Wednesday 20 September 2017

ஒற்றை மலை சித்தர் கோவில்

சித்தர் வாழும் ஒற்றை மலை கோவில் :
புதையல் நிறைந்த அமானுஷ்ய குகை அதை பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கும் சித்தர்

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணா புரம் ஒன்றியத்தில் உள்ள தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஒற்றை மலை.
மலையை குடைந்து உருவாக்கப்பட்ட மர்மமான அந்த பாதாள குகையில் 2 அறைகள் உள்ளன. முதல் அறை சற்று பெரியதாக காணப்படுகிறது. 2-வது அறை சிறியது. இந்த அறையில் தான், படுத்தபடி நுழையும் அளவுக்கு மிகச்சிறிய துவாரம் காணப்படுகிறது. அதனுள் மைதானம் போன்ற இடமும், அதில் அமைக்கப்பட்ட நாலு கால் மண்டபத்தில் தங்கப் புதையலும் இருப்பதாகவும், அந்தப் புதையலை இன்றைக்கும் அந்த சித்தர்தான் பாதுகாத்து வருவதாகவும் இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேல போய், ‘அந்த குகைக்குள் தங்க ஊஞ்சலில் அமர்ந்தபடி சித்தர் ஓய்வெடுத்து வருகிறார்’ என்கிறார்கள்.
இந்த குகைக்குள் கொடிய விஷம் கொண்ட பூச்சிகள் இருப்பதால் அதில் மக்கள் யாரும் நுழைவதில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த குகையில் கொங்கண சித்தர் வாழ்ந்ததாகவும். அவர் அனைத்து பொருட்களையும் தங்கமாக மாற்றும் வித்தையை கற்றவர்’ என்றும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் இருப்பு, சென்பு போன்றவற்றை எல்லாம் மூலிகைகள் கொண்டு தங்கமாக்கினார்கள் என்று நாம் படித்திருப்போம். அதுபோல் கொங்கணர் என்னும் சித்தர் செம்பை தங்கமாக்கி அதை ஒரு குகைக்குள் வைத்திருப்பதாகவும் அந்த குகையை அவரே காவல் காப்பாகாதாவும் கூறப்படுகிறது. வாருங்கள் அந்த அமானுஷ்ய குகை பற்றி விரிவாக பார்ப்போம்.

அந்த குகைக்கு வெளியில் மலை பாறையை குடைந்து அதில் மூலிகைகள் அரைப்பதற்கு ஏதுவாக உரல் போல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அமர்நது தியானம் செய்வதற்காக கல்லில் மேடைபோல் ஒன்று உருவாக்கப்ட்டுள்ளது. மேலும் கொங்கணரில் சிலையும் விநாயகரின் சிலையும் குகைக்கு சற்று தூரத்தில் உள்ளது. இவை எல்லாம் அங்கு கொங்கணர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் என்று மக்கள் கூறுகின்றனர். அங்குள்ள கொங்கர் மற்றும் விநாயகர் சிலைகளுக்கு அந்த ஊர் மக்கள் விசேஷ நாட்களில் பூஜை செய்து வழிபடுகின்றனர்.
. இவையெல்லாம் கொங்கண சித்தர் அங்கு வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகளாகவே அந்தப் பகுதி மக்கள் பார்க்கின்றனர்.

பாதாள குகைக்கு முன்பு 100 அடி தூரத்தில் கொங்கண சித்தரின் சிலை, விநாயகர் சிலை உள்ளிட்ட பல சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. பவுர்ணமி மற்றும் வெள்ளி, சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் தவறாமல் வழிபாடு செய்து வருகின்றனர்
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ளது தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதி. இந்த ஊரில் இருந்து 4 கி.மீ. தள்ளி ஒரு மலை உள்ளது. அதை ஒற்றை மலை என்று அந்த ஊர் மக்கள் அழைக்கிறார்கள். இந்த மலையில் தான் அமானுஷ்ய குகை ஒன்று உள்ளது. இந்த குகைக்குள் பல மர்மங்கள் இன்றும் புதைந்திருப்பதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர்.
அகத்தியர் ஞானம்.

No comments:

Post a Comment