Friday 26 June 2020

நந்தியெம்பெருமான் ஜீவ அருள் நாடி வாக்கு


நந்தியெம்பெருமான் ஜீவ அருள் நாடி வாக்கு

நாடி வாசிக்கும் ஆசான் - திரு சித்த குருஜி , கோவை

அருள் கேட்பவர் - தி. இரா. சந்தானம் கோவை

நாள் : 26/06/2020, வெள்ளிக்கிழமை மாலை சஷ்டி திதி


***************************************

ஆதி அந்த பரம்பொருள் பாதம் போற்றி

அன்னையவள் உமையாளின் அடிகள் தொட்டு

ஓதியே உரைக்கின்றேன் ஜீவ நாடி

ஓங்கார கணபதியின் பாதம் போற்றி

நந்தி நான் உரைக்கின்றேன் ஜீவ நாடி

நல்லபடி மானிடர்கள் வாழ்வுக்காக

இன்று நான் மகனே உன் வாழ்க்கை தன்னில்

இருந்த பல பலாபலன்கள் வாக்கு தானே

நன்றாக ஜீவ நாடி உரைக்கின்றேனே

நல்லபடி தெளிவாக கேட்டுக்கொள்வாய்



அப்பனே இப்போது பூமி தன்னில்

அனைத்து பேர்களுடைய வாழ்க்கை தானும்

முந்த நாள் செய்த கர்ம வினையினாலே

முற்றிலுமாய் அமைந்ததப்பா தெரிந்து கொள்வாய்



இன்று வரை வாழ்கின்ற வாழ்க்கை எல்லாம்

இதுவரைக்கும் அவரவர்கள் செய்து வந்ததே அன்றி 

பலவினைகளின் பயனே  ஆகும்

அதன்படியே அனைத்துமே நடக்குமாமே 



நடக்குமே சகலத்தையும் தெரிந்து கொள்வாய்

நல்ல வகையில் செய்திருந்தால் இப்போதைக்கு

அதற்குரிய பலாபலன்கள் நடக்குமப்பா

அதற்க்கு மேல் அவரவர்கள் செய்த கர்மம்

அப்பனே கொடுமையாய் இருந்து விட்டால் 

தலைவிதியாய் அவையவையே

அவரவர்க்கு  தான் வந்து கொடுமை அது செய்யும் பாரே



இருக்கின்ற கர்மவினை முழுதும்

இந்த ஒரு வாழ்க்கையிலே நடந்து தீர்ந்து

முழுவதுமாய் அழிந்து விட்டால்

அவைகளெல்லாம் முற்றிலுமாய் தீர்ந்து விடும் அப்பா

அவைகளிலே  மிகுதி அது இருந்து விட்டால் அப்பனே

ஆனதொரு துன்பம் தானே

வழிவழியாய் பல பல பிறவி எடுக்க வைத்து

வாகாக அனைத்துமே அனுபவித்து

தலைவிதியாய்  தீர்க்கவே வேண்டும் அப்பா

தானான கர்மத்தின் செயலாய் ஆகும்



அதனினால் மனிதரோடு வாழ்வு தன்னில் அப்பனே

செய்கின்ற கருமங்கள் எல்லாம்

முடிந்த வரை நல்லதாய் செய்து விட்டு

முற்றிலுமே நற்பயனை அனுபவித்தால்

எதுவொமொரு குறையுமில்லை மானிடருக்கு

எப்போதும் துன்பமின்றி வாழலாமே



வாழலாம் மைந்தனே வகையாய் சொல்வேன்

வாழுகின்ற காலத்தில் அவரவர்கள் பூணலாம்

பெரும் சிரமம் நீக்கி தானே

பொல்லாத கர்மவினை நீக்கி தானே

ஆளலாம் புவிதனிலே ஆன்ம பாதை அப்பனே

அவரவர்கள் விதிப்படியே



தானான இந்த ஒரு உண்மை தன்னை

தரணியிலே யாவருமே தெரிந்து கொண்டு

வீணான கர்மத்தை துன்பம் தன்னை

விதிப்பயனால் வந்த பல விதிகள் தன்னை

தானாக விலகி விட்டு

இந்த வாழ்வை தேனாக அனுபவித்து தீர்ப்பதற்கு

சித்தர் முதல் இந்த ஒரு பூமி தன்னில் 

திறம்படவே வாழ்ந்த பல மகரிஷிகள்

உத்தமமாம் ஞானிகள் உயர்ந்த யோகி

உண்மை தன்னை எடுத்து உரைத்து வைக்கும் மாந்தர்

அத்தனையும் விலக்கி வைத்து

வீணாகத்தான் அப்பனே விட்டில் போல்

