Wednesday 1 January 2020

நகுஷன் வீழ்ச்சி

🌸🌻🌸🌻🌸🌻💐
ஓம் மகத்தான அகத்தீசாய நமஹ!
ஓம் அகஸ்திய பரமசித்தாய நமஹ!!

 *நகுஷன் வீழ்ச்சி
* ....

ஸ்ரீ தேவீ பாகவதம்

 *அகத்தியரால்* தேவேந்திரன் துயர் நீக்கமும்
நிகழப்போகும் *தருமனின்* கீர்த்தியும்

<<< _எவன் எந்தக் கர்மத்தைச் செய்கின்றானோ அவன் அந்தக் கர்மபலத்தை யவசியமா யனுபவிப்பான்_ >>>

நகுஷன் மிகவுஞ் சந்தோஷமடைந்தவனாய்க் கவலை யற்றுச் சிவிகையைக் கொண்டுவரச்செய்து அம்மகரிஷிகள் தாங்கி நடப்ப , இந்த நகுஷன் சிவிகையை நடத்தத் தொடங்கினன் . இவன் *வினையும்* தீவிரமாயிவனை நடத்தத் தொடங்க , அவ்வினையை  *அம்பிகையினுடைய* *மாயாசக்தியும்* நடத்தத் தலைப்பட்டது . இவ் வாறு மாயையும் வினையும் மேன்மேல் முடுகி முயலவே *அறிவாகிய* பெருஞ்செல்வமிழந்த நகுஷன் *காமம்* *வெகுளி* *மயக்கமென்ற* மூன் றனுட்பட்டு காமத்தை *இந்திராணியினிடத்தும்* , மயக்கத்தைத் *தன்னறி* வினிடத்தும் , வெகுளியைத் *தானூர்ந்துவரும்* *சிவிகை யைப்* *பொறுத்து வருபவருள்* *ஒருவராகிய அகஸ்திய* *முனிவரிடத்து* மாக்கினான் .

ஓ அரசனே ! நகுஷனுக்குப் பின் விளைந்த விளை வைக் கேட்பாயாக : ( 44 - 50 )

சிவிகையின்மீதேறி அதனைச் செலுத்தத் தொடங்கிய நகுஷன் , வினைவசத்தான் அத்தருணம் இன்மையுளின்மையாகிய அறி வின்மையை நிலைக்களமாய்ப் பெற்றிருந்தன னாதலின் "

 ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலு " மாகிய *பெருந்தவத்தினர்* தனது சிவிகையைப் பொறுத்துவரும் அருமையையுணராது ,

ஆகார மாயுண்ட *வாதாபி* என்னும் அசுரனைத் தமது வயிற்றினிடத்தி லேயே ஜீர்ணமாய்ப் போகக் கரத்தால் வயிற்றைத் தடவினவரும்

 *சமுத்திர நீரை* ஓருளுந்தளவாக்கி ஆசமனமாகவுண்டவரும் ,

 *விந்த கிரியை* யடக்கினவருமாகிய

 *அகஸ்திய முனிவரது* *திருமுடிமேல்*
 *தனது கால்* தாங்கும்படித் தொங்கவிட்டுக் கையிலுள்ள *பிரம்பால்* அவரைத் தாக்கி *ஸர்ப்ப* *ஸர்ப்பென்றான்* (இங்கே ஸர்ப்ப என்றால் துரிதமாக என்று பொருள்படும்) .

 உடனே அகஸ்திய முனிவர் நீயா என்னை ஸர்ப்பவென்று சொல்லத்தக்கவனென்று கோபங் கொண்டு

எந்தக் காட்டில் சங்கடங்கள் பெரிதாக நேரிடுமோ
அக் காட்டில் அநேகமாயிரவருஷம் பெருந்தேகமுள்ள ஸர்ப்பமாய்க் கிடப்பாயாக வென்று சபித்தனர் .

 அதனைக்கேட்ட நகுஷன் நடு நடுங்கி ,
 ஐயரே ! அடியேன் செய்த பிழையைப் பொறுத்தருள்க வென்று வேண்டலும் குருமுனிவர் ,

 சற்றிரங்கினவராய் ,

 ஓ நகுஷனே ! நீ மலைப்பாம்பாகவானாலும் உன்னுடைய பராக்கிரமத்தி னால் சஞ்சரித்து மீண்டும் சுவர்க்கத்தை வந்தடையப் போகின்றாய் .

 *யுதிஷ்டிரனென்று* *பிரசித்திபெற்ற* *தருமனுன்னைப்* பார்த்துக் கேட்கும் கேள்விகளுக்கு நீ விடைகூறும்போது இச்சாபம் நீங்குமென்றனுக்கிரகித்தனர் .

 நகுஷன் அவ்வனுக்கிரகத்தைப் பெற்றுச் *சுவர்க்கத்தினின்றும்* *வீழ்ந்தான்* .

இச்செய்தியையறிந்த *பிரகஸ்பதி* வேகமாய் *மானஸசரசுக்குப்* போய் இந்திரனைக் கண்டு நடந்த செய்திகளைச் சொல்ல , இந்திரன் கேட்டுச் சந்தோஷமடைந்து அவ்விடத்திலேயே யிருந்தனன் .

தேவர்களும் முனிவர்களும் நகுஷன் பூலோகத்தில் வீழ்ந்ததைப் பார்த்து யாவரும் இந்திர னிருக்குமிடத்தைச் சேர்ந்து அவனைச் சமாதானப்படுத்தி மரியாதை யுடன் சுவர்க்கத்துக் கழைத்துக்கொண்டு போய் சிம்மாசனத்தி லிருத்தி மங்களகரமான அபிஷேகம் செய்தார்கள் .

 இந்திரன் அந்தப்புரம் போய் மிக்க பிரேமையோடு கூடின சசியோடு நந்தனவனத்தில் கிரீடித்துக் கொண்டிருந்தனன் .

ஒ அரசனே ! விருத்திராசுரனால் துன்பமடைந்த இந்திரன் தேவியனுக்கிரகத்தாலன்றோ தன்னிடம் போய்ச் சுகமாய் வாழப் பெற்றனன் ?

எவன் எந்தக் கர்மத்தைச் செய்கின்றானோ அவன் அந்தக் கர்மபலத்தை யவசியமா யனுபவிப்பான் .

செய்யப்பட்ட *சுபாசுபகர்மம்* *அனுபவித்தாலல்லது *தீருதலில்லையென்றார்* வியாச முனிவர் . ( 51 - 67 )

ஓம் லலிதாயை நம :

🌻🌸💐🌻🌸💐🌻