Monday, 9 September 2019

திருமண வரம் தரும் முருகனின் மந்திரம்

திருமண வரம் தரும் முருகனின் மந்திரம்:

"கிருபானந்த வாரியார் தந்த திருமந்திரம் 
திருமணம் விரைவில் நடைபெற உதவும் முருகனின் திருமந்திரத்தினை பற்றி இந்த பதிவில் பார்போம்.

திருமணத்துக்கு வரன் தேடிக்கொண்டு இருக்கின்ற பெற்றோரை கேட்டால், ஜோதிடத்தில் ஏதோவொரு தோஷத்தின் காரணாமாக தான் என் மகனுக்கு அல்லது மகளுக்கு இவ்வளவு ஆண்டுகள் திருமணம் தாமதம் ஏற்படுகின்றது என்று மக்கள் கூறுவார்கள். அந்த அளவுக்கு மக்களுடன் ஒன்றாக கலந்துவிட்டது ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கை.

சில நேரங்களில் ஜோதிடத்ததையும் பின்னுக்கு தள்ளும் அளவிற்கு விளங்குகின்றது இறைவனின் மீது நாம் வைக்கும் பற்று ஆகும். ஜோதிட சாஸ்திரங்கள் நம்மை கைவிடும் பொழுது இறைவனின் அருள் நமக்கு கைகொடுக்கின்றது. அந்த வகையில் முருகனின் அருள் முன் வந்து நம்மை காத்து நிற்கும் மந்திரம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருமண தடை உள்ளவர்கள் முருகனின் மீது முழு நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை பராயணம் செய்ய விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை.கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒரு பகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும் கூறுகிறார்.

ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடைபெறும் என்று தன்னுடைய உரையில் தெரிவித்துள்ளார். இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லது மாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோஷங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள் திருமணம் தொடர்பான நல்ல பதில் கிடைக்கும்.

திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில் விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மையாக விளங்குகிறது.

"விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயில் தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா

அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே."

ஓம் சரவண பவ...