விழுந்து தான்  செத்தே மடிகிறார் தீமை தன்னில்

சிவலோகம் காணாத மாந்தராக



மாந்தராய்  வந்து இந்த பிறப்படெடுத்து

வையகத்தில் பூணுகின்ற வாழ்க்கை தன்னில்

தீயான வெறும் கர்ம வினையை தீர்த்து

திறம்படவே மெய்யான பாதை பூண்டு

ஞானத்தின் வழிப்பாதை சென்று கொண்டு

நல்ல சற்குருவினுட உபதேசங்கள்

தேனான அமுத வாக்கு அதனினாலே

தெளிவான கர்மவினை விலக்கி தானே

பூணலாம் மெய்ஞான வாழ்க்கை தானே

புவியினிலே பிறந்த கர்மம் விலகி கொள்ள




கொள்ளவே நன்றான வாசல் தன்னை

கோடானுகோடி மாந்தர்கள் தெள்ளவே

தெளியாமல் பூமி தன்னில்

தெரியாத கடும் இருட்டில் விழுந்து தானே

மெல்லவே மடிந்து பிறந்து  இறக்கிறார்கள்

வீணாக பிறந்து பிறந்து இந்த வையகம்

தேனான அமுதத்தை உண்ணாமல் தான்

பெரும் சிரமத்தில் மடிகின்றார்கள்



மடிகின்றார்கள் வையகத்தில் மாந்தர் கோடி

மக்களுக்கு அறிவின்றி அவர்களெல்லாம்

பிடி சாம்பல் ஆகியே போன மாந்தர்

பொழுதொன்றும் காணாமல் வீணாய் மாண்டார்

அழிவான பாதையிலே சென்று தானே

அவரவர்கள் வையகத்தில் மடின்றார்கள்



மடிந்தாலும் மைந்தனே நன்றாய் கேளு

வாழ்க்கையிலே குரு மட்டும் வாய்த்து விட்டால்

இடிந்து விடும் அவர் செய்த கருமம் எல்லாம்

இரவு பகலான சூட்சுமங்களெல்லாம் தெரிந்து விடும்

சூட்சுமத்தின்  பாதை மாற்றம்

தெளிவான குருவின் அருள் உபதேசத்தால்

புரிந்துவிடும் உண்மையும் தத்துவமும்

புகலான மெய்ப்பொருளின் சூட்சுமமும்



அறிந்த அறிவு அதிலிருந்து மீண்டு தானே

அப்பனே அங்கொன்றாய் நின்று தானே

தெளிந்தமுது ஞான வேட்கை ஒன்று தானே

தெளிவான மெய்ஞ்ஞானம் புகட்டுமாமே



புகட்டுமே மைந்தனே தெளிவாய்க்கொள்ளு

பிறந்த இந்த பிறவியதன் நோக்கந்தானே

மறந்து விட்டு மனித குலம்

மீண்டும் மீண்டும் வையகத்திலே  பிறந்திறக்கின்ற தன்மை

தெரிந்து அதனில் இருந்து விளக்கான

இந்த தெளிவான வாழக்கை அது அறிந்து கொள்வோம்

பிறந்ததன் நோக்கம் அது அறிந்து கொண்டு

புவியிதனில் அதற்குரிய வாழ்க்கை வாழ்ந்து

தகுந்த குரு ஆசானால் மெய்ஞ்ஞானத்தில்

தக்கபடி அதில் நுழைந்து

ஆன்ம ஞானம்



ஆன்ம ஞானம் நுழைந்து அதற்குள்ளேயே

மெய்ஞ்ஞானத்தில் உகந்ததொரு யோக பலன் அனுபவித்து

சிறந்த தவ ஞானம் சிவ யோகம் கூடி

சிற்சபையில் ஆடுகின்ற அம்பலத்தான்

அந்தரத்தில்  நின்றாடும்  மார்க்கங்கண்டு

அதனுள்ளே மறந்து உன் நாவில் தானே

சிறந்தமுதம் தேனாக வடிய கண்டு

சிவயோக மார்க்கமதில் நிறைந்திருந்தது

உறைந்ததனில் உண்மை தனை தெரிந்து நித்தியம்

உகந்த பரிபூரணத்தில் கலக்கலாமே



கலக்கலாம் மைந்தனே தெளிவாய்க்கேளு

கற்பக விருட்சம் போல் இருந்து தானே நிலைக்கலாம்

என்றுமே பிறப்பிறப்பு  இல்லாத நிரந்தரமாம்

யோகி  தன்னில் கலந்திடலாம் கற்ப காலம் தன்னில் தானே

கயிலாய மலை வாசன் கிருபையாலே



கிருபையாம் இதை நானும் உரைப்பேன் மைந்தா

