Monday, 30 March 2020

ஆத்ம தொடர்பு - சூரிய உதயத்தின் பொது த்யானம் செய்தால் ஏற்படும் அனுபவங்கள்


ஆத்ம தொடர்பு

சூரிய உதயத்தின் பொது த்யானம் செய்தால் ஏற்படும் அனுபவங்கள்

*********************************************************************************
மார்ச்சு மாதம் 28 ஆம் தேதி 2020 அன்று ஒரு அமெரிக்க நண்பர் என்னை அழைத்தார் - பேசிக்கொண்டு இருந்தோம் . சுமார் காலை 7.30 மணியில் இருந்து 1 மணி நேரம் பேசி கொண்டு இருந்தோம் .

அப்போது திடீரென்று அம்பாள் ஆசி வாங்கி விட்டீர்களா என்று கேட்டேன்.

இதில் கவனித்து பார்க்க வேண்டியது என்னெவென்றால் - பேசிக்கொண்டு இருந்த தலைப்பு வேறு - வேறு தலைப்பில் உரையாடி கொண்டு இருக்கும்போது சம்மந்தமே இல்லாமல் நான் ஓரு கேள்வியை அவரிடம் கேட்கிறேன், ஏன் கேட்டேன் என்று தெரியாது. அவர் இருப்பது அமெரிக்காவில் நான் இருப்பது கோயமுத்தூரில் அம்பாள் நாடி வாசிப்பது காட்பாடி யில்.

நான் கேள்வியை கேட்ட அதே நேரம் அங்கே காட்பாடியில் அம்பாள் உபாசகர் அவர்கள் நமது அமெரிக்க நண்பருக்காக அம்பாளிடம் விண்ணப்பித்து நாடி மூலம் ஆசி வாங்கி கொண்டு இருக்கிறார்கள். எஙகளுக்கு இது தெரியாது ஆனால் நான் கேட்கிறேன் நாடியில் ஆசி வாங்கி விட்டீர்களா என்று. அதற்கு அவர் சொல்கிறார் நான் ஆசி கேட்டு ரொம்ப நாள் ஆகி விட்டது இன்னும் கிடைக்கவில்லை காத்து கொண்டு உள்ளேன் என்றார்.

பேசி முடித்தததும் அம்பாள் நாடியில் இருந்து அவருக்கு ஆசி நூல் வாசிக்கப்பட்டு வாட்ஸ்  அப் இல் பகிரப்பட்டது.

இதில் என்ன மேலும் ஆச்சர்யம் என்றால் மற்றொரு   சென்னை நண்பர் மூலம்  தான் அம்பாள் நாடியில் ஆசி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். சென்னை நண்பரிடம் நிறைய பேர் விண்ணப்பம் செய்து இருந்ததால் அவர் ஒவ்வொருவராக தான் அனுப்புவார்.

எனவே உனக்கு  நேரம் வரும் போது  உனக்காக நாடி வாசிக்க சொல்லி  கேட்பார் என்றேன். அதே சமயம் தான் அந்த நண்பர் அம்பாள் நாடி உபாசகரிடம்  பேசி அமெரிக்க நண்பருக்கு ஆசி நூல் வழங்கும்படி கேட்டு கொண்டு உள்ளார்.

எல்லாமே ஆத்ம தொடர்பு - அமெரிக்க நண்பர் உலக நலனுக்காக யாகம் செய்தவர் - நான் எல்லோரிடமும் ஆத்ம தொடர்பில் உள்ளவன் - சென்னை நண்பர் மிகப்பெரிய அகத்திய நிலையில் இருப்பவர் - எல்லோரும் ஆத்ம தொடர்பில் உள்ளதால் யாரும் பேசிக்கொள்ளாமலே எல்லாமும் எல்லோருக்கும் தெளிவாக தெரிந்து அதுவே விளக்கம் கொடுத்து நம் நாவில் அமர்ந்து பேசி செயல் செய்து வேண்டுவனவெல்லாம் அளிக்கிறது.

