Thursday 25 June 2020

உண்மையான தானம் செயல்முறை தர்மர் ஆசியுடன்

நாங்கள் ஒரு குழு அமைத்து ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு அன்று எங்களால் இயன்ற உதவிகளை இயலாத ஏழைகளுக்கு செய்து வருகிறோம்.

தர்ம மகாராஜா அவர்கள் இன்றும் இந்த கலி காலத்திலும் ஒருவருடைய உடலில் இறங்கி வாக்கு அருள்வாக்கு ஆசி ஆகியவற்றை வழங்கி வருகிறார்கள்

அவர்களிடம் தர்ம தேவதையை உபாசிப்பது எப்படி என்று நான் கேட்டேன். அப்போது அதற்கு அவர் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு மற்றும் ஏதாவது ஒரு தானத்தை செய்து வாருங்கள் அதாவது உங்களால் எது இயலுமோ அவற்றை இயலாதவர்களுக்கு என்ன தேவை என்று அறிந்து அவர்களுக்கு தானம் அளித்து வாருங்கள் மூன்று மாதங்கள் இவ்விதம் தானம் செய்துவிட்டு வாருங்கள் உங்களுக்கு தர்மதேவதை உபாசனையை பற்றி உரைப்போம் என்று வாக்கு மலர்ந்து அருளினார்

பெறுபவர்களின் கண்களில் அந்த தர்ம தேவதையே நீ காண்பாய் என்றும் அவர் நல்வாக்கு மலர்ந்து அருளினார்

அதன்படி நான் தனி ஒரு ஆளாக பங்குனி மாதம் முதல் தானங்கள் செய்து வந்து கொண்டு இருந்தேன் ஒரு சிறிய தொகை மாதமொருமுறை தமிழ் மாத பிறப்பு அன்று இயலாதவர்களுக்கு தானம் அளித்து கொண்டு இருந்தேன்

பின்னர் என்னுடன் கைகோர்த்து பல நண்பர்கள் ஒரு குழுவாக சேர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக கொஞ்சம் தானம் தொகையை அதிக படுத்தி எங்கெங்கே யார் யார் கஷ்டப்படுகிறார்கள் என்பதை எல்லாம் கண்டறிந்து அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம்

இந்த மாதம் அதாவது ஆனி மாதம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது அடுத்த மாதம் முதல் நாள் தமிழ் மாதம் ஆடி மாதம் முதல் நாள் அன்று கீழ்வரும் தான தருமங்கள் செய்யலாம் என்று திட்டமிட்டு உள்ளோம்

இந்த மாத தானம் லிஸ்ட்
1. ஸ்ரீனிவாசன் அய்யா சென்னை சோழிங்கநல்லூர் அன்னதானம்.

2. எயிட்ஸ் பாதித்த குழந்தைகள் காப்பகம், சென்னை

3. கோவை உணவின்றி தவிக்கும் பழங்குடி மக்கள் - அன்னதானம்

4. ஹைதராபாத் கோசாலை - மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரம்.

இணைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம் என்னுடைய தொலைபேசி எண் 9176012104

நமது வாட்ஸ் அப் குழு - தானம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் இங்கே சொடுக்கி இணைந்து கொள்ளலாம்

https://chat.whatsapp.com/LfSBHFVFGr6I5APAwveau1

No comments:

Post a Comment