Sunday 22 March 2020

அம்பாள் நாடி - அன்னை எனக்கு அளித்த ஆசி


ஓம் சிவாய அகத்தீசாய நமஹ
 
அருள் அன்னை ஆதி சக்தி ஜீவ நாடி நூல் விளக்கம்
 
பலன் எடுக்கப்பட்ட நாள் 23.02.2020, ஞாயிற்று கிழமை
 
பலனை கேட்பவர் அருள் தவரிஷி ஆசான் அகத்தியனின் அடிமை திரு சந்தானம் அய்யா அவர்களுக்கு
 
நூலினை எடுத்து இயம்பியவர் ஆசான் அகத்தீசரின் கொத்தடிமை
 
Dr S விஜயகுமார், ஓங்காரக்குடில் வேலூர்
 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
நூலினை பார்ப்போம்
 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
 
தில்லை ஈசன் திருவடியை பணிந்து போற்றி
 
தெரிவிப்பேன் சக்தி என் ஜீவ மொழி ஆசி
 
இந்த நாள் என்னை நாடி இல்லாளுடன் கூடி
 
இனிமைபட வந்திருக்கும்  சந்தானம் வாழ ஆசி
 
ஆசி தாரேன் அன்னை யானோ மனமகிழ்ந்து இன்று
 
அருள் உலகில் அவதார பாலகனாய் வந்தாய்
 
அவனியிலே தருமம் காக்க பாமரர் காக்க  வந்த நீயும்
 
இன்றுமே விக்கிரமன் ஆட்சி செய்த தலமதுவில்
 
இனிய வாக்கிதனை அன்னை என் மூலம்
 
மூலமாக பெறுவதற்கு இறை கணங்கள் வழி கொடுக்க
 
மகன் நீயும் இல்லாளுடன் இனிய சேயுடனும் கூடி
 
வந்திருக்காய் , பல நலன்கள் வகைபட தாரேன்
 
வற்றாத  அருள்  சக்தி உன்னுள் பாயும்
 
பாயுமடா அகத்தீசன் அருளோடு திருமூலன் கந்தனருள்
 
பக்குவங்கள் பல  கடந்தாய்
 
கடப்பாய் இனியும் தொட்டு
 
நிலை உயரும்
 
அருள் பெருகும் 
 
வரம் கிட்டும்
 
வளம் வளரும்
 
சாற்றிட ... சக்தி யானோ
 
மனமகிழ்ந்து இன்று நாள்
 
ஜெகத்திலே  சிவனருளோடு
 
நாராயணன் அருளும்
 
அருளும் கூட்டி  தந்து
 
நவகோடி சித்தர்களின்  துணையோடு
 
அருள்கிறேன் ஜீவசக்தி
 
மெய்ஞ்ஞான சக்தி  கூட
 
உன் இல்லில் உத்தம சித்தர்களும்
 
நடமாடி உயர் ஞான அருள் வரங்கள் தந்து வாரார்
 
என் மகனே ,
 
என்றுமே
 
சயனம் முன்  சயனம் பின்
 
ஏற்றிடப்பா அகத்தியன் நாமம்
 
அதுவே உனக்கு தவம்
 
தவமாகும் அது போதும்
 
தயை சிந்தை பெருகும்
 
தாய் யானும் அகத்தீசனை ஜெபிக்க
 
அகத்துள் இறங்கி
 
உந்தனுக்கு வாக்குரைக்கும் காலமதும் நெருங்கி விட்டு
 
உத்தமனே உன் வழியில் வருவோர்கள் ஞானியாவர்
 
ஞானியாவர் உன்னிடத்து பயில்வோரெல்லாம்
 
ஞாலமதில் ஞான பண்டிதன் அருள் பலமும் உண்டு
 
சித்தமதில் அகத்தீசன் அருளாய் இறங்கி
 
சித்தனாக வாழுகுன்ற சத்தியன் நீயடா
 
நீயடா உந்தனுக்கு பல வரங்கள் முற்பிறப்பும்
 
நீதியுடன் அளித்திட்டார் சிவ சித்தர் எல்லாம்
 
வரம் பெற்று இது பிறப்பில் வந்துதித்த பாலன் நீ
 
வையகம் காக்க உன்னையும் கருவியாக்கி மகிழ்வேன்
 
மகிழ்ந்திடுவேன் அன்னை யானோ எது நிலைகளிளும் கைவிடாது
 
மகன் நீயும் சுத்த பர சோதியுள் கலப்பாய்
 
எடுத்துரைக்க பரம சித்தன் அனுக்கிரகம் பூரணமாய்
 
ஏகாந்த நிலையில் இருந்து இறங்கியே வந்திருக்க
 
வந்திருக்க நிந்தனுக்கு ஆகமங்கள் ஏதும் இல்லை
 
நிந்தனுக்கு இருப்பதெல்லாம் புண்ணியம் மட்டும்
 
சாற்றிட
 
மூபிறவி தொடர்பிலே வந்த மகளே 
 
 
 
