Friday, 6 July 2018

மனிதன் எப்படி தேவ கணம் ஆகலாம்?

சிவன்பால் அன்பு கொண்ட மனிதன் எப்படி தேவ கணம் ஆகலாம்?

சிவன் மீது ஒவ்வொரு பிறவியிலும் இயல்பாகவே பற்றுதலுடன் வாழ்பவர்கள் உண்டு;

மகாவிஷ்ணுவை தனது தந்தையாகவே நினைக்கும் உயர்ந்த ஆத்மாக்களும் உண்டு;

மனிதன் தேவ கணம் ஆக வேண்டும் என்றால், தனது வருமானத்தில் ஒரு பகுதியை அன்னதானம்,அண்ணாமலை கிரிவலம்,திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் செல்லுதல்,பாழடைந்த ஆலயத்தைச் சீரமைத்தல்,ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்புதல் போன்ற செயல்களை செய்து வர வேண்டும்;

சில குறிப்பிட்ட ஆலயங்களில் குறிப்பிட்ட நாட்களில் அபிஷேகம்,அன்னதானம் தொடர்ந்து செய்து வர வேண்டும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் கோவிலில் தினமும் சங்கு ஊதினால் தேவ கணம் ஆக முடியும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஒரு வேளையாவது கோவில் பிரசாதத்தை சாப்பிட்டு வந்தாலும் தேவ கணம் ஆக முடியும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் தினமும் நாட்டுப் பசுவை (சிறிதும் புண்ணியம் தராத வெளிநாட்டு ஜெர்ஸிப்பசு அல்ல) குளிக்க வைத்து,பூ வைத்து,பொட்டு வைத்து உணவு கொடுத்து வந்தால் தேவ கணம் ஆக முடியும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் தினமும் ஒரு சிவாலயம் என்றோ அல்லது ஒரே ஒரு சிவாலயத்தில் உழவாரப் பணி செய்து வந்தாலும் சிவ கடாட்சம் உண்டாகும்;

40 ஆண்டுகளாக ஆன்மீக சொற்பொழிவு செய்து வந்தாலும் அல்லது மத மாற்றத்தை தடுத்து நிறுத்தி,நமது பண்பாட்டின் பெருமைகளை பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு புரிய வைத்தாலும் சிவ கணம் ஆகும் தகுதி உண்டாகும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஏதாவது ஒரே ஒரு சிவமந்திரம் ஜபித்து வந்தால் சிவ கணம் ஆக முடியும்;

40 ஆண்டுகளுக்கு குறையாமல் தினமும் ஏதாவது ஒரே ஒரு விஷ்ணு மந்திரம் ஜபித்து/எழுதி வந்தால் விஷ்ணு கணம் ஆக முடியும்;

40 ஆண்டுகளுக்கு குறையாமல் விநாயகர் மந்திரம் ஒன்றை தினமும் ஜபித்து வந்தால் கணபதி கணம் ஆக முடியும்;

40 ஆண்டுகளுக்கு குறையாமல் தினமும் முருக மந்திரம் ஜபித்து வந்தால் முருக கணம் ஆக முடியும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் பைரவரின் வாகனமாகிய நாய்களுக்கு தினமும் உணவு தானம் செய்து வந்தால் பைரவரின் அருளும்,அருளால் அஷ்டமாசித்திகளும் கிட்டும்;பைரவ கணமாகும் யோகம் அல்லது பைரவ உலகத்தில் வாழும் சித்தராகும் தகுதி உண்டாகும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் ஜபித்து வந்தால் சக்தி கணம் ஆகும் தகுதி உண்டாகிவிடும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் தினமும் வராகி மந்திரம் ஒன்றை ஜபித்து வந்தால் வராகி(சம்ஸ்க்ருதத்தில் வாராஹி) கணம் ஆகும் தகுதி உண்டாகிவிடும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் மாதம் ஒரு முறையாவது அண்ணாமலை கிரிவலம் (தினமும் கிரிவலம் செல்பவர்கள் இன்றும் இருக்கின்றார்கள்) சென்றால் அருணாச்சல கணம் ஆகும் தகுதி உண்டாகும்;

இவைகள் தவிர உங்கள் மனதில் உதிக்கும் எந்த ஒரு பக்திரீதியான செயல்களையும் செய்து வந்தால் ஒரு சில பிறவிகளுக்குப் பிறகு தெய்வ நிலையை அடைய முடியும்;

இவைகள் அனைத்தும் அகத்திய மகரிஷியின் கிரந்தங்களில் இருந்து எடுக்கப்பட்டவை;

ஓம் நமசிவாய
சர்வம் சிவார்ப்பணம்🌿