Saturday, 14 March 2020

திருவடி ஞான ஆசி நூல் 15.03.2020

ஒரு அன்பர் கேட்டுக்கொன்டதர்க்கினங்க, பிறப்பின் நோக்கத்தை அகத்தியரிடம் தியானத்தில் இயம்பிய போது கிடைத்த தமிழ் பாமாலை அகத்தியனுக்கே சமர்ப்பணமாக்கி உங்கள் உள் உறையும் ஆத்மனின் பார்வைக்கு கிடைக்குமாறு பதிவு செய்து உள்ளேன்.

திருவடி ஞான ஆசி நூல் 15.03.2020

நீ பிறக்கும் போது அது மறைந்தது
மறைந்ததுவை மறந்த போது
அதை நினைவு படுத்த வெளியுருவாய் யாம் நிலை கொண்டோம்
உம் நிலை கண்டோம், மறவாமை இருந்தால் மீண்டும் பிறவாமை இறவாமை சித்திக்கும்
மன ஒருங்கிணைப்பாட்டுடன் எமை துதித்து எம் வழி வரும் சேய்களுக்கு யாம் வழி நடத்தி செல்வோம்
எந்த செயலிலும் எமை நினைவில் கொள். எமை  நீங்காமல் இருந்தால் நீங்கா துயரம் நீங்கும்
உன் புகழ் ஓங்கும்
உன் செயலாவது யாதொன்றும் இல்லையே.
யாரும் எவருக்கும் எதுவும் அருள வழியில்லை.
இறை வழி செல்வோர்க்கு இறையே அருளும்
இறை நாமம் பறைசாற்றுவதும் இறை உள்ள இடம் சுட்டி காட்டுவதும் மட்டுமே இறை நிலை அடைந்த மனிதர்களின் நிலை.
நிலை கடந்து சென்றால் பல பணிகள் உண்டு
இவ்வுலக இயக்கத்தின் பின்னணியில் பல தேவர்கள் முனிவர்களின் பணிகள் உண்டு.
தெளிவின்மையே பிறவிக்கு காரணம்
தெளிவு பெற எம் திருவடியை தொழு
அவரவர் தகுதியை பொறுத்தே இறை அருளும்
தகுதியை வளர்த்து கொள், அருள் வரம் கேட்க பழகி கொள்
நீ, உன் குடும்பம் உன் உலகம் அனைத்தும் மாயை.
மாயை நீக்கவே ஞாணக் கண் கொண்டு பார்க்க வேண்டும்
ஞானக்கண் ஒன்று அனைவருக்கும் உண்டு.
பக்தி பூஜை, த்யானம் தானம், தபம் ஜெபம் சித்தரருளால் ஞானக்கண் திறந்து பார்க்கும் போது அனைத்துமே புலப்படும்
வாழும் நாட்களில் அருளை சேர்
அனைத்திலும் பற்று அற்று இரு.
பலனை எதிர்பாராமல் கடமையை செய்
துயருடன் உ.மை நாடி வருபவருக்கு எமை காட்டு.
முதலில் நீ உம்முள்ளே எமை பார் . உனது உயிரை எம்மிடம் ஒப்படை.
உன் சொல் செயல் சிந்தனை இயக்கம் எல்லாமுமே அகத்தியமாகி இருக்க வேண்டும். அகத்தியதுடன் ஒன்றி விட்டால் மற்றொருக்கும் வழி காட்ட முடியும்.
முதலில் நீ அடை. அடைந்ததை மற்றவருக்கு புலப்படுத்து, எம்மை அவருள்ளே பலப்படுத்து.
இவ்வுலகில் நீ செய்ய வேண்டிய காரியம் என்று தனியே ஏதுமில்லை
அனைத்து மனிதர்களுக்கும் செய்ய வேண்டிய காரியம் என்பது பொதுவான ஒன்றே.
சிருட்டி, மாயை, சிவம் ஆகியவற்றில் சிருட்டி நிகழ்ந்து விட்டது, மாயை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சிவம் மாயையினுள் மறைந்து உள்ளது.
ஞானம் என்னும் நெருப்பால் மனதில் உள்ள எண்ணம் என்னும் அசுத்தம் தனை நீக்கி, தூய உள்ளத்துடன் சும்மா இருந்தாலே போதும், இறை உன்னுள் செயல்பட ஆரம்பித்து அதுவே உம்மை வழி நடத்தி செல்லும்.
எனவே அகத்தியத்தை நீ பற்று, அகத்தியன் உனை பற்றி கொண்டு செல்வான்.
பதி என்னும் பரம்பொருள் அனைவருக்கும் ஒருவரே , அருவமான பரம்பொருள் உருவத்துள் இறங்கிய போது அதுவே மறைந்து நின்றது.
உனது இயக்கமனைத்திர்க்கும் மூல காரணமான பரம பொருளை உள்ளே வைத்து கொண்டு பாராது வெளி உலகில் மதி மயங்கி மனம் மயங்கி ஆசை காமம் குரோதம் பந்தம் பாசம் நேசம் என்று வேசம் பூண்டு கர்ம பதிவுகளால் சூட்சுமமான இறைவனை மூடி மறைத்து பின்னர் காணவில்லை என்று தேடுவது யார் குற்றம். கருமங்களுக்குள்ளே இறைவனை ஒளித்து வைத்து தொலைத்து விட்டு வெளியே தேடி அலையும் மாந்தருக்கு வழிகாட்டவே யாம் பூவுலகில் அகத்திய நாமம் கொண்டு எம் சேய்களுக்கு அருளை அளித்து இருளை நீக்கி நல் வாழ்வு பெற்று நிலை உயர .... ஆசிகள்... முற்றும்... முற்றே.... சுபம்.

...... TRS......