Tuesday 9 June 2020

திருச்செந்தூர் சண்முகர்

பேசும் தெயவம் திருச்செந்தூர் சண்முகர் 
திருவனந்தபுரத்தில் மார்த்தாண்ட மகாராஜா அரசாண்ட சமயம்...

திருச்செந்தூர் திரிசுதந்திர முக்காணி பிரமணர்களுக்கும்
திருவனந்தபுரம் முக்காணி பிராமணர்களுக்கும் பெண் கொடுக்கல் வாங்கல் சம்பந்தம் உண்டு .
இன்று வரை உண்டு.

அந்த சமயம் திருசுதந்திரர்கள் திருவனந்தபுரத்தில் சண்முகரை அங்கு கண்டனர் .

உடனே இதை எப்படியாவது நம் திருச்செந்தூர் செந்திலாதிபன்
ஆலயத்திற்க்கு எடுத்து வந்து உற்சவமூர்த்தியாக ஆக்க வேண்டும் என்று இறைவனின் அசரிரியாக  விரும்பினர்.

உடனே காரியத்தில் இறங்கினர்.

திருவனந்தபுரத்தில் வியாபாரத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற சமுதாயம்
பரக்க செட்டிமார் சமுதாயம்.

உடனே பரக்க செட்டிமார் உதவியை நாடினார்கள். அவர்கள் மகிழ்வுடன் உதவ முன் வந்தனர்.

ஓர் இரவு சண்முகரின் விருப்பதிற்கிணங்க முருகரை எடுத்து
இரவோடு இரவாக ஒரு மூங்கில் கம்பில் துணியை கட்டி ஊஞ்சல் பல்லக்கு செய்து
அதில் சண்முகரை கிடத்தி, துணியை வைத்து மூடி திருச்செந்திலம்பதி எனும் திருச்செந்தூரை நோக்கி
புறப்படலாயினர். திரிசுதந்திர்களும், பரக்கசெட்டிமார்களும் வழியில் திருவிதாங்கூர் சுங்கச்சாவடியில் காவலர்கள் தடுத்தனர்

அவர்களிடம் குழந்தைக்கு அம்மை போட்டு இருக்கிறது
அதனால் பாண்டி நாட்டுக்கு வைத்தியம் பாக்க கொண்டு போகிறோம் என்று
சொல்கின்றனர் .
காவலர்கள் அம்மை என்ற உடன் திறந்து பார்க்க கூட அச்சப்பட்டு அந்த கூட்டத்தை விரைவில் கடத்தி விடுகின்றனர்.

மேலும் விரைவாக நடக்கலாயினர் .

அதற்குள் சிலையை காணவில்லை என்று திருவனந்தபுரத்தில் மார்த்தாண்ட மகாராஜா அரண்மனையில் ஒரே களேபரம்.

மார்த்தாண்ட மகாராஜா கடும் கோபம் ஆகிறார் நாலாபுறமும் தேட ஆணை பிறப்பிகிறார்.

அன்று இரவு மகாராஜா கனவில் சண்முகர் வந்து என் குழந்தைகள் என்னை சரியான இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள். அதுவே என் ஆசை.
நீ பதட்டப்பட வேண்டாம்.
என்னைக் காண இனி திருச்செந்தூர் வா என்று கட்டளை இடுகிறார் முருக பெருமான்.

சண்முகரை சுமந்து செல்லும் அடியவர்கள் ஒரு குறிப்ப்பிட்ட இடத்திற்கு வரும் பொழுது விடிந்து விடுகிறது.

அந்த இடத்தில் சண்முகருக்கு ஜல அபிஷேகம் செய்து சண்முகருக்கு பசிக்குமே நிவேதனம் செய்ய ஏதாவது கிடைக்குமா என்று தேடுகிறார்கள்.

அது ஒரு கடற்க்கரை ஒட்டிய வனாந்திர காடு அங்கு ஒரு குடிசையில் ஒரு வயதான பெண் வாழ்ந்து வருகிறாள்.

