Saturday 21 July 2018

பொது நாடி வாக்கு - நிகழ இருக்கும் 27/07/2018 சந்திர கிரகணம் பற்றி

உலோபமுத்ரா தேவி சமேத அகத்திய சித்தர் துணை

முன்னுரை

கோவை மேட்டுப்பாளையத்திற்கும்  - அன்னூருக்கும் இடையில் அமைந்துள்ள பொகளூர் கிராமத்தில் திரு இறைசித்தர் அவர்களால் ஸ்தாபிக்கபிட்ட ஓம் ஸ்ரீ அகத்திய சித்தர் பீடம் அமைந்து உள்ளது. அங்கே, இறை அருளால் அகத்தியரின் சீவ நாடி ஓலை சுவடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கே நிதமும் அகத்தியர் சீவ நாடியில் தோன்றி தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு பல வகையான பரிகார முறைகளை கூறி வாழ்வில் எல்லா வளமும் ஏற்பட வழி காட்டியபடி உள்ளார். அங்கே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பொது வாக்கு பலன்களை அகத்தியர் உரைத்தபடியே உள்ளார்.

அவ்வாறு அகத்தியர் உரைத்த பொது வாக்கு கிழே கொடுக்கப்பட்டு உள்ளது. இன்று உலகில் பல மானிடர்கள் கடவுளை பற்றி பலவாறாக பொது இடங்களில் கூட்டம் போட்டு, சத் சங்கம் நடத்தி, சொற்ப்பொழிவு ஆற்றி, பல கருத்துகளை முன் வைக்கின்றனர். மேலும் பலர், பல புத்தகங்களை அச்சிட்டு, பணம் வாங்கி கொண்டு விற்பனை செய்கின்றனர். ஆனால் கண்டவர் விண்டில்லை, விண்டவர் கண்டில்லை என்பதற்கு ஏற்ப, மானிடர்கள் கூறும் பலவும் பிறவி குருடன் யானையை வர்ணித்தது போல ஆகும்.

கிழே உள்ள அருள் வாக்கு நேரிடையாக இறை உலகத்தில் மகா சக்தியின் கட்டளைக்கேற்ப பணியாற்றிக்கொண்டு இருக்கும் மகா முனி, சித்தர்கள் தலைவர் அகத்திய மாமுனிவர் நேரிடையாக சீவ நாடி மூலம் மக்களுக்கு உரைத்தது. அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே இந்த முன்னுரையை கொடுத்து உள்ளேன்.

அகத்தியர் வாக்கு :

விளம்பி வருடம் ஆடி மாதம் வரும் பவுர்ணமி அன்று முழு சந்திர கிரகணம் 27/07/2018 அன்று நிகழ உள்ளது. அது குறித்து குருமுனி அகத்தியர் அவர்கள் கீழ் கண்டவாறு பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி சுவடி மூலம் அருளுரைத்துள்ளார்.

இந்த நூற்றாண்டில் மிக நீண்ட சந்திர கிரகணம் ஆங்கில மாதம் ஜூலை 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சரியாக 10:58 மணிக்கு நடக்கும்.

அதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் ஜீவ நாடியில் உரைக்கப்பட்டுள்ளது.

குளியல் :

கர்ப்பஸ்த்ரீகளும், மற்றும் அனைத்து நட்சத்திரக்காரர்களும், பௌர்ணமி அன்று இரவிலேயே, வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக, ஒரு கொள்கலனில் (bucket பக்கெட் போல) நீர் நிறைத்து, அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை இட்டு, பின்னர் ஒரு முழு எழுமிச்சம் பழத்தை இட்டு, பின்னர் அதிலேயே இரு தர்ப்பை புல் இட்டு வைத்திருக்க வேண்டும். பின்னர் சனிக்கிழமை காலை எழுந்தவுடன் அந்த நீரில் உள்ள எழுமிச்சை பழத்தை எடுத்து தலையை மூன்று முறை சுற்றி ஓடும் நீரில் அல்லது அருகில் உள்ள தோட்டத்தில் போட்டு விடவும். குப்பையில் போட்டு விட வேண்டாம். பின்னர் அந்த நீரில் உச்சி முதல் பாதம் வரை முழுவதும் நனையுமாறு குளிக்கவும். குறிப்பு - சுடு நீர் எதுவும் சேர்க்க கூடாது, குளிர்ந்த நீரிலேயே குளிக்க வேண்டும். பின்பு அந்த நீர் குளியல் முடிந்த உடனே, சாதாரண குளியலை முடிக்க வேண்டும். குளியல் முடிக்கும் வரை எந்த உணவோ அல்லது நீரோ அருந்த வேண்டாம்.

