Friday 8 September 2017

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம்






ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம்

மதுராந்தகத்திலிருந்து சுமார் 16 கி.மி. தொலைவில் உள்ள கிளியாநகர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது என்று தெரியவருகிறது.மூலவர் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மண்ணால் ஆன லிங்கம்.அகஸ்திய முனிவர் மண்ணைப்பிடித்து லிங்க பிரதிஷ்டை செய்துள்ளார்.அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி.சுவாமியும் அம்பாளும் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர்.அம்பாளும் சுவாமியும் கிழக்கு திசை நோக்கி இருப்பது கல்யாண ஸ்தலமாக போற்றப்படுகிறது.கல்யாணமாகாத ஆண் பெண் இருபாலரும் இங்கு வந்து கோயில் தீர்த்தத்தில் நீராடி வழிபாட்டு வந்தால் தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெறுவதாக ஊர்மக்கள் கூறுகிறார்கள்.சிவராத்திரி கார்த்திகை தீபம் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றனகோயிலில் தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது.கோயில் அர்ச்சகர் திரு முத்துக்குமார் (9751035688)பேருந்து தடம் : மதுராந்தகம் T 14,104 A

No comments:

Post a Comment