Friday 11 September 2020

தமிழ் நெறி

*தமிழ் நெறி* ஆதி நீதி தோன்றல்:-- பகுதி பதினொன்று ********************************** சூழும் வெற்றிட தியானம்.. ********************* வெற்றிட தியானம் செய்யும் அன்பர்கள் எந்த வித இரசனை இன்றி, சுவை இன்றி எந்த வித முனைப்பும் இன்றி, சலிப்பு வினாடிக்கு வினாடி மேலிட தியானம் செய்வது இயல்பே.. வைர மகுடமும் ஆடம்பர நகைகள் பூட்டிய மனித வடிவ கோவில் சிலைக்கு முன்பே தியானத்தின்,பிரார்த்தனையின் குறிகோளை இழந்து நிற்கும் மனித குலம் வெற்றிடத்தை நோக்கி எந்த வகையில் தியானம் பண்ணும் ?.. ஆனால் வெற்றிடத்தின் சிறப்பு நிலையினை உணர்ந்த மாத்திரத்தில் அதை விட சிறப்பு உலகில் எந்த இடத்திலும், எந்த புனித கோவிலும் இல்லை என்பதுதான் தமிழ் நெறி கொடுக்கும் விளக்கம்.. சிறப்பு கூட்டி பயிலாத எந்த ஒன்றின் தியானமும் மிகுந்த பலனை தராது.. ஆரிய நிலைபாடுகள் கற்பனை பொய்யான ஒன்றின் மூலம் சிறப்பு கூட்டி ஆன்மீகத்தை வளர்க்கும்.. அதன் போக்கு அப்படி இருக்க, அது உண்மை நிலையின் சிறப்பை குறைக்கும் செயலிலே முதலில் இறங்கும்.. இந்த விதமாக ஆரியம் உண்மையை உதறி விட்டு பொய்யை சிக்கென பிடித்து விட்டு ஆன்மீகத்தையே முழுமையாக பொய்யாக மாற்றி விட்டது.. ஆரியம் என்றால் இந்து மதம் உள்பட அனைத்து மதங்களும் அடங்கும்.. இந்த நிலையில் தமிழ்நெறி அன்றைய நிலையில் வெட்ட வெளியின் வெற்றிடத்தின் சிறப்பை நன்கு உணர்ந்து இருந்தது.. அதனுடைய வெளிபாடுதான் சிதம்பர கோவில் இரகசியம்... அதன் சிறப்பை உணராத ஆரிய உணர்வு அதனை கேலிக் கூத்தாக்கி விட்டது.. வெற்றிடத்தின் சிறப்பானது அப்படி என்னவாய் இருக்கிறது? வெற்றிடத்தில் ஒன்றில் தான் சிறப்பே இருக்கிறது.. இதற்கு இணையான சிறப்பு எதற்கும் இல்லை.. இந்த சிறப்பினை உளமாற ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே தமிழ்நெறியில் மேன்மை அடைய முடியும்.. எல்லா பொருள்களிலும் அருள் வீச்சு இருந்தாலும், அந்த வீச்சு குறைவாகவோ, அல்லது அதிகமாகவோ தடைப் பட்டு இருக்கிறது.. வெற்றிடத்தில் மட்டுமே அருள் வீச்சு எந்த குறைபாடும் இன்றி முழு சீர்மையோடு முழுமையாக இருக்கிறது.. இந்த ஒரு நிலையால் வெற்றிடம் சிறப்பில் தலையாய் இருக்கிறது.. மற்றபடி எனைய அனைத்தும் அதற்கு பின்னாலே தான்.. வெற்றிடத்தின் அணுகு முறை இந்த சிறப்போடு உணர்ந்து நடந்தால் அருள் வீச்சு நம் உடம்பிலும் மேன்மை பெருகி பெருகி நம் உடம்பே அருள் உடம்பாய் மாறி நித்தியத்தை அடைந்து விடும்.. ஆரிய சிறப்பிலே சிக்குண்ட மனதிற்கு விடுதலை