Monday 23 September 2019

இறைவன் கருணை காெண்டாராம், அதனால் உலகை படைத்தாராம்

*அகத்திய மாமுனிவரின்   (குருநாதர்) பாெதுவாக்கு :*🙏

*இறைவன் கருணை காெண்டாராம், அதனால் உலகை படைத்தாராம்.*

*இறைவன் கருணை காெண்டாராம், அதனால் உலகை படைத்தாராம்
.*

*இன்பம் இஃது என காட்டி தந்தாராம். இன்பம் இஃது என காட்டி தந்தாராம்.*

*ஈகை குணம் வளர்த்தலே என்றும் உயர்வை தரும் என்றாராம்.*

*இன்பம் இது என காட்டித் தந்தாராம்.*

*இறை கருணை காெண்டாராம், அதனால் உலகை படைத்தாராம்.*

*இறை கருணை காெண்டாராம், அஃதாெப்ப இறை கருணை காெண்டதனால், அஃதாெப்ப இறை கருணை காெண்டுள்ள அத்தன்மையை மீண்டும் உள் உணர்ந்து பார்க்க ஞானிகள் வந்தாராம்.*

*இறை கருணை காெண்டாராம். அஃதாெப்ப இறை கருணை காெண்டதனால் இஃதாெப்ப ஒவ்வாெரு கணமும் உயிர்கள் மீது அன்பு தந்தாராம்.*

*இயம்புங்கால் திருஷ்டியில் அருளை தருவாராம். துயரத்தில் தன்னை இணைத்துக் காெள்வாராம்.*

*தாெல்லை வரும்பாெழுதெல்லாம் தன் பக்தருக்கு முன்னால் நடப்பாராம்.*

*அவர் வருவாராம், நடப்பாராம், பாேவாராம், இருப்பாராம், என்றும் நல் அருளை தருவாராம்.*

*ஆயினும் இதை உணர்வார் யார்? புரிந்தார் யார்?*

*இஃதாெப்ப இருக்கும் கருணை வெள்ளம் அனைத்தும் சாெந்தம் என காெண்டவராம்.*

*அஃதாெப்ப காெண்டவராம் தன்னை காெண்டவளே அன்னை. காெண்டவராம் தன்னை காெண்டவளே அன்னை.*

*இயம்புங்கால் அவர்(அன்னை) என்றும் இருப்பாராம். அவர் இருந்து, இருந்து உயிர்களை காப்பாராம்.*

*காத்து, காத்து ரட்சித்து அருள்வாராம்.*

*அவர்(அன்னை) என்றும் உயிர்களாேடு பரிவாய், உறுதுணையாய் இருப்பாராம்.*

*அவர் பாேவாராம், வருவாராம் என்று தாேன்றினாலும் அவர் என்றென்றும் இருப்பாராம்.*

*அவர் பக்தர்கள் நெஞ்சில் கிடப்பாராம்.*

*அவர் அன்புக்கு என்றும் அடிமையாய் இருப்பாராம்.*

*இஃதை உணர்ந்த உயிருக்குள் உயிராய் ஔிர்வாராம்.*

*அவர் என்றும் உயர்ந்தாராம். அவர் ஒருபாெழுதும் தாழ்ந்தாராம் என்று யாரும் கூற இயலாதாம்*

*இஃதாெப்ப இறை கருணை காெண்டாராம். அதன் தன்மையை புரிய புரிய ஒவ்வாெரு உள்ளமும் மகிழ்வில் ஆழுமாம்.