என்னே இறை செயல் - இதுவல்லவோ இறைவனது சோசியல் நெட்வொர்க்கிங் - ஹஹஹஹ - ஓம் சிவாய அகத்தீசாய நம - மேல்மலையூனோர் வாழும் அன்னை அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி போற்றி - முருகனருள் - ஓம் கம் கணபதயே நமஹ - ஓம் நமோ நாராயாணாய - சர்வம் க்ரிஷ்ணார்ப்பணம்

*********************************************************************************

இன்று 31/03/2020 காலை 8.30 மணிக்கு நமது நண்பர் ஒருவரின் மனைவி பல் மருத்துவம் செய்கிறார் அவரிடம் எனது பல்லை சென்று காட்டலாம் என்று நினைத்தேன் - ஆனால் இந்த சூழ்நிலையில் அது சாத்தியமில்லை - ஏனென்றால் ஒவ்வொருவரும் முகமூடி அணியும் கட்டாயம் - நோயாளியிடம் இருந்து வாயில் இருந்து கிருமிகள் தொற்றும் வாய்ப்பு மிக அதிகம் - மேலும் இது இப்போது எனது பல்லில் எந்த அவசர பிரச்னையும் இல்லை - அவர்கள் மருத்துவமனையை இப்போது ,மூடி தான் வைத்து இருப்பார்கள்

பின்னர் அந்த நண்பர் தனது தொழிற்சாலையையும் மூடி தான் வைத்து இருப்பார் - வியாபாரம் எதுவும் இருக்காது - வங்கிக்கு கட்ட வேண்டிய அசல் வட்டி ஆகியவை கட்டுவதற்கு சிரமப்படுவார் - அதிக கால அவகாசம் கேட்பார் - நேராக நமக்கு தான் அழைத்து கேட்பார் என்றெல்லாம் எண்ணம் தோன்றுகிறது - சரி என்று விட்டு விட்டேன்

அந்த நண்பர் எனக்கு கடைசியாக தொலைபேசியில் அழைத்தது பிப்ரவரி மாதம் 2019, சுமார் ஒரு வருடம் முன்பு - அதாவது கடந்த ஒரு வருடங்களாக தொலைபேசியில் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை - இந்த சூழ்நிலையில் சுமார்   9 மணிக்கு - அதாவது சரியாக நான் அவரை நினைத்து அரை மணி நேரத்தில் அவர் அழைக்கிறார் என்னை .

அழைத்து நலம் விசாரித்து விட்டு வங்கிக்கு பணம் கட்ட அவகாசம் கிடைக்குமா என்று கேட்கிறார் - பின்னர் தன தொழிற்க்கூடத்தை 144 தடை உத்தரவினால் மூடி வைத்து இருப்பதாகவும் அரை மணி நேரம் முன்பு வங்கியை பற்றியும் கடன் கட்ட அவகாசம் பற்றியும் என்னிடம் பேச வேண்டும் என்று தோன்றியதாகவும் பின்னர் தொழிற்கூடத்துக்கு சென்று பார்த்து விட்டு பின்னர் அழைக்கலாம் என்று அரை மணி நேரம் கழித்து தற்போது அழைத்ததாகவும் கூறினார்.

*********************************************************************************

ஆத்ம இணைப்பு

ஆத்ம இணைப்பு - சிம் கார்டு தேவையில்லை - முக நூல் செய்தி தேவை இல்லை  - கடந்த ஒரு வருடமாக தொலைபேசியில் அழைக்காதவர் கடந்த பத்து நாட்களாக கொரோனா பாதிப்பின் போது அழைக்காதவர் இன்று நான் நினைத்ததும் இன்று அழைக்கிறார் என்றால் நமது மனதின் குவிப்பால் அனைத்தும் சாத்தியமே

நல்ல த்யான நிலையில் இருக்கும் ஒருவரின் எண்ணங்கள் வலிமை பெறுகிறது - அதனால் தான் பெரியவர்கள் நல்லதையே நினை நல்லதையே பேசு என்று கூறுகிறார்கள் - பெரியவர்களிடம் ஆசி வாங்குவது எல்லாம் இந்த காரணத்தால் தான்.


மிக்க நன்றி

TRS தி. இரா.சந்தானம்
கோவை 9176012104

*********************************************************************************