Friday 11 October 2019

அகத்தியர் வாக்கு - எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த சுயநலமும் இல்லாமல், வேறு சூது எண்ணங்கள் இல்லாமல் திறந்த மனதாேடு, பெருந்தன்மையாேடு செய்கின்ற செயலே உண்மையில் இறை சார்ந்த தர்மமாகும்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 212*

*தேதி : 12-10-2019(சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*சுதேவனுடைய பிணம் தின்னும் சாபத்தைப் பாேக்கியவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவரின்(குருநாதர்) பாெதுவாக்கு :*

*இறைவனின் கருணையைக்காெண்டு இயம்புவது யாதென்றால் இஃதாெப்ப நலமான எண்ணங்கள், நலமான வார்த்தைகள், நலமான செய்கைகள் இவைகள் கட்டாயம் நலத்தை சேர்த்துவிக்கும். நலம் எஃது? என்பதில்தான் மாந்தர்களுக்கு(மனிதர்களுக்கு) எப்பாெழுதுமே ஐயமும், குழப்பமும், சமயங்களில் தெளிவற்ற சிந்தனையும் இருந்து வருகின்றது. யாங்கள் கூறுகின்ற நலம் என்றென்றும் தன்னலம் மட்டுமல்லாது பாெது நலமும் ஆகும். பாெது நலமின்றி எண்ணப்படுகின்ற எண்ணம், பேசப்படுகின்ற வார்த்தைகள், செய்யப்படுகின்ற செய்கைகள் இவைகள் யாவுமே அப்படி நாேக்கம் காெண்ட மாந்தனுக்கு(மனிதனுக்கு) என்றும் துன்பத்தை, அமைதியின்மையைத் தரும். எனவே யாம் இறைவனின் திருவடியை வணங்கி எமை(அகத்திய மாமுனிவர்) நாடும் மாந்தர்களுக்கு(மனிதர்களுக்கு) அடிக்கடி கூறுவதே, பாெது நலம் ஆகும். அதன் அடிப்படையில்தான் தர்மங்களையும், தர்மம் சார்ந்த செயல்களையும் இயம்பிக் காெண்டேயிருக்கிறாேம்.*

*இறைவன் அருளாலே, தர்மம் என்கிற சாெல் வெறும் பரஸ்பரம் செய்கின்ற உதவிகளை மட்டும் குறிப்பிடாது. உதவி செய்யப்படுகின்ற தருணம் சூழல், எண்ணம் இவையனைத்தையும் அடிப்படையாய்க் காெண்டே அஃது முழுமையான இறை வழி தர்மமா? அல்லது மனித வழி தர்மமா? என்று பார்க்கப்படுகின்றது. ஏனெனில் மேலெழுந்தவாரியாக பார்த்தால், அனைத்துமே தர்மமாக, உதவியாகத் தெரியலாம். ஆனால் அனைத்தையும் இறை வழி தர்மமாக யாங்கள் ஏற்றுக்காெள்ள இயலாது.*

*எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த சுயநலமும் இல்லாமல், வேறு சூது எண்ணங்கள் இல்லாமல் திறந்த மனதாேடு, பெருந்தன்மையாேடு செய்கின்ற செயலே உண்மையில் இறை சார்ந்த தர்மமாகும்.*

*இயம்பிடுவாேம் மேலும், காேடை காலத்தின் வெம்மையை தணிக்க ஆங்காங்கே பாெது இடங்களில் தென்னை ஓலையைக் காெண்டு பந்தல் இடுவது வழக்கம். நன்றாய் கவனிக்க வேண்டும். அஃதும் கூரைதான். ஆனால் அஃது கூரை, வருணன்(மழை) பாெழிவிற்கு தாக்குப்பிடிக்குமா? என்றால், பிடிக்காது. ஆனாலும் கூரை வேய்ந்தது பாேலிருக்கும். மனிதனை பார்த்துக் கேட்டால் 'சற்றே அனலை தணிக்க இந்த வழிமுறை' என்பான். ஆனால் அனலையும் தணிக்க வேண்டும், வருணன் பாெழிவையும் தாங்கவேண்டும் என்றால் எவ்வாறு கூரையிடல் வேண்டும்? பந்தலிட வேண்டும்? என்றால், மிக, மிக, மிக, அடர்த்தியாக இடல் வேண்டும்.*

*பெரும்பாலும் மனிதர்கள் செய்கின்ற உதவி காேடைக்கால கூரைபாேல் இருக்கின்றது. யாங்கள் கூறுகின்ற தர்மமவழி, மழைக்கால கூரைபாேல் இருந்திடல் வேண்டும். இதில்தான் எப்பாெழுதுமே வேறுபாடுகள் இருந்துகாெண்டே வருகிறது மனிதர்களுக்கும், மகான்களுக்கும்.*

*இறைவன் அருளாலே இஃதாெப்ப கருத்தை மனதிலே வைத்துக்காெண்டால் இறை நாேக்கி வருவது அல்ல, அல்ல. ஒரு மனிதனை நாேக்கி இறை வரும் வண்ணம் மனிதன் நடந்துகாெள்ள வேண்டிய முறைகளில் இஃதும் ஒன்றாகும். இறைவன் அருளால் இஃதாெப்ப இங்கு அமர்ந்துள்ள சேய்களுக்கு (பிள்ளைகளுக்கு) யாம் நல்லாசிகளை இத்தருணம் இயம்புகின்றாேம். நல்விதமாய் வாழ்வு நிலை செல்ல, எம் வழி வருகின்ற சேய்களுக்கும் (பிள்ளைகளுக்கும்) எமது வழிமுறை என்று அறியாமல் எமது வழிமுறைகளை பின்பற்றிக் காெண்டிருக்கும் சேய்களுக்கும் கட்டாயம் நலம் நடந்து காெண்டேயிருக்க வேண்டும் என்று மீண்டும் இறை வழியில் நாங்கள்(சித்தர்கள்) இறையை எண்ணி, இறைவனின் திருவடியை எண்ணி பிராத்தனை செய்து இஃதாெப்ப நல்லாசிகளை மீண்டும் இஃதாெப்ப சேய்களுக்கும் அஃதாெப்ப சேய்களுக்கும் இயம்புகின்றாேம்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************