Wednesday 3 June 2020

ரமணர் அருள்மொழிகள்

ஸ்ரீ ரமண மகரிஷி..!

ரமணர், “இன்று நீ முக க்ஷவரம் செய்துகொண்டாயா?”

என்று கேட்க ஒரு தொடர்பும் இல்லாதது போல வந்த கேள்வியைக் கேட்டு சற்றே விழித்து நின்றார்.

ஆனாலும் அன்று அவர் க்ஷவரம் செய்துகொண்டதைச் சொன்னதும், ரமணர் “சரி, முகத்தில் நீர் மற்றும் நுரையைத் தடவியதும், தீட்டிய கத்தியை உபயோகிக்கும் முன்பாக என்ன செய்தாய்?’ என்று கேட்டார்.

அதற்கு அவர் ஒரு கண்ணாடியை எடுத்துக்கொண்டு மேற்கொண்டு செய்ததைச் சொன்னார்.

“சரி, கண்ணாடியில் முகத்தைப் பார்த்ததும், உன் முகத்தில் உள்ளதை மழித்தாயா, அல்லது கண்ணாடியில் உள்ள பிம்பத்தில் இருந்த முடியை நீக்கினாயா?

அதேபோல, இந்த சாஸ்திர சமாச்சாரங்கள் எல்லாம் அந்தக் கண்ணாடி போலத் தான்.

எப்படி அதன் உதவிகொண்டு க்ஷவரம் செய்தாயோ, அதேபோல சாஸ்திரங்கள் சொல்வதைக் கேட்டு கடைசியில் உன்னை நீ தெரிந்துகொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.

நீயாக உணர்கிற அந்த ‘நான் யார்?’ என்று விசாரம் செய்யும் பயிற்சியே முக்கியம்.

எவ்வாறு கண்ணாடி இருப்பது மட்டும் பயன் தராதோ, அதேபோல சாஸ்திர அறிவு மட்டுமே போதாது.

அந்த அறிவு இல்லாது போனாலும், பயிற்சி செய்யும் நீ தான் முக்கியம்” என்றார் ரமணர்.

ஒருவன் தான் என்று உணரும் தன்னை தன்னுள் மூழ்கி அவ்வாறு இருப்பது யார் என்பதை அறிவதே அனைத்து சாஸ்திரங்களின் இறுதி லட்சியம்.

இதுதான் அவரது போதனை.

வேறெதுவும் கேட்காது ஞானம் பெரும் வழியைத் தேடுவோர்க்கு ரமணர் இதுவே நேரான பாதை என்று சொல்வார்.

ஆனால் மற்ற வழிகளில் செல்வோரை அவர்களது வழிகளிலேயே சென்று அதைக் காணச் சொல்வார்.

*ஸ்ரீ ரமண மகரிஷி...!*

*"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"*

*"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"*

No comments:

Post a Comment