வழிபாடு :

குளித்து முடித்து அருகில் கஜமுகன் ஆலயம் சென்று அவருக்கு அருகம்புல் சாற்றி கும்பிட்டு வரவும்.

விரதம் :

வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு மேல் எந்த உணவும் அருந்த கூடாது. சரியாக எட்டு மணியிலிருந்து கிரகணத்தின் தாக்கம் ஆரம்பிக்கும்.

விதிகள் :

• இந்த சந்திர கிரகணத்தை யாரும் வெறும் கண்களால் காணக்கூடாது
• இரவில் புலால் உண்ணக்கூடாது
• இரவில் உடல் உறவு வைத்து கொள்ளல் ஆகாது.
• எட்டு மணிக்கு மேல் அமைதியாக உட்கார்ந்துமந்திர உச்சாடனம் செய்ய வேண்டும். அதில், நமசிவாய என்ற ப்ரணய மந்திரம், அல்லது லலிதாம்பிகையின் சமஸ்காரமோ, அல்லது கஜமுகனின் ஸ்துதியோ உச்சாடனம் செய்ய வேண்டும்.

ஜீவ ராசிகளுக்கு உணவிடுதல் :

• கிரகணம் முடிந்த மறு நாள் காலையில் பட்சிகளுக்கு, கம்பு தானியத்தையும் ஊற வைத்த அரிசியையும் உணவாக வைக்க வேண்டும்.
• எறும்புகளுக்கு உடைத்த பச்சை அரிசி, வெண் சர்க்கரை, திணை கலந்து உணவாக அளிக்க வேண்டும்.
• கிரகணம் முடிந்த மறு நாள் சனிக்கிழமை மாலை வேலையில், பைரவருக்கு ஏதாவது ஒரு உணவை அளிக்க வேண்டும்.

இதுவே முழுமையான சாந்தி பரிகாரமாகும். அகத்தியர் கூறி உள்ள பரிகாரங்களை கடைபிடிப்பவர்களுக்கு கிரகணத்தின் பாதிப்பில் இருந்து முழுமையாக விலக்கு கிடைக்கும்.

சாந்தி பரிகராம் செய்யாவிட்டால் நோயின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

சரியான பரிகாரம் செய்யும் பக்தர்களை யாமே துணை நின்று காப்போம் என்று அகத்தியர் அருளுரைத்துள்ளார்.

குறிப்பு - மாத விலக்கு ஆக நேர்ந்தால் சாந்தி முறைப்படி குளிக்கலாம், கோவிலுக்கு செல்ல வேண்டாம். மற்ற பரிகாரங்களை செய்யலாம். அவர்கள் சார்பாக அவர்களின் குடும்பத்தினர் ஆலயம் சென்று அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து வரலாமே.

நல்லது ; நற்பவி
குருவே துணை ; குருவே போற்றி
திருச்சிற்றம்பலம்

இறைசித்தன் செந்தில், 93843 95583
ஓம் ஸ்ரீ அகத்தியர் ஜீவ நாடி, சித்தர்கள் பீடம்
பொகளூர்

நாடி வழி செய்தி அறிவிக்கும் தேதி 21 ஜூலை 2018

தட்டச்சு செய்தவர் - தி. இரா. சந்தானம், கோவை ph: 91760 12104