Monday, 6 January 2020

கோ பூஜை, சுகப்ரம்மர் கேள்வி பதில்

*பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா?*

 *தலை* - சிவபெருமான்
 *நெற்றி* - சிவசக்தி
 *வலது கொம்பு* - கங்கை
 *இடது கொம்பு* - யமுனை
 *கொம்புகளின் நுனி* - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.
 *கொம்பின் அடியில்* - பிரம்மன், திருமால்
 *மூக்கின் நுனி* - முருகன்
 *மூக்கின் உள்ளே* - வித்யாதரர்கள்
 *இரு காதுகளின் நடுவில்* - அஸ்வினி தேவர்
 *இரு கண்கள்* - சூரியன், சந்திரன்
 *வாய்* - சர்ப்பாசுரர்கள்
 *பற்கள்* - வாயுதேவர்
 *நாக்கு* - வருணதேவர்
 *நெஞ்சு* - கலைமகள்
 *கழுத்து* - இந்திரன்
 *மணித்தலம்* - எமன்
 *உதடு* - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
 *கொண்டை* - பன்னிரு ஆதித்யர்கள்
 *மார்பு* - சாத்திய தேவர்கள்
 *வயிறு* - பூமிதேவி
 *கால்கள்* - வாயு தேவன்
 *முழந்தாள்* - மருத்து தேவர்
 *குளம்பு* - தேவர்கள்
 *குளம்பின் நுனி* - நாகர்கள்
 *குளம்பின் நடுவில்* - கந்தர்வர்கள்
 *குளம்பின் மேல்பகுதி* - அரம்பெயர்கள்
 *முதுகு* - ருத்திரர்
 *யோனி* - சப்த மாதர் (ஏழு கன்னியர்)
 *குதம்* - லட்சுமி
 *முன் கால்* - பிரம்மா
 *பின் கால்* - ருத்திரன் தன் பரிவாரங்களுடன்
 *பால் மடி* - ஏழு கடல்கள்
 *சந்திகள்* - அஷ்ட வசுக்கள்
 *அரைப் பரப்பில்* - பித்ரு தேவதை
 *வால் முடி* - ஆத்திகன்
 *உடல்முடி* - மகா முனிவர்கள்
 *எல்லா அவயங்கள்* - கற்புடைய மங்கையர்
 *சிறுநீர்* - ஆகாய கங்கை
 *சாணம்* - யமுனை
 *சடதாக்கினி* - காருக பத்தியம்
 *வாயில்* - சர்ப்பரசர்கள்
 *இதயம்* - ஆகவணியம்
 *முகம்* - தட்சரைக் கினியம்
 *எலும்பு, சுக்கிலம்* - யாகத் தொழில்

 *அனைத்தும் பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.* *ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள். அப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள். எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.*

 *கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது’ என்று சொன்னது.*

 *லட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள். லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.*

 பிராயச்சித்தம்

ஸ்ரீமத் பாகவதத்திலே ஆறாவது ஸ்கந்தத்திலே பரீக்ஷித் மகாராஜா சுகப்பிரும்மரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கிறான்.

அதிலே ஒரு கேள்வி:

'சுவாமி! பிராயச்சித்தம் என்று சில கர்மாக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன - பாபத்தைப் போக்குவதற்காக. பிராயச்சித்தம் எதற்காகச் செய்வது?

யானையைக் குளிப்பாட்டி விட்டால் அது மீண்டும் மண்ணை அள்ளித் தலையில் போட்டுக் கொள்கிறதே! அந்த மாதிாிதானே மனிதன் பிராயச்சித்தம் செய்தாலும் திரும்பவும் பாபத்தைப் பண்ணுகிறான்.

அப்படியானால் பிராயச்சித்தத்தினால் பிரயோஜனமில் லையே . அது வீண்தானே? '.அடியேன் மனத்தில் இவ்வாறு தோன்றுகிறது. அதைத் தெளிவிக்க வேண்டும் என்று சுகபிரம்மத்தைப் பார்த்து பரீக்ஷத் கேட்டதும் அவா் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

இந்த மாதிாி நுணுக்கமாகக் கேள்விகள் கேட்பாரைக் கண்டால் மகான்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.

சிஷ்யனானவன் பிரச்னமதியாக இருக்க வேண்டும் - அதாவது கேள்விகள் கேட்கும் புத்தி உடையவனாக இருக்க வேண்டும். அந்தக் கேள்விகள் பரீட்சார்த்தமாக இருக்கக்கூடாது. சாஸ்திர ரீதியாக இருக்க வேண்டும்.
பிரச்னோபநிஷத் என்ற உபநிஷத்தானது கேள்வி எப்படி கேட்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது.