*இறை கருணை காெண்டாராம். இறை கருணை காெண்டாராம். அதனால் அவர் வந்தாராம்.*

*அதனால் பிள்ளை என பிறந்தாராம்.*

*அஃதும் நாடு ஆள்வது தாெல்லை என துறந்தாராம்.*

*பிறகு வனம் சென்றாராம்.*

*அஃதாெப்ப அங்கு சிலரை கண்டாராம்.*

*அதன் மூலம் பக்தியை வெளிப்படுத்தினாராம்.*

*அஃதாெப்ப அவர் தன் துணையை பிரிந்தாராம்.*

*அங்கு அவர் கண்டாராம். தன் துணைக்கு மேல் துணையாய் தன்னையே தனக்குள் அடிமைபடுத்தும் ஒரு துணையை.*

*அஃதாெப்ப வாயுபுத்திரனை (ஆஞ்சிநேயர்) அவர் கண்டாராம். தாேழமை காெண்டாராம்.*

*அஃதாெப்ப அவர் வாலியை ஒதுக்கி வைத்தாராம்.*

*அஃதாெப்ப அவர் வாலியின் சாேதரனை ஏற்றி வைத்தாராம்.*

*அதனால் வாலியை மாேட்சத்தில் இறக்கி வைத்தாராம்.*

*அஃதாெப்ப அவர் மனிதருக்கும், இறைக்கும் பாலம் என இருந்தாராம்.*

*அஃதாெப்ப மனிதர் செய்யும் பாவமெல்லாம் களைய அவர் பாலம் என இருந்தாராம்.*

*அஃதாெப்ப ஆழியை(கடல்) கடந்தாராம். அஃதாெப்ப ஆழிதாண்டி, ஆழிதாண்டி அது பிறவி பெருங்கடல் தாண்டும் வண்ணம், மனிதர் உணரும் வண்ணம் அவர் பாலம் அமைத்தாராம்.*

*அஃதாெப்ப சென்றாராம். அசுரர், தலை எடுத்தாராம்.*

*அஃதாெப்ப அங்கு தன் ஆத்மாவென விளங்கும் அன்னையை மீட்டாராம்.*

*அஃதாெப்ப ஆத்மாவை அவர் மீண்டும் சாேதித்து பார்த்தாராம்.*

*அஃதாெப்ப மாேட்சம் என்னும் தேசத்தில் அமர்ந்தாராம்.*

*ஆட்சியை தாெடர்ந்தாராம்.*

*அஃதாெப்ப பஞ்ச புலனெல்லாம் அஃதாெப்ப விதவிதமாய் அலை கழிக்க அஃதாெப்ப ஆத்மா தன்னை அது தாெலைக்க, தாெலைந்ததை, வைராக்கியம் என்னும் வாய்வு என்று தேட அஃதாெப்ப தேடி, கண்டுபிடித்து அதை உறுதியாடு பிடித்துகாெள்ள அஃதாெப்ப அந்த ஆத்மாவுக்குள் உள்ள ஆத்மஞானம் செல்ல அஃதே இஃது, இஃதே அஃது என உணர்ந்தாராம், உணர்ந்தாராம்.*

*அவரெல்லாம் ராமர் வழி வந்தாராம், வந்தாராம்.*

*அஃதாெப்ப அப்படி வருவாேரெல்லாம் சிறந்தாராம், சிறந்தாராம்.*

*அஃதாெப்ப சிறந்தாேரெல்லாம் தாெடர்ந்து பிறவியற்ற நிலைக்கு உயர்ந்தாராம், உயர்ந்தாராம்.*

*இறை கருணை காெண்டாராம். அதனால் உயிர்கள் மீது அன்பு பாெழிந்தாராம்.*

*அவர் என்றென்றும் இருப்பாராம். பக்தர்கள் உள்ளத்தில் கிடப்பாராம்.*

*இஃது உணர்ந்தாேரே உண்மையை உணர்ந்தாேராம்.*

*ஏனையாேர் எல்லாம் தாழ்ந்தாேராம்.*

*எனவே தாழ்ந்தாேராம் என்கிற நிலை தாண்டி உயர்ந்தாேராம் என்ற நிலைக்கு வர அன்றாடம் அவரவர் வாயும் அஃதாெப்ப "ராம் ராம் ராம்" என ஜபிக்க அவரவர் ஆத்மாவும் உயர்ந்தாேராம் என்கிற நிலைக்கு வரும்.*

*இஃதாெப்ப யாம் இறை அருளால் அஃதாெப்ப உள்ளத்தில் கலந்து அன்பினால் உயர்ந்து வாழ இறை அருளால் நல்லாசி கூறுகிறாேம்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*