முதலில் தர வேண்டும்.. அப்படி விடுதலை தருவது தன்னிலை மட்டுமே.. எனைய ஆரிய பயிற்சிகள் அனைத்தும் மேலும் மேலும் சிக்குண்ட நிலைக்கு அழைத்துச் சென்று, முடிவில் மூச்சு திணருதல் நிலைக்கு ஆளாக வேண்டியது தான்.. அப்படி மூச்சு திணருதலே ஒரு நோயாகி அங்கே தோன்றியதோ இந்த கொரானா நுண் உயிர்? இன்று சிக்குண்ட நிலையே மேலும் மேலும் வலுவடைகிறது போலும்.. கொரானாவிலிருந்து மனிதன் தப்ப சிக்குண்ட நிலையை நீக்க வேண்டியதிருக்கிறது.. அதற்காக தான் இந்த தனிமை படுத்துதல் அவசியமாகிறதோ ?.. தன்னிலையில் மனிதன் சிக்குண்ட நிலையை உடனே நீக்கும் போது கொரானாவும் நீங்குகிறது.. மன அழுத்தமே சிக்குண்ட நிலையால் தான் உருவாகிறது.. மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு குறையவே செய்யும்.. அதனால் அன்னவருக்கு கொரானா பாதிப்பு அதிகமாகவே இருக்கும்.. அருள் ஆற்றல் வீச்சை இந்த வெற்றிடத்தில் தியானிக்க தியானிக்க சிக்குண்ட நிலை நீங்கி, சிக்குண்ட நிலையில் மட்டுமே உயிர் வாழும், இந்த கொரானா கிருமிகள் வாழ முடியாமல் காணாமல் போய் விடும்.. இந்த ஆரிய நிலை தரும் சிக்குண்ட நிலையில் உயிர் வாழும் தகுதி கிடைக்கும் வரை இந்த கொரானா கிருமிகளை ஒரு போதும் முழுமையாக நீக்க முடியாது போலும்.. இனிமேல் தமிழ்நிலை தரும் தன்னிலைதான் உலகத்தாரை முடிவில் காப்பாற்றும் போல் தெரிகிறது.. எங்கெல்லாம் மன அழுத்தங்கள் அதிகமாக இருக்கின்றதோ அல்லது இருந்திருக்கின்றதோ அங்கெல்லாம் கொரானா பரவல் அதிகமாக உள்ளதை காணலாம்.. பதி சுவாசத்தில் சிக்குண்ட நிலை நொறுங்கி மிக பெரிய தளர்வு நிலையில் இந்த கொரானா கிருமிகள் இருக்கவே முடியாது.. ம்ம் இதனை நம்புவார் தான் இல்லை... வெற்றிட தியானத்தில் மூன்று முறைகளில் மனம் முற்றிலும் பற்றி இருக்க வேண்டும்.. ஒன்று அருள் சிறப்பு கூடிய அல்லது கூட்டிய நிலையில் இருக்க வேண்டும்.. இரண்டாவது அருள் சூழ்ந்த பரந்த நிலையில், நீரில் இருப்பதை போல், மிகுந்த உணர்வுடன் இருக்க வேண்டும்.. மூன்றாவது இந்த இரண்டு நிலைகளும் நீடிக்க வைக்கும் விழிப்பு நிலையோடு இருக்க வேண்டும்.. வெற்றிடத்தில் வரண்ட வரட்டு தியானம் கூடவே கூடாது.. அதில் மிக அதி வேகத்தில் உலாவி கொண்டு இருக்கும் ஆதி சக்தியான அருள் சக்தியின் பிடிப்பில் மனம் எப்பொழுது இருக்க வேண்டும்.. அருளுக்கு சிறப்பு கூட்டும் விதமாக இருக்க வேண்டும்.. . எது இருந்தால் எல்லா கிடைக்குமோ, அந்த ஒன்றோடு இணைந்து நலம் பெற, நம்மை நாம் மாற்றி சீர் பெறுவோம்.. நன்றி வணக்கம்..

No comments:

Post a Comment