Saturday 26 September 2020

பித்தனின் பிதற்றல்

இந்த உலகத்தில் எனக்கு எதன் மீதும் பற்று இல்லை. இருக்கும் வரை இறைவனை உணர்ந்து உணர்ந்து முகர்ந்து முகர்ந்து சுவாசித்து சுவா சித்து வாழ வேண்டும். அதை விடுத்து எனக்கு இந்த உலகத்தில் வேறு எதற்காகவும் இருக்க விருப்பமில்லை. என்னை பற்றி கொண்டு சில ஜீவன்கள் தொங்கி கொண்டு இருக்குது, அதுங்களுக்கு நான் தான் ஆதாரம், பிறவி கடன் அவ்விதம் அமைந்து விட்டது. சட்டுனு உதறிட்டு போக முடியாது, பழம் பழுத்து கீழே விழனும், குருவி ரெக்க மொளச்சு பறக்கணும், அது வரைக்கும் அதுங்க நம்மள புடிச்சு தொங்கி கொள்ள அனுமதிக்கணும். யாரு யாரு இறை சிந்தனையிலே இருந்து இறைவனை உணர றாங்களோ அவங்க கூட நான் சேந்துக்குவேன். மத்தவங்களை பொருளில்லாத அருளில்லாத வாழ்கை வாழ்பவங்க பற்றி எனக்கு கவலையில்லை, முடிஞ்ச எடுத்து சொல்வேன், காது இருந்தா கேட்டுக்கட்டும், என்கிட்ட நெருப்பு இருக்கு, உன்கிட்ட எரியரா மாதிரி ஏதாவது ஒரு வஸ்து இருந்தா உனக்கு நெருப்ப பத்த வச்சு விடுவேன். வஸ்து நல்லா இருந்தா எரியும், கற்பூரமா இருந்தா சீக்கிரம் பத்திக்கும் , நமுத்து போன வஸ்துவா இருந்தா, பத்த வெக்கவே முடியாது, வயசு இருக்கும் போதே பத்த வெக்கணும், ரிடயர் ஆன பின்னால வந்து பத்த வயிங்க ன்னு கேட்டா ஒன்னும் பண்ண முடியாது, செவ்வாயிலே உயிரினம் இருக்க நிலவுல உயிரினம் இருக்கா பாக்கராணுவ, மொதல்ல உயிரினம் நா என்ன ன்னு தெரிஞ்சுக்கோங்க, ஆணினம் பெண்ணினம், மனித இனம் மிருக இனம், தாவர இனம், நீர்வாழ் இன, பறவை இனம், பாம்பு இனம் ன்னு நெறய இருக்கு, ஆனா உயிரினம் ன்னு சொன்ன என்ன னா, உயிர் உள்ள அனைத்துமே ஒரு இனம், அது தான் உயிர் இனம், இந்த இனத்துக்குள்ள எல்ல இனமும் அடக்கம். உயிரில்லாத இனம் னு ஒன்னுமே இல்ல, கல்லு கூட காலப்போக்கில் கரைஞ்சு போகும், நெருப்பு சூடு அக்கினி உள்ள இடம் பூமி, மண்ணுல இருந்து தான் எல்லா உயிரும் வருது, அப்போ அதை கொடுக்குற மண்ணுக்கு உயிர் இல்லையா, உயிர் இன்றது வேற இயக்கம் என்கிறது வேற, சில உயிர்கள் இயங்கும், சில உயிர்கள் இயங்குவது தெரியாது, ஆனால் இயங்கும், உதாரணம் ஒரு மேஜை, 100 வருடம் கழித்து , காற்று மண் நெருப்பு நீர் ஆகியவற்றால உரு மாற்றம் பெற்று இருக்கும், அதுவும் ஒரு இயக்கம் தானே. உருவம் தான் வேற வேற, உயிர் ஒண்ணு தான், உயிருக்கு உருவம் கிடையாது, அதனால எல்லா உருவதுக்குள்ளேயும் இருக்கும் உயிர் ஒண்ணு தான். உயிர் பிரிஞ்சு போயீ நின்னு வேற வேற உருவம் எடுக்குது, உள்ளார இருக்கறது என்னவோ ஒண்ணு தான். அதனால தான் சொல்றேன், நாம எல்லாரும், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் எல்லாமுமே ஒரே உயிர், உருவங்கள் தான் வேற வேற. அதன் தானே நம்ம இனம் - உயிரினம்.இதை புரிஞ்சுக்காம எதையோ தேடி தேடி அலைய வேண்டியது, அறிவே இல்லாம கடவுள் கிட்ட அத குடு இத குடு ன்னு கேக்க வேண்டியது, அடே முட்டாள், அந்த கடவுளே உன் உயிர் தான டா, உன் உருவத்துல சிக்கி போயீ தான் தான் இந்த உருவம் னு நெனச்சுக்கிட்டு இருக்குற, உயிரை உணராம கடவுள் சிலை கிட்ட போயீ வேண்டிக்குற, செறி அதையாவது உயிரை உணரனும் ன்னு வேண்டிக்கிறயா, அதுவும் இல்ல.... எப்போ தான் உயிரினத்துக்கு இது புரிய போகுதோ, அதுக்குள்ள என் உருவத்துக்கு வயசாகிடும் போல இருக்குதே... எல்லாருக்கும் புரிதலை கொடு இறைவா ன்னு நா வேண்டிக்கறேன்... சிவோஹம் சந்தானம்.

No comments:

Post a Comment