Saturday 12 September 2020

மாட்டை பிடிப்பதா கயிற்றைப் பிடிப்பதா*

*மாட்டை பிடிப்பதா கயிற்றைப் பிடிப்பதா*

சமாதானம் - சிறிது இங்கு நில்லுங்கள்! மீண்டும் போக லாம். மாடு என்பது முன்பாகக் கொம்பு நுனியிலிருந்து பின்பாக வால் நுனிவரையும் கீழே கால் குளம்பு வரையிலும் உள்ள பாகந்தான்-இதையே மாடு என்கின்றோம்.

 இனி: பையன் மாட்டை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு போனான் என்பதைக் கவனிப்போம்

இந்த இடத்தில், முன் கண்டபடியாயுள்ள மாட்டில் எந்த பாகத்தைப் பிடித்துக்கொண்டு காட்டுக்குப்போனான்; என்பதை இங்கு நாம் ஆராயவேண்டும். உண்மையாகப் பையன் மாட்டின் கொம்பையோ வாலையோ காலையோ பிடித் துக்கொண்டு காட்டுக்குப்போக வில்லை. ஆனாலும் மாட்டைப் பிடித்துக்கொண்டு போனான் என்கின்றோம் அப்படியானால் பையன் கையில் இருந்தது என்ன? அது தான் கயிறு

அந்தக்கயிறுக்கும் மாட்டுக்கும் தொடர்புண்டு. அதே கயிறுக்கும் பையன் கைக்கும் தொடர்புண்டு. இதனால் அவன் கயிற்றைப் பிடித்துக் கொண்டால் மாட்டைப்பிடித்துக்கொண் டவனாகி விட்டான். இதனால் மாட்டைப்பிடித்துக்கொள்ளா விட்டாலும் மாடு அவனிஷ்டம் போல் அவனோடு தொடர்பு பட்டு வருகிறதையும் அவன் நின்றால் நிற்கின்றதையும் அவன் போனால் போவதையும் யாவரும் காண்கின்றோம்

இதுபோலவே நாம் முருகன் விஷயத்திலும் கண்டு கொள்ளலாம்

'முருக' என்பது கடவுள் அல்ல சம்பந்தமுடைய சிறந்த வலிய கயிறாகும். அங்கு :மாடானதால் கயிறு போட் டிழுத்தோம்;

 இங்கு கடவுளான தால் மந்திரம் என்னும்கயிறு போட்டிருக்கிறோம். அங்கு மாடு மூலப்பொருளான தால் கண்ணுக்கு ஈன்றாய் தெரிகிறது; இது காற்றுப்போல சூக் குமப் பொருளான படியால் கண்ணுக்குத் தெரிகின்ற தில்லை ஆனால் மந்திரம் கொண்டு நம் முன்னோர்கள் கடவுளை இழுத்து இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment