Wednesday, 4 March 2020

சிந்தை ஆசி நூல்

சிந்தை ஆசி நூல்

இல்லை இல்லை இல்லை
யாமிருக்குமிடத்தே இல்லை தொல்லை
பிள்ளை பிள்ளை பிள்ளை
எமைப்புறிந்தோரெல்லாம் எம் பிள்ளை
நாள் ஐ நாளை நூலை
உன் விதியெழுதுவால் வாலை
நூலினுள் நுண்ணி நுழை
ஆனந்த தாண்டவத்தில் திளை
கோபுர வாசலை கட
நூபுர கங்கையில் கிட
ஒன்று ஒன்று ஒன்று
ஒன்றிலேயே நீ ஒன்று
ஒன்று என்ற ஒன்று
அதில் நீ இன்றே ஒன்று
பதி ஒன்றே
சதி ஒன்றே
கதி ஒன்றே
நற்கதியில் சென்று நிற்கதியில் ஒன்று
அறிவை தின்று ஆணவத்தை வென்று
ஆண்டவனில் ஒன்று
பரம்பொருள் ஒன்றே
இயக்க சக்தியுடன் இரண்டு
இரண்டுக்கும் இடையில் உள்ளது ஒன்று
அந்த ஓன்றிலே நீ ஒன்று
ஆண் பெண் இருவகை
உள்சுவாசம் வாசி
 வெளி சுவாசம் மூச்சு
உள்சக்தி உயிர்
 வெளிசக்தி ஆத்மன்
உள் பிராணன் உயிர் இயக்கம்
 வெளி பிராணன் பரமேசுவரி சக்தி
பகலும் இரவும் இரு நிலைகள்
ஒளி ஒலி என்பது இரு நிலைகள்
பகலிலும் இரவிலும் ஒளி ஒலி எனபதுண்டு
மண்ணில் நீர் உண்டு
 நீரில் காற்றுன்டு
காற்றில் நெருப்புன்டு
அனைத்திலும் வெளி உண்டு
காற்றுண்டு வாழ்ந்தால்
உள்நெருப்பு ஜோதியாய் பிழம்பும்
உன் உள்ளே கிளம்பும்
கிளம்பினால் சென்றடையுமிடமென்றேன்றொன்று உள்ளதல்லவா
அதுவே மூலம், அதுவே முடிவு
மூலத்திலேயே முடியும்
முடியும் அதுவே திரு வின் முடியும்
முடியுமென்றெண்ணுவோருக்கே முடிவில் முக்தி கிட்டும்
தெரிந்து பார்ப்பவர்களுக்கு தெரிசனம் கிட்டும்
ஆக ஒன்றிலே ஒன்றின் னால் ஒன்றினால்
ஒன்றிலே ஒன்று உள்ளது
ஒன்றின் மேலே ஒன்று உள்ளது
ஒன்றின் கீழே ஒன்று உள்ளது
கீழே உள்ள ஒன்றினால் மேலே உள்ள ஒன்றை வகுத்தால் கிடைப்பதொன்றே
ஒன்றுடன் ஒன்றை பெருக்கினாலும் வருவதோன்றே
எத்தனை ஒன்றுகளை கூட்டினாலும் விடை ஒன்றே.
அவ்வாறே ஐந்தை கூட்டி கூட்டினுள் அடைத்தாலும் அதன் மெய்ப்பொருள் ஒன்றே
ஐந்திற்கும் தனியே அறிவில்லை மனமில்லை உணர்வில்லை
ஐந்தும் ஒன்றுடன் இணையும் போதே அதற்கு சித்தி கிடைத்தது
ஆக ஓன்றே ஐந்தாய் பிரிந்தது முதலில்.
அதில் உரு ஆகி உரு செய்து பரு ஆகி பருநிலையில்
தனி உடலெடுத்து புல்லாய் புழுவாய் பறவையாய் பாம்பாய்
கல்லாய் மனிதராய் ஆகி நிற்கும் நிலைதனிலே
பிரிந்த ஐந்தும் மீண்டும் ஒருங்கிணைந்து உடலுக்குள் சீவனாய் சிவனாய்
செயலாற்றி அனுபவங்கள் அளித்து அனுபவப்பதிவே கர்மமென்றாக்கி
வினை செய்து தம் பணியை விதியை கொண்டு செவ்வனே செய்து இருக்கும் நிலையில்
ஐயனே நீ , ஐந்தும் ஒருங்கினைந்தவன் நீ, ஐந்தை அடக்கி, ஒன்றை நோக்கி
முன்னேறி சென்றால் ஐந்தையும் பிரித்து அவரவர் தன்மையில் ஐந்தையும் கலந்து விட்டு
எஞ்சியிருக்கும் ஒருவனே நீ.
 ஐந்தையும் ஆட்டி வைப்பவன் நீ. இப்போது நீயே பூவுலகையும் செய்தாய் பாருலகயும் செய்தாய்
இவ்விதம் ஐந்தும் பெற்றவர்களை ஓர் நிலைக்கு அழைத்து செல்லும் ஆசான் நீயே
நீயே அகத்தியம், நீயே அகத்தியன், 
ஐந்திணைந்த நிலையில் அணைத்துள்ளும் அலை போல ஆடுபவன் நீ
ஆட்டுவிப்பவன் நீ, அடக்குபவன் நீ, அனைத்தும் நீயே
உன்னை தொழுபவன் உன் சேயே
ஆதி பராசக்தி உன் தாயே

