Tuesday 18 September 2018

கர்ம வினை களையும்நவபுலியூர்

கர்ம வினை களையும்நவபுலியூர்

வாழும் இந்த ஜென்மத்தில் அவரவர் செய்த பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்பவே கர்மவினைகள் ஒருவரை தாக்குகின்றன. அந்த கர்மாக்களின் அளவுக்கேற்ப தண்டனை தரும் சக்தி ஒவ்வொரு நவக்கிரக நாயகர்களுக்கும் தனித்தனியே தரப்பட்டு உள்ளது.

 ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் குறிப்பிட்ட காலங்கள் நவக்கிரக நாயகர்களின் ஆட்சியில் இருக்கின்றன. என்னென்ன வினைப் பலன்களை அவர்களால் அழிக்க முடியும் என்ற விதிப்படி இயங்கும் வகையில் நவகிரகங்களின் சக்திகள் வரையுறுத்தப்பட்டு உள்ளன. ஆகவே ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அனுபவிக்க வேண்டிய கர்மவினைப் பலன்களை, தம்முடைய ஆட்சி காலத்தில் அவர்கள் இருக்கும்போது நவகிரக நாயகர்கள் நிறைவேற்றுகிறார்கள். இதனால்தான் கர்மவினைப் பலங்களினால் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பவர்கள் நவகிரக
ஆலயங்களுக்கு சென்று நவகிரகங்களை வழிபட்டு அவர்களுடைய அருளை வேண்டி நிற்கிறார்கள்.

சிவபெருமான் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி மகரிஷிகளை பூமியிலே பிறப்பு எடுக்க வைத்து, தான் சுயம்புவாக அருள்பாலிக்கும் ஒன்பது ஆலயங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில்  *நவபுலியூர் யாத்திரையை* மேற்கொள்ள வைத்து கர்மவினைகளைக் களைய (நவக்கிரகங்களை தாண்டி) அருளியிருக்கிறார். இதைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

முதலில் *சிதம்பரத்தை* சென்றடைந்து முக்கால பூஜைகளை தரிசனம் செய்த பின் சிதம்பரத்தில் இருந்து அடுத்த நாள் காலை கிளம்பி *திருப்பாதிரிப்புலியூர்* சென்று அங்கு ஆலய தரிசனம் செய்தபின் அங்கிருந்து கிளம்பி *எருக்கத்தம்புலியூர்,* *ஓமாம்புலியூர்,* *கானாட்டம்புலியூர்* மற்றும் *சிறுப்புலியூர்* ஆலயங்களின் தரிசனத்தை அன்று இரவுக்குள் முடித்துக் கொள்ளலாம்.

அங்கிருந்து அடுத்தநாள் காலை கிளம்பி *அத்திப்புலியூர்,* *தப்பளாம்புலியூர்* மற்றும் *பெரும்புலியூர்* ஆலயங்களை தரிசனம் செய்த பின் அங்கிருந்து கிளம்பிச் சென்று *திருப்பட்டூர்* மற்றும் *திருவரங்கம்* ஆலயங்களை தரிசனம் செய்ய வேண்டும். பிறகு திருவரங்கத்தில் இருந்து கிளம்பி நேராக வீட்டுக்கு சென்று விட வேண்டும்.

*இடையே வேறு ஆலயத்துக்கு செல்லக் கூடாது.*

இதுவே கர்மவினைகளை கழட்டி எறியும் *நவபுலியூர் யாத்திரை*