Saturday 15 August 2020

மனதினில் அகத்தியருடன் ஒரு உரையாடல்

மனதினில் அகத்தியருடன் ஒரு உரையாடல்

***************************************

அய்யா உங்களுக்கு விளக்கு ஏத்தியாச்சு

சரி மகனே

அய்யா லட்சுமி விக்ரகத்துக்கு என் மனைவி தனியா விளக்கு ஏத்துவா
உங்கள் இன்னொரு படம் கீழே வெச்சு இருக்கு , அதுக்கும் உங்கள் சிலா ரூபத்துக்கும், அம்பாள் சிலா ரூபத்துக்கும் நான் விளக்கு ஏற்றி விட்டேன். ஆனால் சுகப்ரம்மர் சிலா ரூபத்துக்கு தனியே விளக்கு ஏத்தவில்லை குருவே, இதுவே போதுமா.

மகனே, விளக்கு ஏற்றுவது என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்.

சொல்லுங்கள் குருநாதா

விளக்கு என்பது ஒளி. நாங்கள் எல்லோரும் ஒளி ரூபம் ஒளி உலகத்தில் இருக்கிறோம்

சரி குருநாதா, அப்போ இந்த உலகத்தை போல ஒளி ரூபமாக பலர் வாழும் ஒளி உலகம் என்று ஒன்று உண்டா

ஆம் மகனே, உண்டு. நீங்கள் அழைக்கும் வேகத்தில் நாங்கள் ஒளி ரூபமாக இங்கே வந்து சேர்வோம். ஒளியுடன் தான் நாங்கள் இணைய முடியும். உன்னுள் நாங்கள் இணைய வேண்டுமானால் உன் உள் ஒளி பெறுக வேண்டும். உன் உள்ளே ஒளி பெருகினால் நாங்கள் உன் உள்ளே இறங்கி சேர்ந்து இயங்க கூடுமடா..

ஆம் குருநாதா, நன்றாக புரிந்தது

ஒளி தான் மகனே எல்லாவற்றையும் உருவாக்குவது சூரியன் ஒரு மிகப்பெரிய விளக்கு. அதன் ஒளியில் தானடா உன் பூமி, மற்ற கிரகங்கள் எல்லாம் ஜீவித்து இருக்கின்றன. ஒளி இல்லையேல் ஏதடா உங்களுக்கு உயிர் இயக்கம். புரிந்ததா

புரிந்தது குருநாதா... அப்போது கோயிலை சுற்றி சுற்றி வருவது , கடவுளை சுற்றி வருவது, கிரி வலம் வருவது எல்லாமே ஒரு காரணத்துக்காக தான் போல இருக்கு. ஒளி தானே உயிர் சக்தி, அதனால் தானோ என்னவோ கிரகங்கள் எல்லாம் சூரியனை சுற்றி வருகின்றன. அதனால் தான் சூரியனை நோக்கி காயத்திரி மந்திரம், பல நீர் தர்ப்பணங்கள் போன்றவை பிராமணர்களால் செய்யப்படுகிறது.

ஆம் குழந்தாய், சரியாக புரிந்து கொண்டாய்.
இப்போது சொல், ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்.

ஆம் குருநாதா, ஒளி உலகத்தில் இருந்து இங்கே வந்து அருள் பாலிக்க விளக்கு ஏற்றி வைத்து ஒளி ரூபமாக வணங்கினால் இறை அருளும். மேலும் உள் ஒளி கூடும்.

ஆம் மகனே...
அதனால் தான் ஒளி இல்லாத இரவு நேரத்தில் தூங்கி சூரிய உதயத்தில் எழுந்து இயங்கி செயலாற்ற சொல்கிறோம்.

நன்றி குருவே.

தி. இரா. சந்தானம்
கோவை
அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம்
பொகளூர்
15.08.2020

No comments:

Post a Comment