Sunday, 5 January 2020

அகத்தியர் வாக்கு - ஏதோ ஒரு கஞ்சி போல் வைத்து படைக்க, அதை "பால் சாதமாக" அரங்கன் மாற்றி அருளினார்.

🌸🌸🌸🌸🙏🌺🌺🌺🌺

*அஉம் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு*

🌺🌺🌺🌺🙏🌸🌸🌸🌸

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"ஏறத்தாழ நான்காயிரத்து சொச்சம் ஆண்டுகளுக்கு முன்னால், இந்த தமிழகத்திலே, ஸ்ரீரங்கம் பகுதியிலே மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டது. பிரளயம் வடிந்து, மீண்டும் இடம் பெயர்ந்த மக்கள் எல்லாம் மாண்ட பொழுது, தொடர்ந்து மழை பெய்தது. பிரளயம் என்றால் உலகமே அழிந்து விடாதப்பா. ஆங்காங்கே சிறு, சிறு அழிவுகள் ஏற்படும். அப்போதெல்லாம், அரங்கத்தில் இருந்து, அரங்கனை பூசை செய்யும் பாக்கியத்தை, இங்கு வந்து செல்லும் பலரும் பெற்றிருக்கிறார்கள். *ஒரு முறை அரங்கனுக்கு "தளிகை" ஏதும் செய்யவியலாத சூழல் ஏற்பட்ட பொழுது, அவரவர்கள், தம் வீட்டிலே உள்ள, தரக்குறைவான தானியத்தை எடுத்து வந்து, "இதுதான் இருக்கிறது" என்று கொடுத்து, அதை ஏதோ ஒரு கஞ்சி போல் வைத்து படைக்க, அதை "பால் சாதமாக" அரங்கன் மாற்றி அருளினார்.
அப்படி அரங்கனை சோதித்தவர்களில் எம் சேய்களும் உண்டு."*

🌺🌺🌺🌺🙏🌸🌸🌸🌸

*கந்த சீடன் புகழ் ஓங்குக*

🌺🌺🌺🌺🙏🌸🌸🌸🌸