Thursday, 9 January 2020

ஏழுமலையான் புகழ்

🌹
🙏

ஏழுமலையானை எல்லாருமே "பணக்கார சுவாமி' என்பர். ஆனால், அவர் கடன்காரர். அதுமட்டுமல்ல, எளிமையையே அவர் விரும்புவார்.

திருப்பதி அருகிலுள்ள சுத்தவாகம் என்ற கிராமம் உள்ளது. அங்கு தன் மனைவி மாலினியுடன் வசித்த பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி, பானைகள் செய்து விற்று வந்தார். அவர் ஏழுமலையானின் தீவிர பக்தர். மண்ணால் செய்யப்பட்ட புஷ்பங்களைத் தயாரித்து, தன் வீட்டில் இருந்த வெங்கடாஜலபதி சிலைக்கு அணிவித்து வழிபட்டு வந்தார். அவரது நிஜ பக்தியைப் பாராட்டும் விதத்தில் ஏழுமலையான் அந்த மண்சிலையில் பிரசன்னமானார்.

""பீமனே! உன் பக்தி அபரிமிதமானது. என் கோயிலில் இனி எனக்கு மண்பாண்டத்திலேயே நைவேத்யம் செய்ய வேண்டும்,'' என்று அருளியதுடன் தேவலோகத்தில் இருந்து விமானத்தை வரவழைத்து அந்த தம்பதியரை வைகுண்டத்திற்கு அனுப்பி வைத்தார்.

ஏழுமலையான் குடியிருக்கும் மலையும் சிறப்பு மிக்கது. ஆதிசேஷன் வடிவத்தில் இம்மலை இருப்பதால் "சேஷாசலம்' என்றும், அந்த மலையில் வேதங்கள் இருப்பதால் "வேதாசலம்' என்றும், பூலோகத்திற்கு இந்த மலையைக் கருடன் கொண்டு வந்ததால் "கருடாசலம்' என்றும், விருக்ஷன் என்ற அசுரன் இங்கு மோட்சம் பெற்றதால் "விருக்ஷõத்ரி' என்றும், அஞ்சனாதேவி தவம் செய்து அனுமனைப் பெற்றெடுத்த தலம் என்பதால் "அஞ்சனாத்ரி' என்றும், மகிழ்ச்சி தரும் மலை என்பதால் "ஆனந்தகிரி' என்றும், பாவங்களைப் போக்கும் மலை என்பதால் "வேங்கடாசலம்' என்றும் அழைக்கப்படுகிறது.

ஏழுமலைவாசனை வணங்குபவர்களின் பாவம் நீங்கும். இந்த சரிதத்தைப் படித்தவர்களின் இல்லங்களில் செல்வம் பெருகும்.
ஓம் நமோ நாராயணாய! கோவிந்தா! கோவிநதா
🕉🙏🕉