Monday 21 September 2020

அகத்தியரின் தடங்கள் இன்றும் இலங்கையில் திருகோணமலையில்

 அகத்தியரின் தடங்கள் இன்றும் இலங்கையில் திருகோணமலையில், இன்றும் அகத்தியர் வாழும் புண்ணிய பூமி இலங்கை.


இலங்கை சிவபூமி அகத்தியர் ஆலயம்தான் இது


திருமலை மாவட்டம் மூதூர் கங்குவேலியில் இருந்து ஐந்து கிலோமீற்றர் மேற்கேயுள்ள வனப்பகுதியில், மகாவலி கங்கைக்கு அருகில் அமைந்திருந்த அகத்தியர் தாபனத்திற்கு ஆடி அமாவாசைக் காலத்தில் சைவ மக்கள் சென்று

வருவது வழமை.


இவர்களை விட இங்கு சேனைப் பயிர்ச்செய்கையாளர்களும், விறகுத்

தொழிலாளர்களும் அடிக்கடி சென்று

வருவதுண்டு.


இங்கு அமைந்திருந்த கற்தூண்களும்,

அகத்தியர் ஆலயமும், சிவலிங்கமும், ஈழத்தை முதன் முதலாக சோழர்கள் ஆட்சிசெய்வதற்கு முன்னரே (2500 ஆண்டுகளுக்கு முன்னர்) நிறுவப்பட்டமைக்கான வரலாற்று சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இதேயிடத்தில் 18ஆம் நூற்றாண்டில் 2ஆவது அகத்தியர் தமிழ் பல்கலைக் கழகம் இயங்கியமைக்கான வரலாற்றுத் தடயங்களும் காணப்பட்டன.


இவ்வாறான புராதன சிறப்பையும், புராண காலப் பதிவுகளையும் கொண்ட அகத்தியர் தாபனத்தை கடந்த ஓரிரு நாட்களுக்கு சிங்களப் படைகள் துடைத்தழித்துள்ளன.


திருக்கரசுப் புராணத்தின் படி, கைலையில் சிவபெருமானுக்கும், உமாதேவிக்கும் திருமணம் இடம்பெற்ற பொழுது, கைலைமலை சரிந்ததாகவும், இதனை சீர்செய்யும் நிமித்தம் ஈழத்தின் திருமலைக்கு அகத்திய முனிவரை சிவபெருமான் அனுப்பி வைத்ததாகவும்

கூறப்படுகின்றது.


இதன்படி திருமலையை சென்றடைந்த

அகத்தியர், அங்குள்ள கங்குவேலிப் பகுதியில் சிவலிங்கம் அமைத்து, தனது தவலிமையால் கைலை மலையை வழமைக்கு கொண்டு வந்ததோடு, அங்கிருந்தவாறே சிவன் – பார்வதி

திருமணத்தை தரிசித்ததாகவும்

தெரிவிக்கப்படுகின்றது.


இதன் பின்னர் திருமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர், தற்பொழுது மாவிலாறு என்று அழைக்கப்படும் அகத்தியனாற்றில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் ஐதீகங்கள் கூறுகின்றன.


தமிழ்க் கலைகள் அறுபத்தி நான்கும் அகத்தியரால் இங்கு போதிக்கப்பட்டவையாகும். அகத்தியத் தாபனம் பல்கலைகளையும் போதித்து வந்துள்ளது.


திருமங்கலாய் தொடங்கி மூதூர் துறை மகாவலி வரை மகாவலி ஆற்றுக்கு கிழக்கே கங்கை வெளி பரந்து காணப்பட்டது. இன்று கங்குவேலி என்று பெயர் குறுகிவிட்டது. உலகில் முதலில் நாகரீகம் தோன்றியது இங்கே தான் என மூதூர் அகத்தியர் என்ற ஆய்வு நூலில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. கங்குவேலியிலுள்ள அகத்தியத் தாபனம் அழிந்த பின்னரும், வழிபாட்டுத் தலமாக சிவலிங்கம் காட்சியளித்தது. அத்துடன் அகத்தியத் தாபனத்தின் வாயில் படிகள், சந்திரவட்டக்கல் உட்பட கல்வெட்டுக்கள் என்பன போர் முடிவடைந்த பின்னர் சமாதானச் சூழல் நிலவுகிறது எனக் கூறப்படும் காலத்தில் தான் சேதமாக்கப்பட்டிருக்கின்றன.


ஈழ நாட்டில் அகத்தியரைப் பற்றிய குறிப்புக்கள், நூல்கள், வரலாற்றுச் சுவடுகள் அதிகம் காணப்படுகின்றன.


இந்தியாவில் காணப்படும் தமிழரின் வரலாற்றுக் காலத்துக்கு இவை முற்பட்டவையாகும். தமிழ்ப் பேரவைக்கால நூல்களில் முத்தூர் அகத்தியர் என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்தியுள்ளமையை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அகத்தியர் ஈழத்தில் திருகோணமலையில் பல்லாண்டுகள் காலம் வாழ்ந்துள்ளார் என்பதை அவர் பணிகளாலும், நூல்களாலும் அறிய முடிகின்றது. திருமங்கலாய்ச் சிவன்கோயில், அகத்தியத் தாபனம், திருக்கரசைச் சிவன் கோயில் என்பவற்றை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். இதன் மூலம் திருகோணமலையின் தமிழரின் வரலாறு, வரலாற்றுக் காலங்களுக்கு முற்பட்டது என் பதை உறுதி செய்ய முடிகின்றது.


அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவமுறைகளை வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.


திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி(திருக்கரைசையம்பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகத்தியத் தாபனம் அமைந்திருக்கிறது.


அகத்தியத் தாபனம் தொடர்பாக 2001 ஆம் ஆண்டில் பேரறிஞர்.க. பாலசுப்பிரமணியம் அவர்களால் வெளியிட்டப்பட்ட ஆய்வு நூல் மகாசி்த்தர் மூத்தூர் அகத்தியர் என்பதாகும்.


வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அகத்தியத் தாபனம் தொடர்புடைய புகைப்படங்கள் சில மகாசி்த்தர் முத்தூர் அகத்தியர் என்னும் ஆய்வு நூலில் இருந்து.


மகாசி்த்தர் முத்தூர் அகத்தியர் ஆய்வு நூல்

     -பேரறிஞர்.க. பாலசுப்பிரமணியம்


அகத்தியர்அறிவுரை!

*************************


"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம்

உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி

உனக்கேதடா. பாவத்தை செய்தவன்

சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே.

அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி

தண்டனை தருவார் என்பது யாருக்கும்

தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான்

இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு

நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான்

என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக்

கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம்

இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த

நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று

பொருள். இந்த கருத்தை மனதில்

வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும்

பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக

எளிதாக, மிக நீதியாக தோன்றும்."


      - சித்தர்களின் குரல் shiva shangar

No comments:

Post a Comment