மூன்று மூன்று மூன்று
மும்மூரத்திகள் மூன்று
ஊன்று ஊன்று ஊன்று
மூலத்தில் ஆழமாய் ஊன்று
தோன்று தோன்று தோன்று
படைப்புக்கடவுளில் தோன்று
பிரம்மன் தோன்றியவிடம் மாயை
அதனால் தோற்றுவித்ததும் மாயை
தோற்றுவித்து தோற்று செய்யும் நிலையும் வைத்தான்
அவன் தோற்றுவித்தானா அல்லது தோற்று வித்தானா
தோல்வியை விற்றானா
கேள்வியை உன்னிடமே கேட்டுக்கொள்
கேள்வியே மனம் பதிலே உயிர்
மாயையே மால், திருமால்
ப்ரம்மனே கர்த்தா, மாய சிருஷ்டியின் கர்த்தா
சக்தியே இயக்கம், சிருஷ்டி சக்தியினுள் அடக்கம்
சக்தியின் இருப்பே சிவம்
அதை அடைய செய்ய வேண்டும் தவம்
மாயையில் மயங்காதே
சிருட்டியில் சிக்காதே
காலனை காணாதே
மூன்றையும் கட
சிவனைப்பற்றி நமனையும் எமனையும் எரித்து
சக்தியிடம் வந்து சேர்
சிவனை பற்றினால் அகத்தீசன் கிளம்புவான்
அவனை பற்றினால் அனைத்தும் விலகும்
சிவமூலம் சக்தி பராசக்தி ஆதி சக்தி யை நீ அடையும்
செல்லும் நிலையில் "நீ", அடைந்த பின் "அது" ஆகி விடுகிறாய்
நீயினி இல்லை அஃது என்ற அஃறிணை இல் கலந்தாய்
நான்கு நான்கு நான்கு
திசைகளென்பது நான்கு
நல் நிலையில் நீ ஓங்கு
நாலுக்குள்ளே நாளும் உண்டு
அதுவே எந்நாளும் உண்டு
வேதங்கள் நால் வகை
ப்ரம்மனுக்கோ நான் முகம்
நான்முகனை நீ கண்டு
அவன் மூலம் நாராயணனை நாடு
அவன் புகழ் பாடு
நால் திசைகளையும் வென்று
நாலு வேதமும் கற்று
நான்முகன் ஆசி பெற்று
நாராயண தரிசனம் கண்டு
நரசிம்ம தரிசனம் கண்டு
நல்ல நிலை அடைந்து
மேல் நோக்கி செல்
ஐந்து ஐந்து ஐந்து
ஆய்ந்து ஆய்ந்து ஆய்ந்து
ஐயம் என்னவென்பதை ஆய்ந்து
ஐயனின் பாதமதை பணிந்து
ஐங்கரன் நாமம் துதித்து
ஐம்பூதங்கள் அடக்கி
ஐந்தெழுத்து மந்திரமோதி
பஞ்சாட்சரம் செபித்து
ஐந்தொழில்கள் படைத்தல் காத்தல் அழித்தால், மறைத்தல் அருளல், அறிந்து