 
 
 
 
 
 
சத்தியம் பட இது பிறப்பும்
 
இல்லாளாய் கரம் பிடித்தாய்
 
கரம் பிடித்தாய்
 
அவள் பலத்தால் உந்தனுக்கும்
 
அருள் பலம்
 
கலியுகத்தில் வெற்றி அடைய
 
சித்தர் வழி சூட்சுமம்
 
இச்சா சக்தி க்ரியா சக்தி ஞான சக்தி
 
ஒன்று கூடி இது உலகில் உன்னையே
 
வழி காட்டி நிற்கும்
 
நிற்குமப்பா
 
உந்தனுடைய சேயோர்கள் மேலான பலனை
 
நீதியுடன் பெற்று வாழ அருள் பலமும் தாரேன்
 
இந்த நாள் உந்தனுக்கு ஏழரையுடன் கந்தக சனி குற்றம்
 
இருப்பதுவும் உண்மை தான் அன்னை அறிந்தேன்
 
ஆகவே இனி வரும்கால் தேய்பிறை அஷ்டமி தோரும்
 
ஆண் நீயும் பைரவரை தொழுதிடப்பா
 
நன்மை உண்டு
 
உண்டு தான் அதனாலே உயர் பலன்கள்  உன் விதியில்
 
உன் விதியும் மாறி நிற்கும்
 
தேறி வாழ்வாய்
 
ஆசி ஆசி
 
எடுத்துரைக்க ஏற்றமான சூழ்நிலைகள் உந்தனுக்கு
 
எப்போதும் அகத்தியனே குருவாய் வந்திறங்கி
 
வந்திறங்கி கரம் பிடித்து கை பிடித்து
 
கடைத்தேற்றி வைக்க
 
வேலவன் வேல் படையுடன் வந்துமே ஆசி தந்து
 
காப்பாக கருணை  கொண்டு கடமையாக அவரும்
 
எண்ணி காளை உனை காத்தருள்வார் அஞ்சிடாதே இது உலகில்
 
இது உலகில் உந்தனுக்கு யாருமில்லை உற்ற துணை
 
இருப்பதெல்லாம் அகத்தியமே
 
அகத்துள் நீ கண்டு தேறி
 
நிலமதனில்  கண்ட சத்தியம்
 
கண்டபடி உரைத்திட
 
நிந்தனுக்கு சக்தி தருவார் அகத்தியன்  மனம் இறங்கி
 
மனம் இறங்கி அவரும்
 
வந்து விட்டார்  உந்தனிடம்
 
மண்ணுலகில் அவர் வழியில்
 
வந்த சித்தர் பலரில்
 
சத்தியமாய் உந்தனுக்கும்
 
பொன் ஏட்டில் ஓர் பெயரும்
 
சித்தனாக வாழ்வாய் என்று
 
சத்தியம் இது காலும்
 
இது காலும் தருகிறேன் ஆசி பெற்று உயர்வடைவாய்
 
இயம்பியவாறு சத்தியமாய் நடக்கும் இது திண்ணம்
 
எடுத்துரைக்க ஈன்ற சேய்கள்
 
இருவருடன்  வாழ்வு உயர்வு
 
ஏற்றம் காணும் அகதியானால்
 
ஆசி ஆசி
 
ஆசி தாரேன்  என் மகனே
 
பெற்றிட்ட சிவ  தீட்சை சிறக்கும்
 
அவனியிலே அருள் வழியில் பொருளும் பெற்று
 
தட்டாது மந்தன் பலமுள்ள தொழிலில் பல யோகம்
 
தானுனக்கு கிட்டி வாழ
 
ஆசி தாரேன்
 
தருகிறேன் பூரண பலமும் அருளாசியும் இன்று
 
தரணிதனில் தவரிஷி அகத்தியனின் ரூபத்தில்
 
என் மகனே நீயுமே உருமாறி உட்கலந்து
 
எப்போதும் அகத்தியன் செல்லுமிடம் நீயும் கூட
 
நீயும் கூட சூட்சுமமாய் செல்லுதற்கு அனுக்கிரகம்
 
நிலமதனில் வரங்களாக பெற்று தாரேன் ஈசனிடம்
 
இன்று நாள் அன்னை யானோ மனமகிழ்ந்து
 