கேடில்லை உந்தனது வாழ்க்கை தன்னில்

நிறைந்த கல்வி கற்றுயர்ந்து வருகும் போது

நிச்சயமாய் உந்தனது விதியானாலே

உறைந்த பல மார்க்கங்கள் கல்வி தன்னில்

உகந்தின்றி பல வழிகள் தோன்றும் போது

நிறந்த விதி பயன் படியே நீ எந்நாளும்

நிச்சயமாய் தொழில் பலவும் புரிவதற்கு

உகந்ததொரு பாதையினை தேர்வு செய்து

உந்தனது முயற்சியினால் வழியாய் பற்றி

சிறந்ததொரு பாதை அதை சேர்த்து நீயும் தான் வந்தாய் 



அப்போது உந்தனுக்கு இடையூறாய்

எத்தனையோ துன்பமெல்லாம்

இருந்து வழி தெரியாமல் தடுமாறித்தான்

பெருத்த பல சூறாவளிக்காற்று போல்

பேரான சில துயரம் உன்னை தானே

வழித்தடத்தில் ஆட்டுகின்ற போது

அங்கு மகானாக அகஸ்தியரும் வந்து தானே

கரம் பிடித்து  உன்னை ஒரு வழி நடத்த

கடைசிவரை இதை விடாமல் இதில் இருந்து மீட்டு

சிரம் குவித்து நீ வணங்கி நிற்கும் போது

அத்தீமையெலாம் விலக்கி உன்னை கொண்டு சென்று

நிறைந்த மனம் பண்போடு உன்னைத்தானே

நல்ல வழி மீட்டெடுத்து வந்தார் அன்றோ



வந்தாரே அகஸ்தியரும்  வழி காட்டித்தான்

வரலாறு காணாத அளவுக்கு

நின்றாரே உந்தனது கரம் பிடித்து

நிச்சயமாய் நீ இனிமேல் இந்த வாழ்வில்

எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தான்

எடுத்து வை காலடி தான் என்றானே

உன்தனது காலடி ஒவ்வொன்றும் தானே

உரமாகும் சருக்காமல் நீயும் நானே

நந்தவனம் போல் உனது வாழ்க்கை தன்னில்

நல்லபடி வாழுவாய் என்றுரைத்து



இந்த நொடி வரையிலுமே உனக்குத்தானே

இருந்தாட்சி செய்து தன் ஆசி தன்னை

எந்த ஒரு கணமும் குறையா வண்ணம்

எடுத்துன்னை இயம்பியே என்னாளெல்லாம்

தொந்தரவு துயர் துன்பம் பிணி இடையூறு

எந்த வழி தனிலும் வராத வண்ணம்

இதுவரைக்கும் உந்தனை வழி நடத்தி

இடர் தீர்த்து வருகின்றார் அகஸ்தியரே



சென்று திருத்தலங்கள் பல ஆலயங்கள்

சிறந்த நல்ல சீவ சமாதியெல்லாம் நின்று

தரிசனங்கள் செய் என்றளவுக்கு

நீ செல்லும் போதிடங்கள் அத்தனையும்

உந்தனுக்கு என்று தனியாக தான்

உகந்த நல்ல வாய்ப்புகள் கிடைத்து நீயும்

அன்று தொட்டு இன்று வரை

சென்று வரும் ஆலயங்களில் உனக்கு வாய்ப்பூனோடு

எங்கு நீ சென்றாலும் அங்கு உனக்கு

ஏதோ ஓர் அதிசயமாய் சகல துண்டாம்

உன்தனது உணர்வில் கலந்து தானே

உன்னை வழிநடத்தும் என்று கூறுகின்றேன்



ஆனதினால் மைந்தனே உந்தனுக்கு

அரும்பிறவியாய் நீ இப்போதைக்கு தானும்

அகஸ்தியனாரை குருவாய் கொண்டு

தலை மேலே அவர் பாதம் ஏந்திக்கொண்டு

சீரும் சிறப்புமாய் அவர் நினைவு திறந்திடவும்

உன்தனது நெஞ்சில் தானே

ஏராளமான சென்மம் எண்ணி தானே

எப்போதும் அவர் நினைவோடு இருந்து கொண்டு

போகின்ற பாதையினை புனிதமாக புகலுகிறேன்

நன்றாக அமைத்து கொண்டு நீயும் அவர்க்காண பணி

தினம் தினமும் நித்தமுமே  செய்து வருகின்றாயே



வருகின்றாய் உன்தனது வாழ்க்கை தன்னில்

