Friday, 13 March 2020

நோய்வந்து நானும் நொடிந்தேனும் போவேனோ?

ஸ்கந்த புராணம் - பகுதி 11

சிவனிடம் முறையிடல்
================

ஐயனே ! அசுரர்கள் எங்கள் பொருளை கொள்ளையடித்தனர். உலகங்களை ஆக்கிரமித்தனர். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. தேவர்களில் பலர் சிறையில் கிடக்கின்றனர். வேதம் கற்ற அந்தணர்களை வாதாபி என்ற அசுரன், கொன்று குவிக்கிறான். நவக்கிரகங்களும் தங்கள் பணியைச் செய்வதில் முடக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டோம். ஆனால், இப்போது மாற்றான் மனைவி எனத் தெரிந்தும், இந்திராணியை அடைய விரும்புகிறான் பத்மாசுரன். இந்த கேவலத்தை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தக் கேவலத்தை தடுக்க இந்திரனின் மகன் ஜெயந்தன் முயன்றான். இப்போது அவனும் சிறையில் கிடக்கிறான். இனியும் தாங்கள் பொறுத்தால், தேவர் உலகமே இல்லாமல் போய்விடும், என்றனர்.

சிவபெருமான் இதெல்லாம் தெரியாதவரா என்ன?! இருந்தாலும், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டார். உலக மாந்தர் என்ன அட்டூழியம் செய்தாலும் பூமியும், வானமும் தாங்கும். ஆனால், விரும்பாத ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தும் போது மட்டும் தாங்கவே செய்யாது. பெண்ணுக்கு கொடுமை இழைக்கப்படும் இடம் பூலோகமாயினும் சரி, ஏழுலகில் ஏதாயினும் சரி, அங்கே அழிவு துவங்கி விடும். அசுர உலகத்துக்கும் அழிவு துவங்கி விட்டது. சிவபெருமான் அவர்களைக் காப்பாற்றுவதாக வாக்களித்தார். தேவர்களே ! கலக்கம் வேண்டாம். என் அனுமதியின்றி தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டு, நீங்கள் செய்த பாவத்தின் பலனை இதுவரை அனுபவித்தீர்கள். இனி, நீங்கள் சுகமாக வாழலாம். அந்த சுகத்தை எனக்கு பிறக்கும் மகன் வடிவேலன் உங்களுக்கு தருவான், என்றார்.

தொடரும்...

ஓம் சரவண பவாய நமஹ!

நோய்வந்து நானும்
     நொடிந்தேனும் போவேனோ?
தாய்தந்த வேல்கொண்ட
     தகப்பன்சாமி துணையிருந்துமே?
தீயான வல்வினையால்
     தீக்குணங்கள் கொள்வேனோ?
ஓயாது ஓம்முருகாவென
    உரைத்தபின்னே ஓடாதோ?=பொய்யர்
வாயுரைத்த வசைச்சொல்லும் 
     வலுவிழக்கச் செய்திடுமோ?
வேயுறு வேலவனின்
      விபூதியிருக்க விளைந்திடுமோ?
நாயினும் கீழ்பிறப்பாய்
       நான்மீண்டும் பிறப்பேனோ?
ஆயினும்    அப்போதும்
 அழகனைதொழ மறப்பேனோ?!!!
நம் முன்னோர்கள் வைரஸ் போன்ற கிருமிகள் தாக்காமல் இருக்க  திருப்புகழிலிலிருந்து ஒரு பாடலைப் பாடி குணமடைவார்களாம்.

தற்போதய புதிய வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால்,

ஒரு தம்ளர் ஆறிய நீரில் சிட்டிகை விபூதியை இட்டு,  வலது கையால் மூடிக் கொண்டு இந்தப் பாடலை ஆறு முறை ஓதி, அந்த நீரை அருந்தினால் மேற்கண்ட அவதிகள் தீரும். எந்த வைரஸும் நெருங்காது. சகல ரோக நிவாரணியான  அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல், திருத்தணித் தலத்தில் பாடப்பட்டது.

"இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமேநீ ரிழிவுவி டாத
தலைவலி சோகை யெழுகள மாலை
யிவையோடே பெருவயி றீளை
யெரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுள தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப
தாதி மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!"

தற்போதுள்ள சூழ்நிலைக்கு தினமும் இருவேளை ஓதி நீர் அருந்த நலம் பெறலாம்.

இயற்கையாகவே நீருக்கு ஒலி அலைகளை கிரகித்து வைக்கும் தன்மையைக் கண்டறிந்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். அறிவியல் வளர்ச்சியின் உச்ச கட்டமாக இருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் தான் நீருக்கு இப்படி ஒரு தன்மை இருக்கிறது என்று கண்டு பிடித்துள்ளனர் தற்போதைய விஞ்ஞானம்

இந்து மதத்தில் இல்லாதது வேறு எங்கும் இல்லை.