Saturday 12 September 2020

மருந்தைக் காட்டிலும் மந்திரத்திற்குள்ள எளிமையும் வலிமையும்

மருந்தைக் காட்டிலும் மந்திரத்திற்குள்ள எளிமையும் வலிமையும்

ஒரு மருந்தை உற்பத்தி செய்பவனுக்குச் சிரமம் அதிகம் உண்டு. முழுதும் புறச்சாதனங்கள். மந்திரத்தை உற்பத்தி செய்துகொள்பவனுக்கோ இப்படிச் சிரமம் அதிகமொன்றும் இல்லை. பெரும்பாலும் அகச்சாதனங்களேயாகும். வைத்தி யன் காடு மேடெல்லாம் சுற்றியலைந்து தலை பூண்டு கிழங்கு தோண்டி வரவேண்டும்; இவன் கால்மேல் கால் போட்டுக் கொண்டு சும்மா ருத்திராக்க மணியை உருட்டினாலும் போது மானது. அவன் ஓடி அலைந்து பரித்து இடித்துப் பிழிந்து ஊற்றிக் காச்சி அறைத்தெடுத்து உருட்டவேண்டும்; "இவனோ உட்கார்ந்த வண்ணமே ஐம்புலன்களையும் அடக்கி உருட்டி னால் போதுமானது. அவனுக்கு நூறு இருநூறு (குளிகை) உருட்ட சில பலநாள் பிடிக்கும்; அவன் ஆயிரத்தை அரை மணி முக்கால் மணி நேரத்தில் உருட்டி விட்டான். அவனுக்கு பலம் மருந்தானால் இவ்வளவுதான் உருட்டலாம். என்ற அளவுண்டு. அதற்குமேல் உருட்ட முடியாது. மருந்து முடிந்துபோகும். இவனுக்கோ பதினாறோ இருபத்துநாலு உள்ள ஒரு துளசிமாலையோ அல்லது அக்கமாலையோ கிடைத் தால் போதுமானது, எவ்வளவு வேண்டுமானாலும் உருட்ட லாம், தேய்க்கும் போகாது, குறைந்தும் போகாது; நாள்முழு தும் என்பதில்லை; வருடமெல்லாம் உருட்டினாலும் தாங்கும்

அவனுருட்டின மாத்திரை கொடுக்கக் கொடுக்கத் தீர்ந்து விடும். இவனுருட்டின மந்திரம் கொடுக்கக் கொடுக்கத் தீராது அவனுருட்டினதற்குக் கொடுக்கத் தேன் முலைப்பால் என்னும் அனுபானங்கள் வேண்டும். இவனுக்கு அவைகளுள் ஒன்றும் வேண்டியதில்லை. அவன் அன்பு இல்லை என்றால் அது வரையும் காத்திருக்க வேண்டும். இவன் ஒன்றை எதிர்பார் த்துக் காக்கவேண்டியதில்லை. மேல் வேட்டியின் ஒரு சிறகைக் கொண்டு காரியத்தை நடத்தி விடுவேன். அவன் மூட்டை கட்டித்துக்கிக் கொண்டு போக வேண்டும். இவன் கைவீசு கொண்டு போகலாம் மருந்து வெளியே இருந்தால் பிறனுக்கு அதன் உளவு தெரிந்து விடும். மந்திரம் உள்ளிருப் பதால் அதன் ஆழநீளத்தைப் பிறர் தெரிந்து கொள்ள முடியாது;மருந்து போட்டால் (கொடுத்தால்) மனத்தைப் புரட்டிக் கொண்டு ஓ ஓய் என்று வாந்தி வரலாம். மக் திரம் போட்டால் மனத்தையும் புரட்டாது, அடி வயிற்றையும் குழப்பாது. மருந்து போட்டுத் தீராவிட்டால் 10, 5 ரூபாய் மருந்துக் கூலியாவது கொடுக்க வேண்டும். மந்திரம் போட்டுத் தீரவில்லையாயின் மந்திரக்கூலி கொடுக்க வேண்டும் எ ன் ற வழக்கமில்லை. மருந்துச் செலவு செய்து, கொண்டுவந்த காதலால் மருந்துக்கூலி கொடுக்காவிட்டால் வைத்தியர் தன் தோள் வேட்டியை எடுத்து ஏற்றவன் கழுத்தில் போட்டிழுக்க நியாயமுண்டு. மாந்திரீகன் எனக்கொன்றும் கட்டமில்லாத, படியினால், தன் கழுத்திலிருந்த வேட்டியை எடுத்து உதறித் தன் தோளில் போட்டுக் கொண்டு போய்விடுவான்

இன்னும் இம்மந்திரத்தின் பெருமையைப் பற்றிப் பேசி னால் எவ்வளவோ சொல்ல வேண்டியிருக்கிறது. ஆ னா ல் இந்தக் காயம் மருந்து தேனாகி, மந்திரம் மருந்தாயிருக்கும் காலம். இத்தகைய காலத்தின் ஆழ நீளம் தெரியாமல் மந்திர த்தைப் புகழுவோமேயானால் இது பைத்தியம் என்று உலகம் சொல்லும் உண்மையில் அந்த அளவுக்குத்தான் நமக்கும் கஷ்ட

முண்டு, அதுவரையும் சிரமப்பட்டுப்போய் விடுவோமானால் அப்புறம் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ நமக்கு மாத்திரமின்றி யாருக்குமே சிரமமிருக்காதெனத் தெரிகின்றது. பைத்

தியக்காரன் பேசுவதிலும் எழுதுவதிலும் யார்தான் எதைத்தான் எப்படித்தான் சொல்லிவிட முடியும் கேட்டுவிட முடியும். இவ்வளவு சிரமப்பட்டு அந்த உயர்ந்த நிலைக்குப் போய் நம்மால் சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்குப் பயந்து பயர்வால் இவ் விஷயங்களைச் சொல்லித்தானாக வேண்டி யிருக்கிறது

No comments:

Post a Comment