Thursday, 5 September 2019

முருகனருள்









தன்னுள்ளே தவமாய்
தானறிய வழியாய்
என்னுள்ளே இருப்பவனே
எனக்காக துடிப்பவனே 
இருவிழியால் உனை மூடி 
பலவழியாய் எனை தேடி
ஒருஒளியாய் தனை நாடி
அறிவொளியாய் நீயிருக்க
ஆனந்தமாய் அகமிருக்க
 நான் வணங்கும் மாமலை
நான்முகன் வணங்கிய ஓதிமலை 
அகரமதிலேறி சிகரமதில்
நான்  சிறக்க விழிவழியாய்
வசந்தமது எனை அனைக்க
நான் தேடும் வேலவா
என்னுள்ளே  காட்சிதா
என்னுள்ளே தானிருந்து
எங்கெங்கோ தேடசெய்து
என்னிடம் நீ விளையாடும்
எத்தனையோ மாயமென்ன
மாயமது நீ செய்தால்
மந்திரமாய் ஏற்று கொண்டு
மன்னவனை தேடுகிறேன்
மனமிறங்கி வாராயோ
மனத்துள்ளே வாராயே
சிந்தையது உன் நினைவு
சிந்தனையில் உன் கணவு
சிந்தியது உன் வரவு
சித்தமது என் மனது
மந்திரங்கள் தேவையில்லை
தந்திரங்கள் தேவையில்லை
சிந்தை ஒன்று போதுமே
விந்தை அது காணுமே
அகத்துள்ளே காட்சியாய்
நிஜத்துள்ளே சாட்சியாய்
நீதானே வேலவா
நித்தம் என்னை ஆளவா”

கந்தனைப் போற்றுவோம் ! அறியாமை எனும் அஞ்ஞான இருளை அகற்றி .. மெஞ்ஞானமாகிய மிளிர்கின்ற பரம்பொருளின் திருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக !
“ ஓம் சரணம் சரணம் ஷண்முகா சரணம் “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..