இது நூலில் இனிய வாக்கு தருகிறேன்
 
ஆசி ஆசி
 
ஆசி பெற்ற என் சேயே
 
உன்னோடு உந்தன் குலம்
 
அருள் வழியில் அவனியிலே சித்தர் குலம் என்று சிறக்க
 
சத்தியமாய் ஈரேழ் தலைமுறையுடன்
 
உங்களுக்கும் பிறருக்கும்
 
தட்டாது
 
சித்தர் குடில்
 
உந்தனுக்கே அமையும் என்று
 
தரணி தனில் வாக்கு தந்து
 
மகிழ்ந்தேன் அன்னை
 
அன்னை யானோ வாக்கு இதை நூலின் வழி
 
அறிவிக்க மனம் மகிழ்ந்து இருக்கான் அகத்தீசன்
 
செப்புகிறேன் உந்தனுக்கு கோள் வினைகள் நீங்கி ஓட
 
சத்தியமான ஆகமத்தின் நெறிமுறைகள் இது நூலில்
 
இது நூலில் உந்தனுக்கு
 
மூவினைகள் மூகருமம்
 
நிலமதனில் நீங்கி ஓட
 
அருள் பலம் தாரேன்
 
சாற்றிட இனிவரும் கால்
 
அகத்தியனின் நாமத்தையே
 
சத்தியமான மூலமாக ஏற்றுமே ஓதிடப்பா
 
ஓதிடப்பா அதனுடனே
 
சிவனார் வழி  தீட்சை கூட
 
ஒளஷதமாய் உயர்வு அருளும் காய சித்தி காணுதற்கும்
 
அப்பப்பா பரம சித்தன் அருள் சேயும் அளித்த தீட்சை
 
அவனியிலே சத்தியமாய் சித்தனாக்கி உன்னை வைக்கும்
 
வைக்குமடா அதை தொட்டு தொடர்ந்துமே
 
தொடாது  கர்மம் தான் நீயும் ஜெபித்து தேறி
 
ஜெகத்தை காக்க நிலவுலகில் அதிகாரம்
 
அருள் பலம் தாரேன்
 
நிந்தனுக்கு  இது நிகழ்விற்கு இதுநூலே சாட்சி
 
சாட்சியாக அன்னை யானோ இகுதின் காலம்
 
சிவனாருடன் நவநாத சித்தர்களை சாட்சி வைத்து
 
எடுத்து சொன்னேன் இது வாக்கை சத்திய உபதேசமாய்
 
ஏகாந்த நிலையிலே நீ வாழ ஆசி
 
ஆசி தாரேன் உந்தனுக்கு
 
காய சித்தி யோக சித்தி காண
 
அருள் வழியில் ஜோதி தரிசனம் உன்னுள் காண
 
சிற்சபையுடன் பொற்சபையுடன் ஞானசபை ஏதென்று
 
சக்தி யானோ இது நூலில் செப்பி மகிழ்வேன்
 
மகிழ்ந்திடுவேன் என் எழுத்து ஏதென்று அறிந்து கொள்ளு
 
மகன் உனக்கு எட்டு இரண்டு ரகசியமும் அதுவே
 
அவ்வை தாய் உபதேசித்த ரவி மதி அக்கினி கூட
 
அவ்வையால் மெய்ப்பொருளாய்  உபதேசித்த நிலையே ஆகும்
 
நிலையாகும் அதை நீயும் புரிந்து நட புண்ணியம் பெருகும்
 
நிம்மதியும் படிப்படியாய் விதியில் பெறுவாய்
 
தான் உனக்கு சப்தமத்தில் ஞானியும் அமர்ந்திருக்க
 
தரணி தனில்  இல்லாள் வழி உதாசீனம் உருவாகி நிற்கும்
 
நிற்குமப்பா நிரந்தர பிரிவு வரும் கேடு கூட
 
நிலமதனில் பரம  சித்தன் காத்து  தருவான் ஆசி உண்டு
 
என் மகனே குருவோடு அறிவோனும் கூடி இருக்க
 
ஏற்றமான சூழலும் இல்லறத்தில் உண்டு உண்டு
 
