்களை எண்ணுவதற்கு நினைவு படுத்தி கொள்வதற்கு தேவை இல்லை. நாங்களே அவனுள் சென்று தேடி அமர்வோம். அதே போல ஒருவன் பூஜை புனஸ்காரங்கள் மூலம் சதா இறைவனின் எண்ணத்தை புகுத்தி, வைத்து கொண்டு இருக்கும் நிலையில், மற்ற அனைத்து எண்ணங்களும் விலகி, அதுவே ஒரு தியான நிலைக்கு சமமாக ஆகின்றது. எனவே அவன் தனியே த்யானம் செய்ய தேவை இல்லை. நாங்கள் அவனுள் சென்று அமர்வோம்.

அப்போது அவனது புலன்கள் மூலமாக அனைத்தையும் கண்டறிவோம்.
அவன் உள் அமர்ந்து ஆசானாக உள்ளுணர்வாக வழி நடத்துவோம். அதனால் தான் நான் நாடியில் உன்னிடம் கூறினேன் - உன் வெளியில் அல்ல, உன் உள்ளே இருந்து மகனே உன்னை காப்பேன் என்று உரைத்தோம்.

நாங்கள் உள்ளே வந்து ஒரு முறை அமர்ந்து விட்டால், உன்னை நல்வழிப்படுத்தி மெல்ல மெல்ல உன் உடலில் மாற்றங்கள் ஏற்படுத்தி, எவ்வாறு கிருமி உடலில் படருமோ அவ்வாறு நாங்களும் உன் உடலில் பலம் கொள்வோம். நாய் கடித்தால் நாயின் தன்மை ஏற்படுவது போல எங்களது தன்மைகள் எல்லாம் உன்னில் பெருக துவங்கும். எங்கள் சக்தியும் உனக்கு மெதுவாக கிடைக்கும்.

முடிவில் நான் நீ யாகவும் நீ நானாகவும் ஆகி ஒன்றாக அகத்தியத்துள் கலந்து நிற்போம் மகனே, புரிந்ததா..

ஆம் அய்யா, சிலர் கூறுவது போல என் உடல் உயிர் செயல் சிந்தனை ஆற்றல் எல்லாமே அகத்தியர் தான். என் செயலாவது யாதோன்றுமே இல்லை என்று கூறுவது இப்போது புரிந்தது குருநாதா.

ஆம் மகனே, நான் உன் உள்ளே இருந்தே இந்த எழுத்தாக ஓர் உரையாடலாக வெளி வருவது மேற்கூறிய தன்மையின் உதாரணம் நிரூபணம் தான் மகனே. உணக்கேது இந்த சூட்சும விஷயங்கள் மகனே. நான் தானே உன் உள்ளே இருந்து வெளிப்படுகிறேன். நன்றாக இது போலவே என்னை வெளிப்படுத்து மகனே. ஆசிகள்.
தி. இரா சந்தானம்
அகத்திய ஆடியவன்
அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம்
பொகளூர், மேட்டுப்பாளையம், கோவை
15.08.2020
9176012104

5 comments:

  1. பேரானந்தம் ஐயா... நன்றிகள் பல கோடி... நன்றி அகத்திய முனிவரே... இதைபோல் இன்னும் நிறைய பதிவுகளை பகிருங்கள் ஐயா.. ஓம் அகத்தீசாய

    ReplyDelete
  2. நன்றி! உண்மை உணர்தோம்... அகத்தீசாய நமக

    ReplyDelete