வளமான குடும்பமோடு வாழ்க்கை தன்னில்

இருக்கின்ற தெய்வீக வாழ்வு தன்னை

இன்னமும் நீ நடத்தி செல்வதற்கு உனக்கு

நல் அறிவாக இருந்து கொண்டு

உன்னை நடப்பிக்கும் ஆசானாக

தினம் தினமும் அவருக்காய் பணிகள் தானே

செய் கின்ற ஒவ்வொரு காரியமும் 

நினைத்தது போல் நிறைவேறி முடிவதற்கு

நல்ல பல அனுசரையான மாந்தர் உதவிக்கரம் நீட்டி

இவர்களெல்லாம் உன்னோடு கரம் கோர்த்து செய்வதற்கு

இனிவரும் காலத்தில் அனைவரும் தான்

உன்னோடு இனைந்து செயல் படுவதற்கு

மனமுள்ள நல்லவர்கள் வந்து சேர்ந்து

வழி நடத்தி வைப்பார்கள் எதிர்காலத்தில்



அகஸ்தியனார் உந்தனது குருவாகத்தான் அப்பனே

அமர்ந்திருந்து உந்தனுக்கு இனி நடக்கும்

உந்தனது வாழ்வு தன்னில் இடையூறு பல நீக்கி

உந்தனைத்தான் வழி நடத்தி

எதிர்காலம் தன்னில் தானே வளமான உயர்வாழ்க்கை

உயர்வாழ்க்கை தன்னில் தானில் தானே

புவி வாழும் காலத்தில் உந்தனுக்கு

புகழோடு நற்செல்வம் அனைத்தும் தானே

நிலவாழ்வு தன்னிலே நீண்ட ஆயுள்

நிறைந்ததொரு ஆரோக்கியத்தினோடு

வாழுகின்ற காலத்தில் உந்தனுக்கு

வருகின்ற செல்வங்கள் செழிப்பினோடும்

பூணுகின்ற பொன் பொருட்கள் பூமி யோடும்

புகழோடு வாகனங்கள் குழந்தை கல்வி

ஏராளமான செல்வா செழிப்பினோடும்

எதிர்காலம் குறையின்றி வாழ்க்கை தன்னில்



கூடவே துணைவியார் உடல் நலமும்

குடும்பத்தில் மனம் மகிழ்ச்சி சந்தோஷங்கள்

ஆனதொரு கல்வி செல்வம் மேன்மையோடு

அப்பனே உயர் தொழில்கள் கீர்த்தி பெற்று

ஞானம் பெறுகின்ற அளவுக்குத்தான்

நல்ல சற்குருவினுட ஆசி யாலே

பூணவே மெய்ஞ்ஞான வாழ்க்கை தன்னில்

புதுவிதமாம் கருத்துக்கள் நிலைப்பதற்கு

காணவே தரிசனங்களோடு

கண்டேனே மனமகிழ்ந்து இருப்பதற்கும்

கயிலாய யாத்திரைகள் கொள்வதற்கும்

கடந்தினியே  இதற்க்கான சூழ்நிலைகள்

மெய்ஞ்ஞான உள்ள பல மனிதர்களோடு

மேன்மையான பல சிவ தலங்கள் சென்று

அஞ்ஞான இருள் நீக்கி வருவதற்கும் 

அகஸ்தியனார் பேராசி  செய்கின்றாரே



நல்லாசி செய்துன்னை எப்போதும் தான் நல்லபடி

உன் வாழ்வில் மேன்மை பெற்று

எந்நாளும் உந்தனோடு கிருபையாக

எப்போதும் இருந்து பல பணிகள் எல்லாம்

இந்நாளில் தடையாக இருப்பவைகள்

இதற்கு மேல் உந்தனது இல்லம் தன்னில்

நல்லபடி நடக்கின்ற அளவுக்கு

நன்றாக பேராசி செய்து தானே

உன்னை வழி நடத்தியே உந்தனுக்கு

உகந்தபடி அவரும் உனது விருப்பமெல்லாம்

நல்லபடி செய்வதோடு 

உன்னைத்தானே ஞானவழி ஞானப்பாதை தன்னில்

எந்நாளும் வழிநடத்திக்கொண்டு தானே

எதிர்காலம் ஓர்குறையும் இல்லாமல் தான்

நன்னாளாய் எந்நாளும் இருப்பதற்கு

நல்லபடி அகஸ்தியனார் உந்தனுக்கு

உள்ளபடி உனதருகே இருந்து தானே

உகந்ததனைத்தயும் உனக்கு அளித்திட்டானே 



எந்நாளும் ஓர்குறையும் இல்லாவண்ணம்

உந்தனுக்கு அருள் வழங்கி இருந்து கொண்டு

ஆசானாய் அருகிருந்து வழி நடத்தி