உண்டு தான் சாப வினை நீக்கி தந்தேன் இதுகால்
 
உத்தமனே இல்லறத்தில் குறைகாணா நீயும் வாழ
 
சத்தியமாய் புகரின் வாரம் கங்கனுட ஹோரையில் நீ
 
வழிபட்டு வந்திடுவாய் பள்ளியறை தரிசனமும்
 
தான் நீயும் இல்லோளுடன் கூடியே ஈசன் தடம்
 
தட்டாது இனிப்பதுவை அடியாருக்கு ஈந்து மகிழ்ந்து
 
மகிழ்ந்துமே வழங்கி வா இல்லறத்தில் குறைகள் வாரா
 
மகன் உனக்கு பாதுகாப்பு அரவணைப்பு அன்னை தந்து
 
சத்தியமாய் அன்றே உனை அகத்தீசன் அருள் மகனாக
 
சத்திய வழியில் வந்திட்ட மகளுக்கு லோபா மாதாவின்
 
மாதாவின் அருள் பலத்தை இறக்கி தந்து
 
கலியுகத்தில் மக்களை காத்திடும் அருள் அடியவர்களாய் உருவாக்கி
 
உங்கள் வழி வந்திருக்கும் சேய்களுக்கும் ஞான  வழி
 
உத்தமமாக காட்டி தந்து
 
குவலயத்தில் வழி வகுத்து
 
ஏற்றமான பெரு நிலைகள் தான் அவரும் பெற்று வாழ
 
ஏறுமுகம் கொண்டு வாழ கந்தனருள் துணை நிற்க
 
நிற்கவே அன்னை யானோ அருள் பலத்தை இன்று நாளில்
 
நீதி அரசர் தில்லைஈசன் திருவடியை சாட்சி பட
 
வழங்குகிறேன் வரங்களையும் ஆசியையும் கொடையாக
 
வற்றாத அருள் நிலைகள் தான் பெற்று சிறப்பாய்
 
சிறப்பாய் ஐம்பான் இரண்டில் குருவாகி குவலயம் காப்பாய்
 
ஜெகத்திலே உந்தனுக்கும் ஏடு வழி அருள் வாக்கு நிலைகள்
 
எடுத்து உரைக்கும் ஆசியதும் சத்தியமாய் உண்டு
 
ஏற்றமுண்டு உந்தனுக்கு அன்னை யானே
 
வழி தந்து
 
தந்துமே நூல் தந்து உபதேசிக்கும் முறையை கூட
 
தாயாக குருவாக அமர்ந்துமே
 
 
அறிவு தந்து
 
மெய்ஞ்ஞான விளக்கத்தை உன்னுள் இறங்கி பேசி
 
மெய்ப்பொருளில் நாம் வாழ அருள்வேன் ஆசி
 
ஆசி தந்தேன் உந்தனுக்கு என்ன குறை
 
என்று பார்க்க
 
அவனியிலே ஏதுமில்லை
 
அகத்தியன் முன்னே நிற்க
 
எடுத்துரைக்க உள்ளதெல்லாம் புண்ணியமே பரம்பொருள் வரமே
 
ஏதும் குறை இனியும் இல்லை உந்தன் விதியில்
 
விதியிலே வந்த குறை வரும் குறை அனைத்தும் தீர
 
வளவன் உனக்கு ஆகமத்தை செப்பி விட்டேன்
 
தட்டாது தான் பெற்ற
 
சிவனாரின்  அருள் தீட்சை
 
தான் உன்னை அகத்தியத்துள் திண்ணமாக
 
உள் நுழைக்கும்
 
உள்  நுழைக்கும் விரும்பினாலும்
 
கட்டுண்டு கடைத்தேற
 
வளவன் உனை
 
ஐயமிலா அழைத்துமே
 
செல்லும் அதுவும்
 
நீதியுடன் தொடங்கிடுவாய் மேலான
 
சிவனார் ஜெபமும்
 
நித்தமும்
 
என்னுள் நீ
 
உன்னுள் நான்
 
கலந்து வாழ்வோம்
 
அருளாசி முற்றே
 
- சுபம் -
 
ஓம் சிவாய அகத்தீசாய  நம
 
TRS……..
Coimbatore
Ph.91760 12104