Friday 8 September 2017

அகண்ட தீபம்

அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
அகண்டம் என்பதற்கு முழுமை, மற்றும் பூரணம் என்பது அர்த்தம். அகண்டத்தில் ஏற்றும் பேரொளி அகண்ட தீபம் எனப்படுகிறது.

விளக்கு ஏற்றி வழிபடும் முறைகள் பல தொண்டுதொட்டே உள்ளன. ஒரு முகம், ஐந்து முகம் என்று பல முகமாக ஏற்றும் திரி உள்ளது.  ஏற்றும் ஜோதி எரியும் திக்கு வரை வேதங்களிலும், பரிகரங்களிலும் கூறப்பட்டுள்ளது. அகல், வெள்ளி, பஞ்சலோகம், பித்தளை, பொன், தேங்காய், பூசணி என்று பல பொருளை ஆதாரமாக கொண்டு விளக்குகள், பல தெய்வங்களுக்கு ஏற்றபடுகிறது.

அதில் சிறந்த மற்றும் உயர்ந்த முறையாக சித்தர்கள் குறிப்பிடும் அகண்ட தீபம் திருவண்ணாமலை, பத்ரிநாத், சபரிமலை போன்ற இடங்களில் சோதி அம்சமாக வணங்க படுகிறது. ஆறு மாதம் மூடியுள்ள பத்ரிநாதர் அகண்ட தீபம் ஏற்றியே மூடுகின்றனர்.

அகண்ட தீபம்  Akhanda deepam

அகண்ட தீபம் ஏற்றி வழிபட முற்படுபவர்கள் முழு மனதாக பரம்பொருளையும், அக்னியையும் வேண்டி தங்களுக்கு காப்பு கட்டி கொண்டு ஏற்ற வேண்டும். அதை போலவே சாந்தி செய்தலும் வேண்டும். சித்தர்கள் கூறும் எல்லா முறைக்கும் புறப்பொருள் மற்றும் அகப்பொருள் ஒன்று உண்டு

ராமதேவர் பூஜவிதியில் .....

ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்கவும் பூசையிது வீண் போகாதே.

ஆதியான விளக்கை அகண்ட பரிபூரணத்தை காண வேண்டும் என்கிறார் ராமதேவர்  . இந்த ஆதியாய் நம் உள்ளே  இருக்கும்  அகண்ட ஒளியே, நம் சிரசில் பழமையான பொருள் என்று திருமூல நாதர் கூறுகிறார். அதே நம்முள் அறிவுக்கு அறிவாக இருந்து வழி நடத்துகிறது. இந்த ஒளியே ஓங்கி  உயர்ந்து அண்ட வழி எங்கும் நிறைந்து பரவி நிற்கிறது என்கிறார் தாயுமான சுவாமிகள்

கண்ணாக்கு மூக்குசெவி ஞானக் கூட்டதுள்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கி னுள்ளே அகண்ட வொளிக்காட்டி
புண்ணாக்கி நம்மை பிழைப்பித்த வாறே

அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்
பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்
அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள்
பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே

ஆங்கென்றும் ஈங்கென்றும் உண்டோ - சச்சி
      தானந்த சோதி அகண்ட வடிவாய்
ஓங்கி நிறைந்தது கண்டால் - பின்னர்
      ஒன்றென் றிரண்டென் றுரைத்திட லாமோ - சங்கர

இவ்வாறு ஏற்றும் அகண்டம்,  அகல் நடுவே சுடர்-சோதியாக நல்ல பிரகாசம் தரவேண்டும். நெய் மற்றும் மண் அகல் பாண்டம் சிறப்பு. சகல தோஷ நிவாரணம் தரவல்லது அகண்ட சோதி வழிபாடு. இந்த வழிபாடு எல்லா இடங்களிலும் நடப்பதில்லை. சித்தர்கள் விரும்பும் தலங்களில் மற்றுமே இந்த சோதி வழிபாடு நடைபெறுகிறது. அகண்ட சோதியை வேண்டி புறதெளிவும் , அகத் தெளிவும், குருமார்கள் அருளும்  பெறுங்கள்

கீழே பிருகுமுனி குருபூசை அகண்ட சோதி பாருங்கள்

No comments:

Post a Comment