Friday, 27 September 2019

ஓம் ஹ்ரீம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கிரே, க்ஷம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா

ஸ்ரீ பிரத்யங்கராதேவி அபிஷேகம் தீபம் தரிசனம் வீடியோ !இன்று 28/9/2019 மகாளய அமாவாசை அன்று தரிசித்து மகிழ   திருப்பூர் அருகில் அமைந்துள்ள அழகு அதர்வண பிரத்யங்கராதேவி வழிபாடு செய்ய பதிவு செய்துள்ளோம் ஸ்ரீ பிரத்யங்கராதேவி வழிபாடு செய்ய நல்லது நடக்கும்  !இன்று நேர்ந்துகொண்டு இன்றோ அல்லது சந்தர்ப்பம் வாய்க்கும் வேளையில் கும்பகோணம் அய்யாவாடி சென்று பிரத்யங்கரா அம்மனை 108 போற்றி சொல்லி வழிபட எதிரிகளை வெல்லக்கூடிய சக்தி தருவாள் !மிக சக்தி வாய்ந்தவள் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி ஆபத்தில் வந்து காத்து நிற்பாள் !ஸ்ரீ பிரத்யங்கரா தேவி திருவடிகள் சரணம்

ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் 108 போற்றி

ஓம் சகல நாயகி போற்றி

ஓம் சர்வ ப்ரத்யங்கரா தேவி போற்றி

ஓம் தர்ம பரிபாலதையே போற்றி

ஓம் தக்க வரமருள் தாயேபோற்றி

ஓம் துக்க நிவாரணி மாதா போற்றி

ஓம் துஷ்ட சிஷ்ட சம்ஹார போற்றி

ஓம் இஷ்ட குண சோதரியே போற்றி

ஓம் கஷ்ட வழி தகர்ப்பாய் போற்றி

ஓம் எண்ணவரும் பிரத்யங்கரா போற்றி

ஓம் ரூபமது ஓங்காரியே போற்றி

ஓம் வரிந்த தோற்றமானாய் போற்றி

ஓம் நெடிதுயர் விஸ்வரூபி போற்றி

ஓம் ஹரத்துள்ளாயே போற்றி

ஓம் கபால மாலையணிந்தாயே போற்றி

ஓம் எண்ணிலா சிரமுள்ளாய் போற்றி

ஓம் எண்ணமதி அறிவாய் போற்றி

ஓம் வண்ண உயிர் வடிவே போற்றி

ஓம் சிம்மவாகினி பிரத்யங்கரா போற்றி

ஓம் சிங்க முகமுடையவலே போற்றி

ஓம் சூலமது ஏந்தினாயே போற்றி

ஓம் சதுர்கரம் தரித்தாயே போற்றி

ஓம் ஸ்ஹம்கார சக்தியே போற்றி

ஓம் சிவந்த விழி மூன்றுடையாய் போற்றி

ஓம் சீற்றத்தில் சர்வ பாப நாசி போற்றி

ஓம் தெற்றுப்பல் எண்ணிலாய் போற்றி

ஓம் சந்திரனை தரித்தாயே போற்றி

ஓம் இந்திரனும் பணிந்தாயே போற்றி

ஓம் கர்ணகோர ரூபமே போற்றி

ஓம் ஞானவழி எழிலே போற்றி

ஓம் நாளும் இடர் அழிப்பாயே போற்றி

ஓம் பாடும் மனம் அமர்வாயே போற்றி

ஓம் ஓடும் மனம் நிறுத்துவாயே போற்றி

ஓம் வாடும் பயிர் காபாயே போற்றி

ஓம் வானம் பூமி காபாயே போற்றி

ஓம் ரூபா ரூபம் கலந்தாயே போற்றி

ஓம் வினை நீக்கும் பிரத்யங்கரா போற்றி

ஓம் எதிர்வினை பொசிப்பாய் போற்றி

ஓம் ஏவியோரை அழிப்பாய் போற்றி

ஓம் எல்லோர்க்கும் சமமே போற்றி

ஓம் ஏற்றத் தாழ்வு இல்லாயே போற்றி

ஓம் பக்தர் மனம் வசிப்பாயே போற்றி