அப்பனே குருவாக இருந்து தானே

ஏதுமொரு குறையின்றி வாழ்க்கை தன்னில்

எப்போதும் நன்றாக வாழ்வாய் என்று

தானும் அவர் கரம் உயர்த்தி ஆசி செய்தார்

சற்குருவாய் இருந்துனக்கு ஆசியாக



நான் உனக்கு ஆசி செய்தேன்

அகத்தியானார் நல்லபடி உனக்கு ஆசி செய்யும் போது

ஈசனவன் எப்போதும் உந்தனுக்கு

இடர் துன்பம் நீக்கி உன் வாழ்க்கை தன்னில்

போதுமென்ற அளவுக்கு பொன் பொருட்கள்

புகழுடனே சகலவிதமானவையும்

ஞானமுடன் நீ வாழுகின்ற அளவு

நல்லபடி தருவார் என்று ஆசி செய்தேன்



ஏதுமொரு குறையுமின்றி மைந்தா நீயும்

எப்போதும் நல்லபடி வாழ்வாயாக



ஞான தவ முனிவர்கள்  சித்தன் உனக்கு

நல்லாசி செய்தார்கள்



- நமசிவாயம் -




9 comments:

  1. ஐயா வணக்கம்
    நந்தி யேம்பருமான் ஜிவ நாடி படித்தது நமது
    Pogalur குடிலில் அ அல்லது வேறு இடத்தில்? நந்தி யேம்பருமான் என்பவர் சித்தர் அ அல்லது சிவபெருமானின் வாகனமான நந்தி யா அல்லது இரண்டும் ஒன்றே ??

    மற்றும் ஒரு சிறிய சந்தேகம் தவறு இருந்தால் மன்னிக்கவும்.. நமது பிறப்பு முன் வினைகள் பயன் என்றால் அது போலவே நாம் இன்று செய்யும் தீவினைகள் (((தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் முன் வினை பயனில் தானே வரும்))) தவறு இருந்தால் மன்னிக்கவும்..

    ReplyDelete
    Replies
    1. நந்திஎம்பெருமான் ஈசனின் வாகனம், அகத்தியரின் குரு, ஈஸ்வர சொரூபம், நந்தி தேவர் என்று அழைக்கப்படும் தலையாய சித்தர். அவரது ஜீவ நாடி சித்த குருஜி என்ற குருவால் வாசிக்கப்படுகிறது. இந்த பிறவியில் புதிதாக வினை பயனை சேர்த்து கொள்ளாமல் புண்ணிய பலன்களை பெருக்கி முன் வினை பாபங்களை களைந்து, அருள் பாதையில் செல்ல வேண்டும். மேலும் விவரங்களுக்கு my whats up 9176012104. அன்னை ஆதிசக்தி யும் ஜீவ அருள் வாக்கு வாட்ஸ் அப் மூலம் வழங்கி வருகிறார்கள். அங்கே பல ஞானிகள் வந்து வாக்கு உரைக்கிறார்கள். மாணிக்கவாசகர் வந்தார், சாயீ பாபா வந்தார், அகத்தியர் வந்து உள்ளார், சுகப்ரம்மர் வந்து உள்ளார், பராசக்தி வந்து உள்ளார்.

      Delete
    2. மேலும் உங்களது ஊர் பெயர் பதிவிட்டால் நன்றாக இருக்கும்

      Delete
  2. ஐயா வணக்கம் தகவலுக்கு நன்றி... எனது பெயர் கிரி கோவை மாவட்டம்... உங்களது blog அனு தினமும் படிப்பேன் நல்ல தகவல்களை மற்றும் ஆன்மிக சிந்தனைகள் பயன் உள்ளதாக இருக்கிறது... மகா பெரியவா பற்றி தகவல் அருமை....

    ReplyDelete
  3. Can you give Nadi reading thru whatsup

    ReplyDelete
    Replies
    1. I can request for ambal nadi after 1 week. Send msg from your whats up number to mine at 9176012104, santhanam

      Delete
    2. Vanakkam sir, I'm from Malaysia. Can I get nadi reading through WhatsApp?

      Delete