Tuesday 31 March 2020

இந்த பாடலை அனுதினமும் பக்தியோடு ஓதுபவர்கள் சகல கலைகளிலும் மிக குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற்று பெரும்புகழோடுவிளங்குவார்கள் என்பது சத்தியம்.

இந்த பாடலை அனுதினமும்
பக்தியோடு ஓதுபவர்கள்
சகல கலைகளிலும் மிக
குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற்று
பெரும்புகழோடுவிளங்குவார்கள்
என்பது சத்தியம்.

அகத்தியர் இயற்றிய வண்டார்குழலி பாடல்.
பாடியவர் திருமதி பிருந்தா மாமி அவர்கள்

 அந்த பாடல் இதோ

1.வண்டார் குழலி வாணி என் தாயே
வாழ்க வாழ்க நினதருளே
வெண்தாமரை எனதுள்ளமாக நீ
வீணையை மீட்டிடுவாயே -உன்
வீணையை மீட்டிடுவாயே

2.கருணையின் கனியே
கலைகளின் நிலையே
காணவேண்டும் நினதுருவே
வருக வருக எனதிதய மலரிருந்து
மங்களமே தருவாயே -உன்
வீணையை மீட்டிடுவாயே

3. அறியாமை இருள் மனமாயை அற
அருணோதயமாய் வருவாய்
சிறியேனையுமோர் பொருளாய் கருதி என்
ஜீவனை மீட்டிடுவாயே -உன்
வீணையை மீட்டிடுவாயே

4.உனதருட்பார்வையின்
அருள்பெறும் ஊமையும்
உபநிஷதம் பொழிவானே
எனதியம்தனில் என்றும் இருந்து நீ
இன்னிசை செய்திடுவாயே -நீ
வீணையை மீட்டிடுவாயே

5.பொருள் உளதாயினும் அருள்
அறிவிலையானால்
பொன்னுள்ள  வானரமல்லவோ 
என் இருநயனங்களும் அறிவொளி வீசிட
இயலிசையாய் வருவாயே -உன்
வீணையை மீட்டிடுவாயே

6.கோடி கோடி கவி பாடிடுவேன்
தமிழ் கோகிலமே வருவாயே
எனதிதயம்  ப்ரணவத்வனி செய்திடும்
ஏக சுகம் தருவாயே -உன்
இசை அமுதம் பொழிவாயே-உன்
வீணையை மீட்டிடுவாயே

7.சத்திய வாழ்க்கையினால்
உலகெங்கிலும் சாந்தியோங்க
வரமருள்வாய்
சங்கீதாமுத தாரையினாலெனைத்
தன்மயம் ஆக்கிடுவாயே -இனி
சாகாக்கலை தருவாயே -உன்
வீணையை மீட்டிடுவாயே

8.கருவுடல்போயினும் கவியுடல் எய்தி
காலம் முழுதும் நிலை பெறுவேன்
ஹரிநாராயண சிவ சிவ குஹஎனும்
நாமரசம் தருவாயே -பர
நாதலயம் தருவாயே -என்
நாவில் நடம் புரிவாயே -உன்
வீணையை மீட்டிடுவாயே