Sunday, 5 January 2020

ஞானஸ்கந்தர் ஜீவ நாடி வாக்கு - அந்தியூர்


அருள்மிகு ஞானஸ்கந்தர் ஆலயம் - அந்தியூர்

நாள் : 04.01.2020, காலை 10.10 மணி

நாடி வாசிப்பு - குருஜி ஜெகதீஸ்வரன் அய்யா அவர்கள்

அருள் கேட்பவர் - தி. இரா. சந்தானம், கோவை

*********************************************************************************
கடவுள் வாழ்த்து

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான  மொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருக வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபாடு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மனம் புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாச்சலம் அமர்ந்த பெருமாளே

- திருச்சிற்றம்பலம் -

*********************************************************************************

காற்றாகி நண்மை அனுகூலம்
மைந்தன் பிறவி நிலை கண்டதொரு வேளை அது லாபம்
வைத்த நன் வேல் தன்னை வைத்ததுவும் பூசை
செப்பிடுவேன் வித்தையது லாபம்
வேல் பூசை மிக்கவும் செய்து வரும் பிள்ளாய்

பகுத்த நன் கந்தனவன் குந்தமதில் இருந்து உனக்கு
ஆசியது மும்முறையும் இட்டனன் - காண்

வாகாக ஆதலால் அப்பூசையை கந்தன் அறிந்திட்டேன்
நல்லதொரு திருப்தியாக இருக்கின்ற நிலை கண்டேன்

ஆதலாலே மிக்கவும் இதை தொடர்ந்து செய்யப்பாரு
சேர்வுபடு வேல் விருத்த பாராயணம் செய்வதோடு
புஜங்க ஸ்தோத்திரத்தையும் சேர்த்து உச்சரித்து வா

நலமுண்டு நல்லதாம் அதன் முன் செந்திலம்பதியிலே
உபதேசமான ஸ்தோத்திரம்
சங்கரன் உதித்ததுருவாகும்

நலமுண்டு நல்லதாம் பண்ணீரு இல்லை விபூதி கண்டு
சூர சங்கார மூர்த்தி முன் அமர்ந்து சிறப்பாக
புஜங்க ஸ்தோத்திரத்தை வேல் வைத்து அங்கும்
சிறப்பாக நல்லதாம் சூர சங்கார மூர்த்தியிடம்
வேல் வாங்கி மீண்டும் புஜங்க ஸ்தோத்திரத்தை விருத்த ஸ்தோத்திரத்தை
படிக்கும் முன்னே கடல் நீராடி நாழிக்கிணறாடி
சிறப்பாக நன்மை நிலை கண்டு
ஓர் அர்த்த சாம பூஜை கண்டு
மறுபடியும் அதிகாலை பள்ளியெழுச்சியும் கண்டு வா

இப்படியும் செய்து வந்தால் உனக்கு
வாக்கும் பலியதாகும்
ஈசன் அருளோடும் சித்தர்கள் அனுகூலம் தரிசனம் கூடும்
சோதிடம் சாத்திரம் வேதாந்தம் வைதீகம் சித்தர்கள் தத்துவம் வெளியாகும்

_____________________ உபதேசம் பின் உண்டு தருவேன்
அது மட்டும் இக்காலம் இப்பூசைதனை மிக்க செய்ய பார்
மனைவி சுகமாவாள் தாய் சுகமாவாள்
அனுகூலமாய் வந்ததொரு வேளை
பிள்ளைகள் இரண்டும் படித்து கரை ஏறும்
நலமாக உனக்கு இடைகழியும் சீர் புகழும் இளையனார் வேலூரும்
தரிசனம் மிக்கவும் சொன்னேன் செய்தாய்

நலமுண்டு ஆதலால் இக்காலம்
செந்திலம்பதியே உனக்கு உகந்த ஊராம்
சென்று வா
நல்லதொரு வீட்டில் மிக்கவும் அகத்தியர் லோபாமுத்ரா
தன்னையும் இணைத்து அதிகமாய் பூசிக்கப்பார்

அகத்தியன் உனக்கு குரு
அகத்தியனே உனக்கு தந்தை
அகத்தியனே கந்தனுக்கு சீடன்
ஆதலால் இன்னவன் கந்த சீடனும் ஆவான்

நட்பாக லாபம் ஆதலால்
முறையாகவே கந்தன்
விரும்பியே இன்னவன் வீட்டில் பூசையை ஏற்கின்ற நேரம்
நெய்வேதிய குறையோ தூப தீப குறையோ
எது வந்தாலும் கவலையில்லை
சிரத்தையான பக்தியே முக்கியம் என்பதால்
இன்னவன் பக்தி செலுத்தும் பிள்ளை
பக்தனாக இன்னவனை ஏற்று
பரிபூரண ஆசியதை கொடுப்பேன்

இன்னவன் அகத்தியனுக்கு ஆலயம் அமைப்பான்
அகத்தியன் புகழை பரப்புவான்

நலமாக நல்லபடி அனுகூலம்  பெறுகின்ற நேரம் அது தன்னில்
முறையாக பரப்புவான்

முறையுண்டு நண்மையாகும்

ஆதலால் குருப்புகழும் கருப்புகழும்
திருப்புகழாய் இன்னவனுக்கு சித்திக்குமே

பொறுமை இருப்பாய், நலமாகி காண
உரைத்த நன் செந்திலம்பதி சென்று வருவாய்

மிக்கவும் உபதேசம் சொல்வேன்
சித்திரையில் உனக்கு ஒரு முக்கிய உபதேசம் உண்டு
சித்திரை திங்கள் கேள் என்று சிங்கார வேலன் பகர்ந்தனன்

- முற்றும் -