காலை உணவு தயாரிக்க புளித்த மாவும், பயறு கஞ்சியும் வைத்து இருக்கிறார்கள்.
உடனே இந்த சண்முகரின் அடியவர் கூட்டம் அந்த பெண்மணியிடம் வேண்டி
சண்முகருக்கு புளித்த தோசையும், கஞ்சியும் நிவேதமாக வைத்து பூஜை செய்கிறார்கள்.

அந்த நிவேதனம்தான் உதயமார்தாண்ட கட்டளையில் இன்று வரை
ஒரு நாள் முன்பே அரைத்த புளித்த தோசை, பயறுகஞ்சி என
சண்முக நிவேதனம்.

அந்த அம்மைத் தழும்புதான் இன்னும் உற்சவர் சண்முகர் முகத்தில் உள்ளது.

சண்முகர் சிலைகளும், நடராஜர் சிலைகளும்தான் பின்னர் தங்கம் என எண்ணி டச்சுக்கார மேசானிய திருடன்களால் திருடப்பட்டது.
ஊரே பதைபதைத்தது.
அது தங்கம் இல்லை. ஐம்பொன் என அறிந்து டச்சுத் திருடன்கள் கடலிலேயே போட்டு விட்டு சென்றனர்.

வடமலையப்பர் பிள்ளை கனவில் முருக பெருமான், தான் கடலில் இருப்பதாக சொல்ல வடமலையப்ப பிள்ளை  காயாமொழி ஆதித்தனிடம் சென்று முறையிட்டார். காயாமொழி ஆதித்தன் மீனவர்களை அழைத்துக் கொண்டு கடலுக்கு சென்ற போது கடலின் மேலே மிதக்கும் எலுமிச்சம் பழத்தை கண்டு அதற்கு கீழே போய் பார்க்க உத்தரவிட்டார்.

என்ன ஆச்சரியம் !

முருக பெருமான்,நடராஜர் அனைத்தும் அப்படியே எடுத்து கடலில் கொண்டு வைக்கப்பட்டு மீண்டும் திருச்செந்தூர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த சம்பவம்தான் காயாமொழி ஆதித்தன் மனதில் முருக பெருமான் மீது தீராத பாசத்தை ஏற்படுத்தியது. ஆதித்தமார்கள் நிலத்தில் எள் மானாவாரியாக விதைக்கப்பட்டது.

என்ன ஒரு ஆச்சரியம் !
ஒரு பங்கு கிடைக்கும் இடத்தில் 3 பங்கு எள் மகசூல் கிடைத்தது. அந்த பணத்தை வைத்தே காயாமொழி ஆதித்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு தேர்கள் செய்து கோயிலுக்கு உபயமாக கொடுத்தனர்.

ஆக முருகர் எந்த ரூபத்தில் யாரோடு, எப்போது, எப்படி நட்பு பாராட்டுவார் என்று நம்மால் கூற முடியாது.

இச்சம்மவங்கள் அனைத்திற்கும் வித்திட்ட முக்காணி திரிசுதந்திர்கள் முருக பெருமானின் பேரன்புக்கு பாத்திரமானவர்கள் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.

அதனால்தான் தில்லை மூவாயிரம் தீட்சிதர்கள், திருச்செந்தில் ஈராயிரம் முக்காணியர்கள் என்பது தொடர்கிறது.

முருக பெருமானை நம்பி அபயக் குரலோடு வரும் பாமரனையும் தரிசிக்க வைக்கும் கடமை,பொறுப்பு இங்கு உள்ள அத்தனை பாரம்பரிய அர்ச்சக பெருமக்களுக்கும் உண்டு.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க தன் பிள்ளை தானே வளரும் என்பது திருச்செந்தூரானின் உபதேசம் என்றும் திருச்செந்தூரில் தொடர வேண்டும்.

வேலும் மயிலும் சேவலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா

அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்

தவறாமல் பகிர்வோம்.

No comments:

Post a Comment