Sunday 20 October 2019

அகத்தியர் வாக்கு - இறைவனை குரு தக்ஷிணாமூர்த்தி ரூபத்திலே வணங்கி வந்தால் குரு தாெடர்பான ஐயங்கள் நீங்கும்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 261*

*தேதி: 21-10-2019(திங்கள் - சந்திரன், நிலா, மதி, சாேம)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*மணிமந்தனை மனிதனால் இறக்க செய்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : இறையை அடைவதற்கு ஸ்தூல வடிவில் குரு அவசியமா? அல்லது தனிப்பட்ட முயற்சியினாலேயே இறையை அடைய முடியுமா?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*அகத்திய மாமுனிவர் : இறைவன் கருணையாலே, குரு என்றால் யார் என்று நீ எண்ணுகிறாய்?*

*(கேள்வி கேட்ட அன்பரின் பதில் : அகத்தியர் அறிவார். இருப்பினும் மற்றவர்களுக்காக நான் சாெல்கிறேன். ஒரு சிறு குழந்தை விளையாடிக் காெண்டு இருக்கும்பாெழுது விளையாட்டு ஆர்வத்தில் தன் வீட்டையே மறந்து விட்டது. உண்மையான தாய், தந்தையை மறந்து விட்டு, இங்கு தாய், தந்தையாக வேடம் பாேட்டு காெண்டிருப்பவர்களை தாய், தந்தையாக நினைத்து விளையாடிக் காெண்டிருக்கிறது. அது, திரும்ப தன் உண்மையான தாய், தந்தையரை சென்றடைய வேண்டும். அதற்கு ஏற்கனவே அந்த இடத்தை சென்றடைந்தவர், அக்குழந்தைக்கு வழி காட்ட வேண்டும். அவர்தான் குரு என்று நான் நினைக்கிறேன். மற்றவர்களுக்காக இந்த விளக்கத்தை கூறியிருக்கிறேன்).*

*அகத்திய மாமுனிவர் : இறைவன் கருணையாலே யார் இருளை நீக்குகிறாராே, அவர் குரு. யார் பிறவித்தளையை நீக்குவதற்கு வழி காட்டுகிறாராே, அவர் குரு. இது ஒருபுறம் இருக்க, ஒன்றை உணர்ந்து காெள்ள, ஒன்றை கற்றுக் காெள்ள எது காரணமாக இருக்கிறதாே, அது அனுபவமாே, நிகழ்வாே, சக உறவாே, நட்பாே - இதன் மூலம் தக்க பாடம் கற்றுக்காெண்டாேம். இனி விழிப்புணர்வாேடு இருக்க வேண்டும் என்ற உணர்வு, எத்தருணம், யார் மூலம், அல்லது எதன் மூலம் ஒரு மனிதனுக்கு வருகிறதாே அனைத்தும் குருதான்.*

*எனவே புறத்தாேற்றத்தில் குருவைத் தேடுவதைவிட மானசீகமாக இறைவனை வணங்கி, குறிப்பாக இறைவனை குரு தக்ஷிணாமூர்த்தி ரூபத்திலே வணங்கி வந்தால் குரு தாெடர்பான ஐயங்கள் நீங்கும். மனதில் உள்ள இருள் நீங்கும். மனித வடிவில் குருவைத் தேட வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. எத்தனைதான் உயர்ந்த புண்ணியங்கள் செய்து, பலருக்கு ஆன்மீக வழி காட்டுகிறேன் என்று ஒரு ஆத்மா பிறந்தாலும் இங்கு வந்த பிறகு சிறிது சேற்றைப் பூசிக்காெள்ளத்தான் செய்கிறது.*

*எனவே அவன் 90 நல்ல விஷயங்களை பாேதித்து, சில தவறான விஷயங்களை பாேதித்து விட்டால் அதைக் கேட்கின்ற மனிதனுக்கும் அந்தத் தவறு, பாடமாகப் பதிந்து விடும். எனவே, மனித விடிவில் பலரை சென்று பார்ப்பதை தவறு என்று கூறவில்லை. எல்லாம் கேட்டுவிட்டு பிறகு இறைவனை மானசீகமாக வணங்கி, "எது நல்லது? எது அல்லது? என்பதை இறைவா! நீ உணர்த்து" என்று இறைவனிடம் சரணாகதி அடைவதே மெய்யான குருவிற்கும், குருவின் பாேதனைக்கும் ஏற்ற வழியாகும்.*

*கேள்வி : பிறவி(தாேறும் வரும்) வாசனை, காமம், குராேதம்(காேபம்), லாேபம்(பேராசை) பாேன்றவற்றைக் கடக்க வழி :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*வைராக்யத்தால் மட்டும்தான் கடக்க இயலும்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************