Saturday 14 March 2020

புஜங்க த்ராஸம்

சீயமங்கலம்  - புஜங்க த்ராஸித மூர்த்தம்

சீயமங்கலம் - திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் அமைந்துள்ள  சிற்றூர்.

ஸ்ரீ மஹேந்திரவர்ம பல்லவர் அமைத்த ஏழாம் நூற்றாண்டுச் சீயமங்கலம் குடைவரை சிவாலயத்திலுள்ள தூண் ஒன்றின்
மேற்பகுதியில் நாற்கரம்கொண்ட ஆடவல்லான் திருமேனியும் அவரை வணங்கிய வண்ணமுள்ள இரு அடியார்கள்
உருவமும் இடம்பெற்றுள்ளது. இதுவே தமிழகத்தின் மிகப்பழமையான ஆடவல்லான் சிற்பம் என்று
 'அறுபத்து நான்கு கலைகளும் கலையாக்கத் திறன்களும்' என்னும் நூல் கூறுகிறது.

’புஜங்க த்ராஸம்’ என்பது நடக்கும்போது பாம்பொன்று குறுக்கிடுகையில்   முன்வைக்கும் நிலையிலிருக்கும் காலை சட்டென்று
ஒதுக்கிப் பாம்புக்கு இடையூறில்லாமல் வழிவிடுவதைச் சுட்டும் கரணமாகும்.

இச்சிற்பத்தில் காலின் கீழ் அரக்கன் இல்லை; வலப்புறத்தில் பாம்பு. மேல் திருக்கரத்தில் உடுக்கை இல்லை; மாறாகப்
பரசு உள்ளது; கீழே இடக்கரம் டோலா முத்ரை காட்டுகிறது.