பஞ்ச மகா பாதகங்களை எதிர்த்து
உந்தி சென்று மேழெழும்பி வா
ஆறு ஆறு ஆறு
கூறு கூறு கூறு
முருகன் நாமத்தையே கூறு
ஊறு ஊறு ஊறு
ஓம்காரத்தில் நீ ஊறு
பேறு பேறு பேறு
அடைவாய் நீ பெரும் பேறு
மாறு மாறு மாறு
மௌன மொழிக்கு நீ மாறு
ஊரு ஊரு ஊரு
ஊரை அடைந்து உலகோருக்கு அறிவி
அறிவை தெளிவி
அருளை தருவி
இருளை அகல்வி
ஒலியை ஒலிவி
ஒளியை ஒளிரி
கதிர்வேலன் னை நீ தெரிவி
ஒளியும் ஒலியும் கதிர் வழியே பயணிக்கும்
சுமப்பவனே கதிரேசன்,
கதிர் பாயுமிடம் பரவெளி ஈசன்
உந்துவதே சக்தி
சிவபார்வதி மைந்தனே கதிரேசன்
கதிரேசனை கண்டால் உன் எதிரே ஈசன் வந்தமர்வான்
ஈசனை கண்டால் அன்னையை காணலாம்
ஈசனைருக்குமிடமே அன்னை இருப்பிடம்
இருப்பிடம் சென்று தரிசித்து
விடை பெற்று வந்து விடு
பணிகள் உள்ளன
நொடிப்பொழுதில் பயணிக்க கதிரேசன் இருக்க கவலை எதற்கு
மீண்டும் வந்து விடு அகத்தீசனிடம்
இணைந்தே குப்பை மலமகற்றி
அவனவனுள் உள்ள ஈசனை வெளிக்கொணர்வோம்
ஈசுவர சக்தி வெளிப்பட்டால் தீய சக்திகள் காணாது போகும்
தூய சக்திகள் துரியமாடும்
ஆறுமுகன் வேல் பட்ட இடமெல்லாம் தவிடு பொடியாகும்
வேலன் கால் பட்ட இடம் காலன் ஒளிந்து கொள்வான்
ஆகவே வேலன் காலை உன் சிரம் மேல் வைத்து கொள்
நீ செல்லுமிடமெல்லாம் பட்டது எல்லாம் துளிற்கும்
நினைத்ததெல்லாம் கைவசமாகும்
அகத்தியமெல்லாம் கை கூடும்
சரவண ஜோதி ஒளி வீசும்
ஆகவே ஆறு ஆறு ஆறு
மனமே நீ அகத்தியத்திலேயே ஊறு
மாறு மாறு மாறு
நீ அகத்தியனாகவே மாறு
ஏழு ஏழு ஏழு
  நீ எழுச்சி பெற்று எழு
வாழு வாழு வாழு
நீ நித்திய வாழ்வு வாழு
என் அப்பன் தாளில் விழுந்து எழு
ஏழு ஏழு ஏழு
சப்த ரிஷிகள் ஏழு
சப்த மண்டலங்கள் ஏழு
சப்த காண்டங்கள் ஏழு
சப்த ஸ்வரஙகள் ஏழு
ஏழு ஏழு ஏழு
நீ ஏழு மலைகளை ஏறு
ஏழுமலையானை பாரு


தொடரும்........
.......
TRS