Monday 31 August 2020

மனிதனின் அடையாளம்

மனதினில் ஒரு கேள்வி - இந்த நண்பன் நடராசன் இப்போது வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறான். நாளை பௌர்ணமி பூஜைக்கு வருவானா , தெரியவில்லையே.


அகத்தியன் மனதினுள் ஒலித்த பதில்  - மகனே நேற்று அவன் வேலையில்லாமல் இருந்தான் இன்று ஒரு வெளி செய்து கொண்டு உள்ளான். நீ வெகு காலமாக வேலை செய்து கொண்டு வருகிறாய். உனது அடையாளமாக என்றுமே இந்த வாங்கி மேலாளர் என்ற அடையாளம் நமது பீடத்துக்கு வரும்போது இருந்ததே இல்லை. ஏன் என்று சிந்தித்து பார்த்தாயா. உனது அடையாளம் என்பது அகத்தியன் என்பது தான். அகத்தியம் உனது அடையாளம். இவ்விதம் மனிதர்கள் தங்களை எளிதில் அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். வேலையில் மேலாளர் அல்லது அவர்களுக்கு அளிக்கப்பட வேலையில் உள்ள பதவியின் பெயர் கொண்டு தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள. மனிதர்களுக்கு இது மிகவும் சுலபமாக வருகிறது. மேலாளர் என்பது எனது பதவி, எனது அடையாளம் என்பது போய் அந்த டயாளமாகவே மாறி விடுகிறார்கள், கீழதிகாரிகளை கூப்பிட்டு கர்ச்சனை செய்கிறார்கள். இதில் உள்ள சூட்சுமம் என்ன என்றால் மனிதர்களுக்கு இந்த திறமை இருக்கிறது. எதை அடையாளப்படுத்தி கொள்கிறார்களோ அதாகவே ஆகி விடுவது தான் அந்த திறமை. எனவே நான் கூறுவது என்னவென்றால் நமது பீடத்தில் உள்ள அனைவருக்குமே ஒரே அடையாளம் தான். அவன் எந்த வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் சரி. அது தான் "நான் அகத்தியன் " என்ற அடையாளம். அந்த அடையாளமாகவே ஆகி விட்ட ஒருவன் என்னுள் கலப்பது என்பது திண்ணம். இது என்ன அடைய முடியாத காரியமா. உன் வீட்டில் சென்றால் நீ ஒரு தகப்பன் என்ற அடையாளம், அதை மாற்ற முடியுமா, மகன் என்ற அடையாளம், கணவன் என்ற அடையாளம்.  ஆனால் இந்த அடையாளங்களால் என்ன பிரயோஜனம். பிரயோஜனமாக ஏதாவது ஒரு அடையாளம் இருக்குமானால் அது இறைவனின் அடையாளமே. அதனால் தானே இறைவனின் அடையாளமான திரு மண்ணையும் திரு நீரையும் ருத்திராக்ஷத்தையும் சிலுவையும் குல்லாவும் எல்லாமும் அடையாளப்படுத்தி கொள்கிறீர்கள். பிறகு என் இறைவன் போல வேடமும் இட்டு கொண்டு இறைவனாக பாவனை செய்யாமல் இறைவனுடன் கலக்காமல் இந்த பிறவியை மாயையில் வீழ்ந்து கொண்டு இருக்கீர்கள். நாங்கள் உங்களை ஒன்றும் புதிதாக செய்ய சொல்லவே இல்லையே. ஏற்கனவே நீ கொண்டு உள்ள அடையாளத்தை என் அடையாளமாக மாற்று. பிறகு எல்லாமே நானே  கொள்கிறேன் என்று தானே எளிமையான முறையாக கூறுகிறேன். புரிந்ததா மகனே ... ஆசிகள் ..


எழுதியவன்


இவன் "அவன்" ஆனவன்



என்றும் அகத்தியத்துள்

தி. இரா. சந்தானம்
கோவை
அகத்திய சீடன்
பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம்



No comments:

Post a Comment