ஓம் பக்தர் குறை தீர்ப்பாயே போற்றி

ஓம் முக்தி தரும் சக்தியே போற்றி

ஓம் சித்தி வழி சித்தியே போற்றி

ஓம் சக்தி தரும் பிரத்யங்கரா போற்றி

ஓம் சிவந்தவாழி பேரெழிலே போற்றி

ஓம் உகந்த வழி காட்டுவாய் போற்றி

ஓம் புகலும் மொழி வருவாயே போற்றி

ஓம் இகம் புரம் சுகமாவாயே போற்றி

ஓம் தவம் தரும் யோகமாயே போற்றி

ஓம் தயை சுவை மோகனமே போற்றி

ஓம் கண் ஏறு நகிப்பாயே போற்றி

ஓம் சூன்ய ஏவல் எரிப்பாயே போற்றி

ஓம் சர்வ லோக பிரத்யங்கரா போற்றி

ஓம் பத்ரகாளி வடிவே போற்றி

ஓம் பாரோச்சும் சக்தீ போற்றி

ஓம் சூலினியின் துணையே போற்றி

ஓம் சூரர்களை வதிப்பாயே போற்றி

ஓம் சூழ்ச்சிக்கு வீழ்ச்சியே போற்றி

ஓம் சுந்தர வதன மாதேவி போற்றி

ஓம் நெருப்பின் நெருப்பானாய் போற்றி

ஓம் விருப்பமது அணைப்பாயே போற்றி

ஓம் திருப்பமது பிரத்யங்கரா போற்றி

ஓம் மகிஷசுர மர்த்தினியே போற்றி

ஓம் மாவீர கோகிலமே போற்றி

ஓம் சர்வபாப விநாசனி போற்றி

ஓம் சத்ய ஜோதி வடிவமே போற்றி

ஓம் உள்ளம் உள்ளதறிவாய் போற்றி

ஓம் உகந்தது தருவாயே போற்றி

ஓம் நினைத்தது நடத்துவாய் போற்றி

ஓம் கணித்தது புகுவாயே போற்றி

ஓம் விரைந்துதவும் பிரத்யங்கரா போற்றி

ஓம் ஆபத் சகாயமே போற்றி

ஓம் ஆகாய வெளிவழியே போற்றி

ஓம் ஆயிரம் வியழி ஜோதி போற்றி

ஓம் ஆதரவு தர வருவாயே போற்றி

ஓம் சங்கர ஸ்வரூபியே போற்றி

ஓம் பார்வதி மய சக்தியே போற்றி

ஓம் ப்ராணரூப ஆட்சியே போற்றி

ஓம் பிரணவரூப ஒலியே போற்றி

ஓம் சரணாகதம் பிரத்யங்கரா போற்றி

ஓம் புவனேஸ்வரி ரூபமே போற்றி

ஓம் புவன யோக வீரமே போற்றி

ஓம் யுக யுகாந்திர ஆற்றலே போற்றி

ஓம் தவ ரூப மய ஸ்வரூபமே போற்றி

ஓம் புத பேத நாசினி போற்றி

ஓம் யோக தவம் அருள்வாய் போற்றி

ஓம் வனநேச பாரிதியே போற்றி

ஓம் குண ரூப சாரதியே போற்றி

ஓம் வரவேண்டும் பிரத்யங்கரா போற்றி

ஓம் டமருகம் தரித்தாய் போற்றி

ஓம் சூலமும் கொண்டாய் போற்றி

ஓம் பக்தரின் பிரியமே போற்றி

ஓம் பணிந்தோர்க்கு காவலே போற்றி

ஓம் ராஜராஜ தேவியே போற்றி

ஓம் கங்காதர காருண்யே போற்றி

ஓம் வித்தைக் கதிபதியே போற்றி

ஓம் வித்வ மூல சித்தமே போற்றி

ஓம் வேண்டதருள் பிரத்யங்கரா போற்றி

ஓம் கல்ப விருட்சமானாய் போற்றி

ஓம் காமதேனு மடியே போற்றி

ஓம் காற்று நீர் நேருப்பே போற்றி

ஓம் சித்த வித்யா புத்தியே போற்றி

ஓம் தத்துவ சத்தியத் தாயே போற்றி

ஓம் மகாபல மாசக்தியே போற்றி

ஓம் மகா பைரவி தேவியே போற்றி

ஓம் நலம் தரும் நாயகியே போற்றி

ஓம் ஆத்மலய பிரத்யங்கரா போற்றி

ஸ்ரீ பிரத்யங்கரா தேவி திருவடிகள் சரணம்