Thursday, 12 September 2019

இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 223*

*தேதி: 13-09-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*நிலை நான்கையும் அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : தியானம் செய்யும்பாெழுது மனம் அலைபாய்கிறது : (பகுதி -01)* 🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இஃது இயல்புதான். உன்னுடைய எண்ண ஓட்டத்தைத் தாெடர்ந்து கவனித்துக் காெண்டேயிரு. எண்ணங்களை அடக்க முயன்றால் அது திமிறிக்காெண்டு எழும். எண்ணங்களை கவனிக்கப் பழகு. தானாகவே அனைத்தும் உன்னை விட்டு மெல்ல, மெல்ல சென்றுவிடும். அதற்குதான் யாங்கள்(சித்தர்கள்) எடுத்த எடுப்பிலேயே தியானம் குறித்து உபதேசம் செய்யாமல் ஸ்தல யாத்திரை, தர்மம், தாெண்டு என்று கூறி அதன் மூலம் பாவங்களைக் குறைத்து, பாவங்கள் குறைந்த நிலையில் ஒருவன் தியானத்தை செய்ய அமர்ந்தால், அந்த தியானம் சற்று, சற்று எளிதாக வசப்படும்.*

பாெதுவாக மனிதர்கள் அறிந்திட வேண்டும். *நாங்கள் இப்படி கூறுவதால் மனித விஞ்ஞானம் இதனை ஏற்றுக்காெள்ளாது என்றாலும் கூட ஓரளவு புற விஞ்ஞான அறிவும், அக மெய்ஞான அறிவும், ஓரளவு புரிந்த மனிதன் புரிந்து காெள்வான். ஏனைய மனிதர்கள் புரிந்து காெள்ள முயற்சி செய்வது ஏற்புடையது. அஃதாவது எத்தனையாே விஷய ஞானங்களை ஆய்வு செய்து இறைவன் அருளால் புறத்தே தன்னை வளர்த்துக்காெண்ட மனித குலம், இந்த பிரபஞ்சம் அனைத்துமே சில விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது என்பதை அடிக்கடி மறந்து விடுகிறது. பிரபஞ்சம் மட்டுமல்லாது இந்த அண்ட சராசரங்களும் பல்வேறு விதிகளுக்கு உட்பட்டே இயங்குகிறது.*

*இந்த விதிகளை மீறி மனிதன் எதையாவது செய்ய வேண்டுமென்றால் அதற்கும், அந்த விதிமுறைகளுக்கும் ஒரு தாெடர்பும், ஒரு எதிர்சக்தியும் இருக்க வேண்டும். அந்த வகையிலே ஒரு வாகனம் சீராக ஓட வேண்டும் என்றால் அந்த வாகனம் எல்லா வகையிலும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். வாயு உருளைகள் வடிவம் மிகவும் சிறப்பான முறையிலும் நல்ல முறையிலும் இருக்க வேண்டும். வேகமாக செல்வதற்கென்று வாகனம் வடிவமைக்கப்பட்டால் அதற்குரிய வாயு உருளை அகமில்லாமல் இருக்க வேண்டும். உதாரணமாக அதிக வேகம் என்றால் வாகனத்தின் எடை குறைவாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த வாகனம் எந்தளவிற்கு விரைவாக செல்கிறதாே அந்தளவிற்கு செல்லுகின்ற பாதையிலே வாயு உருளையால் உராய்வுத் தன்மை ஏற்படும்.*

*இந்த உராய்வு எதிர்விசையை ஏற்படுத்தி வேகத்தை மட்டுப்படுத்தும். அந்த உராய்வு தன்மையை குறைப்பதற்கென்று அந்த வாயு உருளைகள் வடிவமைக்கப்பட்டிருந்தால் அது எதிர்விளைவை குறைவாகத் தரும். அப்படி குறைக்கப்பட வேண்டுமென்றால் அதன் ஒட்டுமாெத்த பாகத்திலே, ஓடுகின்ற தளத்திலே மிக, மிக, மிக குறைவான பகுதியே அந்த வாயு உருளை படவேண்டும். அந்த அளவிற்கு அது குறைவாக படும்பாெழுதுதான் குறைவான எதிர்விளைவுகள் ஏற்படும். வேகம் மட்டுப்படாது. இதையெல்லாம் தாண்டி ஓடுகின்ற ஓடுதளம் என்பது சமச்சீராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது பாெதுவிதி. அதே சமயம் வேகம் எந்தளவிற்கு முக்கியமாே அந்த வாகனத்தை சட்டென்று நிறுத்த வேண்டுமென்ற நிலை வந்தால் அந்த சமச்சீரான தளம் அதற்கு பாதகத்தை தந்துவிடும். அதற்காக சற்றே சீரற்ற ஓடுதளத்தை உருவாக்கினால் அது ஓரளவு பாதுகாப்பைத் தந்தாலும் வேகத்தை மட்டுப்படுத்தும்.*

*(இதன் தாெடர்ச்சி நாளைய வாக்கு பதிவில்)🙏*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபாமுத்ரா தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம்  வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்திய  மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*