Saturday 9 September 2017

வழிபடும் முறை

வழிபடும் முறை

சிலையோடு சித்திரம் கதையொடு ஆரல்
நிலைவிளக் கதனொடு நேரிய குடும்பம்
வலையென உன்றனை விரித்திடும் மந்திரம்
நிலைபெறக் கூறி தகுவன சாத்தி
வழிபடு போதில் வருவாய் அதனில்
இழிவுற இலங்கை எரித்தவப் போதில்
எழிலுறு வுடைய எம்மிறை நீயே
ஒழித்தனை அன்றோ ஒண்ணை அவுணர்
அந்தப் போதில் ஆர்த்தநல் நெஞ்சம்
இந்தப் போதில் இங்குற வேண்டும்
எந்தப் போதில் எதுவரு மேனும்
நிந்தனை இன்றிநிகழ்ந்திட வேண்டும்
கந்தம் துளசி களப கஸ்தூரி
சொந்தம் சாந்தம் சுந்தரன் தனக்கே
தந்திடு வெண்ணை தகுவடைமாலை
நொந்திடா வண்ணம் வெற்றிலை மாலை
பன்னீர் ஆட்டுக பங்கயன் தனக்கே
நன்னீர் ஆட்டுக நாயகன் தனக்கே
உண்ணீர் என்றே ஊட்டுக பல்கனி
எண்ணீர் இவனே எம்மிறை என்பீர்
மாருதி உண்டேல் சோருதல் இல்லை
ஆறுதல் அவனே அவனே இறைவன்
காரியம் காரணம் ஆனவன் அவனே
கருதிய நிகழ்த்தும் கண்ணனும் அவனே
வேரியங்கமலைச் செல்வியம் போற்றும்
மாருதி தன்னை மனதில் இறுத்துக.

பயன்

வஞ்சனை அகலும் வயிரம் வாய்க்கும்
துஞ்சிடும் போதும் துன்பம் வராது காண்
அஞ்சுவர் பகைவர் அடலே றணையான்
நஞ்சுண்டாலும் நம்முயிர் காப்பான்
மனையின் வஞ்சகம் நீக்குவன், மாற்றுவன்
புணைபோல் பொய்யா கூட்டைக் களவை
தினமும் உன் முன்னரே தெரிகுவன் மாருதி
இனமுடன் வாழ்ந்திடினியன் நல்குவன்
கோளுறு பாபம் தீர்க்கும் அனுமன்
பாழ்பிற விதனையே நீக்கும் அனுமன்
கேளெனவந்து உதவிடும் அனுமன்
வாழ்வுறச் செய்யும் வடிவுடை இறைவன்
நாற்பதோ டைந்து நாளே அவனை
நோற்பவர் பற்பல பெறுவர் இதனை
நூற்பயன் என்ன நுவலும் துளசி
நாற்பயன் பெற்றிட நல்குவன் அனுமன்
அனுமன் எனுமோர் அறமே கவசம்
அனுமன் எனுமோர் அறிவே கவசம்
அனுமன் எனுமோர் அணுநேர்த் தியனே
தினமென் கவசம் திவ்வியம் அருள்வோன்.

நன்றி: ஸ்ரீ வன்னி விநாயகர் புத்தகம் நிலையம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை.

No comments:

Post a Comment