பரீக்ஷத்தின் கேள்வியைக் கேட்ட சுகர் சொல்கிறார்

பிராயச்சித்தத்தினுடைய தன்மையை நீ தொிந்து கொள்.
ஒருத்தர் பிராயச்சித்த கர்மாவாக ஏகாதசி உபவாஸம் இருந்து, துவாதசி பாரணை பண்ணி, யாத்ரா தானம் பண்ணி, க்ஷேத்ராடனம் கிளம்புகிறார். . புண்ய நீராடிவிட்டுத் திரும்பி வந்து தசமி ராத்திாி உபவாஸம்; ஏகாதசி நிர்ஜல உபவாஸம். துவாதசி பாரணை பண்ணி அதற்கப்புறம் சகஸ்ரநாமம் சொல்லி, கீதையைப் பாராயணம் பண்ணி, ராத்திாி யோகம் என்ற நிலையில் பகவானைத் தியானம் பண்ணிக் கொண்டேயிருந்தால் ...பாபங்கள் அகலும்.

ஆனால் உபவாஸம் இருந்தவருக்கு உணவு உள்ளே போனதுமே உறக்கம் வருகிறது. அப்புறம் இரவெல்லாம் எவ்வாறு தியானம் செய்வார்? ஆனால் சாஸ்திரமோ 'தூங்காதே' என்கிறது.இதற்கு என்ன பண்ணலாம் என்று
கேட்டால் ஒரு வழியிருக்கிறது.

பகலவனைக்கண்ட பனிபோல் பாபம் நம்மை விட்டு விலக வேண்டுமானால் நாராயண நாமத்தை பாராயணம் பண்ணவேண்டும்.
'வாசுதேவ பாராயண: ' - திருஷ்டாந்தத்தோடு சொல்கிறாா் சுகபிரும்மம்.

ஒரு மகாிஷி காட்டு வழியே வருகிறாா். மூங்கிலெல் லாம் ஒன்றோடு ஒன்று உரசித் தீப்பிடித்து எரிகின்றன. காட்டைத் தகிக்கிறது அக்னி! மகாிஷி பார்த்துக் கொண்டேயிருக்கிறார் ஐயோ! இவ்வளவு பசுமையான காடு அழிந்து கருகிப் போய் விட்டதே! என்று ரொம்ப வருத்தம் அவருக்கு.

க்ஷேத்திராடனமெல்லாம் முடித்து, மூன்று மாதம் கழித்து அந்த வழியிலே திரும்புகிறாா். பார்த்தால், அந்த இடமெல்லாம் - காிக்கட்டையாக இருந்த இடமெல்லாம் - பசுமையாக ஆகிவிட்டது.

அப்போதுதான் அவர் மனத்திலே ஒன்று தோன்றியது. அக்னி இருக்கிறதே,, அது எல்லாவற்றையும் எரிந்தது - எதை எதை என்று பார்த்தால், பூமிக்கு மேல இருக்கும் படியான மரத்தை எரித்ததே தவிர பூமிக்குள்ளே இருக் கும்படியான வேரை அழிக்கக் கூடிய சக்தி அக்னிக்கு இல்லை.வேர் உள்ளே இருந்ததனாலே,மழை பொழிந்த துமே முளைத்துவிட்டன மூங்கில்கள்.

அந்த மாதிாிதான். எத்தனையோ பிறவிகள் நாம் அடைந்து , துர்லபோ மனுஷோ தேகோ என்று சொல்லப்படுகிற மனித ஜன்மாவை அடைந்திருக்கி றோம். பாபத்தைத் தூண்டக்கூடிய வாஸனா பலம் உள்ளுக்குள்ளே வேர் மாதிாி இருக்கிறது.

பிராயச்சித்த கர்மா இருக்கிறது பாருங்கள்...அது மேலே இருக்கிற மூங்கில்கள், செடி கொடிகளை அழிப்பது போல, பாவத்தை போக்குமேயொழிய, பாபங்களைச் செய்வதற்கு நம்மைத் தூண்டக்கூடிய, உள்ளே இருக்கிற கெட்ட வாசனைகளைப் போக்கடிக்காது.

அந்தச் சக்தி பிராயசித்த கர்மாக்களுக்குக் கிடையாது.

பாபங்களை வேரோடு களைய வேண்டுமானால்,

வாசுதேவ பாராயண: எம்பெருமானை உள்ளுக்குள்ளே நிலைபெறச் செய்ய வேண்டும். விடாமல் அவனை நினைக்க வேண்டும்.

பிரஹலாதனுக்கு இந்த அறுபடாத நினைவு சித்தித்தது.

சதா சர்வ காலம், சந்தத் தாரையாக விடாமல் அவனை யார் நினைக்கிறார்களோ, அத்தகையவர்களை மறுபடியும் பாபம் செய்கிற சித்தம் ஏற்படாமல் ரக்ஷிக் கிறான்...பரமாத்மா!

ஆகையினாலே, பரமாத்மாவை மனத்தில் தியானம் பண்ண, நாம் கெடுதல் நீங்கி பவித்ரமாகிறோம்.