Thursday, 12 July 2018

அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் - அதிசயம்

அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோயில் என்பது சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தில் மூலவராக உள்ள லிங்கத் திருமேனி தீண்டாத் திருமேனியாகவும், நிறம் மாறும் தன்மை கொண்டுள்ளதாகவும் உள்ளது. பரசுராமர் மற்றும் பிரம்மன் ஆகியோர் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு உய்வுபெற்றிருக்கிறார்கள்.

இச்சிவாலயத்தின் மூலவர் பரசுராம லிங்கேஸ்வரர் என்றும், அம்பிகை பர்வதாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். தாயைக் கொன்ற பாவத்தினை நீக்க பரசுராமர் இச்சிவலிங்கத்தினை வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது.

இக்கோயிலின் மூலவர் லிங்கவடிவில் காட்சிதருகிறார். இவருக்கு பரசுராம லிங்கேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இச்சிவலிங்கத்தினை தீண்டாத் திருமேனி லிங்கம் என்றும் அழைக்கின்றனர். இச்சிவலிங்கத்திற்கு அரச்சனை மற்றும் அபிசேகம் செய்ய அர்ச்சகர்கள் லிங்கத்தினைத் தொடுவதில்லை. இச்சிவலிங்கம் பருவகாலத்திற்கு தக்கவாறு நிறம் மாறும் தன்மையுடையது. ஆவணி முதல் மார்கழி மாதம் வரை சிவலிங்கம் கருப்பு நிறமாகவும், பங்குனி முதல் ஆடி மாதம் வரை பொன் நிறமாகவும் காட்சியளிக்கிறது.

இச்சிவாலயத்தில் ஆருத்ரா தரிசனம்,[1] பிரதோசம் போன்ற திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.